நம் உடல் என்பது பல்வேறு விதமான தனிமங்கள், சத்துக்கள் , நுண்ணுயிரிகள் , வினையூக்கிகள், மற்றும் புரதங்களால் ஆனவை..
அதன் வகையாக பார்க்கப் பே ானால் நம் உடலுக்குள்ளே நித்தம் நித்தம் யுத்தம் மட்டுமே நடக்கிறது..
நமது நே ாய் எதிர்ப்பு மண்டலம் மிக சிறப்பாக யுத்தம் புரிகிறது.. என்றாலும் நம்முள் இருக்கும் எதிரிப்படைகளை அறிவது நல்லது தானே.
புறத்திலிருந்து வரும் கிருமிகள் மட்டுமல்ல நமது எதிரி.. நம் உடலில் ஏற்படும் மாற்றங்களும் அதற்கான காரணிகளும் கூட நம் எதிரி தான். சித்த மருத்துவம் நம் உடலில் பஞ்ச பூத மாற்றங்களால் தான் வியாதிகள் வருவதாக கூறுகிறது...
ஆனால் நமது இந்த கட்டுரை பார்ப்பது. ஆக்சிடன்ட்ஸ் ( oxidants) என்றும் பிராணவாயு ஏற்றிகள்.. இவை பெரும்பாலும் பிராணவாயுவில் (oxygen) இருந்தும் நைட்ரஜன் (nitrogen) வாயுவிலிருந்தும் உருவாகும் .. முன் பிராணவாயுஏற்றிகள் (prooxidants) தான் நம் எதிரிப்படை. பிராணவாயு அழுத்தம் (oxidative stress) பற்றிய செய்திகள். தான் இவை.
இவை நேரடியாக நம் புரதங்கள் , மரபணுக்கள் (டி.என்.ஏ ), கெ ாழுப்பு திசுக்கள் முதலியனவற்றில்.அந்த திசுக்ளை அழிப்பதன் மூலம். தமது தாக்குதலை செய்கின்றன..
இந்த தாக்குதலை தடுக்க நம் உடல் தனது படையாக. எதிர்பிராணவாயு ஏற்றிகளை (anti oxidants) தயார் செய்கிறது.. இவை சில நுண்ணியிரிகளாலும் , தாதுக்களாலும் ,வைட்டமின் ஏ சி ஈ வகைகளாலும் நம் உடலில் உருவாக்கப் படுகின்றன.. இவை நம்மை இந்த ஆக்சிடன்ட் தாக்குதலில் இருந்து தடுத்து குறைத்து காக்கிறது..
இந்த ஆக்சிடன்டுகள். முதுமை , சுவாச கே ாளாறுகள் , கணைய பாதிப்புகள் , நுரையீரல் பிரச்சனைகள், மற்ெளி கிருமிகளின் ஊடுருவல் ஆகிய பாதிப்புகளுக்கு காரணமாக அமையும் . அத்தகு ஆக்சிடன்ட்ஸ் இடமிருந்து நம்மை காக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்களை உயர்த்த வழிசெய்து நலமாக வாழ்வே ாம்..
Post a Comment