தமிழிற்கு திருப்புகழ் - களிதரு

தனதன தாத்தன தனதன தாத்தன தனதன தாத்தன - தந்ததான.

களிதரு ஊற்றென கவினுரு காற்றென கனியனை பாட்டென - வந்ததாயும்

எளியன கூட்டிய எழிலது சேர்த்திட எனதரும் மூச்சுடை -சொந்தமாக

உளியது தாங்கிய உலகது தாண்டிய  உளமது ஆட்சிசெய் - பந்தமாகி

வளியது ஆண்டுபின் வெளியது தேர்ந்திட உளதொரு ஊக்கமும் - தந்ததான

தளிரது போன்றது துளிரது போன்றது இருளினை தீர்ப்பது - முந்ததான.

ஔிர்கிற சீர்தனில் ஒழிபடு தீந்துயர் அழிபடு சோர்வதும் - சந்தமாகி

ஔிதமிழ் யாண்டிலும் ஔிர்விடு யாண்டிலும் ஔிதரு தீஞ்சுடர் - என்றதாயே..

மலரது போன்றவள் மலைமகள் போன்றவள் அலைமகள் ஆண்டவள் - என்றபேரும்

களமது தீர்த்திடும் வகையினில் போர்புரி வடிவினள் நீர்தரு - நற்றதாகி

பவமது ஏந்திய பெருமகள் ஊர்தனை பலரது வாழ்வினை - செய்தவாணி

நமரவள் காந்தகி குமரனை தாங்கிய சமரனை காந்தளை - தங்கப்பாதம்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم