அறுமுகன் அன்பில் அப்பனை மறந்தேனாம் .. குறைசொல்ல குமைந்த பா..
முத்தைதரு சந்தத்தில் #ஈசர்_திருப்புகழ் 1
.
சித்தைத்தரு சித்தச் சிவனுறை சக்திப்பரை பக்திக் கடலினில் ஒற்றைக்கரு பற்றுக் கரைதொட - துணையாகும்
முக்கட்பெருஞ் சித்தன் சுருதியின்
முற்பட்டெழு கொற்றத் தலைமகன்
மக்கட்துயர் குற்றங் கடந்தவன் - எனையாள
எட்டுத்திசை யெட்டிப் பரந்தவன்
அட்டத்திருக் காட்டி அசைவளி
பற்றுச்சுடர் பற்றும் வெளிநீரென் -றுளவாகி
நெற்றிப்பிறைச் சுற்றி யரவமும்
வெற்பச்சிகைக் கூட்டில் நதியதும்
வெற்றிப்பறைக் கொட்டும் உடுக்கையும் - விளையாட
விட்டக்குடில்ச் சட்டக் குவளயம்
சுற்றும்படி சுத்தத் நடம்புரி
வட்டப்புவி விட்டுக் கருணையால் - அடிசேர
பிட்டுக்கொரு சட்டிச் சுமந்திட
வட்டுப்படு மட்டில் பிரம்படி
பட்டுத்துயர் பட்டத் திருவடி - தனைக்காண
விட்டுப்படும் பற்றும் பலவினை
மட்டுப்படும் கற்றக் சிலவையும்
விட்டுப்பதம் தொட்டு கரையெற - வரமாகும்
வட்டமதில் நட்டம் புரிந்திட
நட்டவொளி நித்தம் பரவிட
சித்தச்சர பித்தந் தெளிதரும் - பெருமானே..
Nyc one
ReplyDeletePost a Comment