இன்ஷா அல்லாஹ் நெஞ்சோடு
தூதர் நபியும் நம்மோடு.
பூலோகம் பூட்டிக் கொண்ட போதும் - நம்மின்
பேரன்பே உள்ளமெங்கும் தங்கும்.. (2)
அன்புகொண்ட நெஞ்சத்திற்கு அண்டம் சிறுசு - நம்
அன்புகொண்ட நேசம் கூட ஆண்டவன் தான் நமக்கு.
புனித நோன்பு கொள்வதற்கு அர்த்தம் இருக்கு - நம்
ஜீவனுக்குள் உள்ள சைத்தானைத்தான் போக்கும் இந்த கணக்கு
இன்ஷா அல்லாஹ் (1)
அந்த இறையின் அருளில்
வந்த நபியின் வழியில் - நம்
மார்க்கத்துக்கு நல்லதென தந்த நெறியில்.
மனிதர் தம்மில் ஆனந்தம்
மறுமை தன்னில் சுவனம் - அவர்
நெறியின் படிஎல்லாம் வாழ பூமி சுவனம்.
உள்ளம் நூறாயிரம் , ஒன்றாய் சேர்ந்தாடிடும்
நம்மில் துயர்படுவோர் கரம் உயரும் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்.
இன்ஷா அல்லாஹ். (1)
இல்லாத ஏழைக்கு நம் ஈதல் பேரின்பம் - நாம்
எல்லோர் கரமும் ஒன்றாய் சேர்ந்தால் வாழ்க்கை பேரின்பம்
விழி சொட்டும் கண்ணீரை நீக்கும் செயலே பேரின்பம் - நம்
நோன்பு இருக்கும் ரமலான் கருணை இன்னும் பேரின்பம்.
இஸ்லாத் மார்க்கத்துள்ளே ரமலான் மாதத்திலே. ஒன்றாய்
நம் கரம்தான் பிறர்க்குழைக்கும் பேரன்பே ஆனந்தம் ஆனந்தம்..
இன்ஷா அல்லாஹ் (2)
Thanks to : Aysha Ajeez
Bharani mahesh
Mahesh
Srikanth deva, viveka,
Post a Comment