களத்துக்கு காவலிருக்கும்

களத்துக்கு காவலிருக்கும் கண்ணையன் வந்துருக்கேன்
குளத்துக்கு போவோனும் கும்பத்த தாபுள்ள

கும்பத்த தரதில்ல குந்தகம் பண்ணாத
குத்தால காரருக்கு குடிமிக்கு நேந்துருக்கேன்.

அந்தாண்ட தோப்பிருக்கு அஞ்சாறு வீடிருக்கு
இந்தானு நான்தந்தா எல்லாரும் வருவாளே

வெசமத்துக்கு கொறயிருக்கா வெவஸ்தைக்கு அறிவிருக்கா
கொசுவத்துக்கு அலையுறயே கொஞ்சமாச்சும் கொணமிருக்கா.

ஏக்கம்வந்து சேர்ந்துபுட்டா எதுகமோன இருக்குமாடி
தூக்கம்வந்து சோர்வதுக்கா நட்டநெசி இருக்குதாடி..

வாழதண்டு மோசக்காரா வெள்ளரிக்கா வித்தகாரா
ஆழங்கண்டு தேர்ந்துபுட்டா ஆர்வமெல்லாம் போயிரும்யா.

வௌஞ்ச கதிரும் பூமி சாய்வதில்லையா
இளவம் பஞ்சும் தரை தொடுவதில்லையா

விவரந்தான் தெரியலயா விவகாரம் புரியலயா
விளையாட்டு பிள்ளைக்கு வயசாகி போயிருச்சாம்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم