திருவடியேன் பத்து

தில்லையோ னம்பலத்தே கம்பருக்கு அடியேன்
~திருசிற்றம் பலத்தண்ணல் தேசனுக்கு அடியேன்
எல்லையே இல்லையென் றுள்ளனுக்கு அடியேன்
~எந்தையோன் திங்களினை கொண்டனுக்கு அடியேன்.
நெல்லையோ னெம்மையன்    நெஞ்சினுக்கு அடியேன்
~நாரிக்கோர் பாகத்தை நல்கியருக் கடியேன்
நல்லார்தம் நாதன்தன் நம்பிரானுக் கடியேன்
  நட்டமது ஆடுவதில் ஆயனுக்கு ஆளே. 1

அன்பருக் கன்பனருள் ஆதியருக் கடியேன்
~ அண்ணாத வெற்புடையோன் அன்னவர்க்கு அடியேன்
தன்கரத்தில் மானேந்தும் தன்மையருக் கடியேன்
~ தன்னடியர் தானவர்க்கு தானடியர்க் கடியேன்
முன்னவர்க்கு முன்பென மூத்தவருக் கடியேன்
~ முன்வினைகள் தீர்த்தருள் மூர்த்திக்கு மடியேன்
என்மனத்தில் ஏறிநின்ற ஏகருக்கு அடியேன்
~ எம்பரனை உள்நிலைத்த எம்முதல்வர்க் காளே . 2

வெற்பரசி பங்கனவன் வெண்கழற்க் கடியேன்
~ வேயர்பெம் மானுடைய வெண்பதத்துக் கடியேன்
அற்புதங்கள் செய்தவர்க்கு ஆளானார்க் கடியேன்
~ அந்தமதில் ஆடுகின்ற ஆதியர்க்கு அடியேன்
பொற்பதத்தை தந்தவரின் பொன்னடிக்கு அடியேன்
~ பொன்மேனி கொண்டார்க்கு பொழுதெலாம் அடியேன்
சிற்றம்பலச் செல்வராம் சோதியருக் கடியேன்
~ சிந்தைதேன் சிந்திடவே செய்தவருக்கு ஆளே.. 3

ஆலமதை தன்கழுத்தில் வைத்தாருக் கடியேன்
~ ஆகாத தீயதெல்லாம் நீக்கினாருக் கடியேன்
சூலமதை ஏந்தியருள் செய்வாருக் கடியேன்
~ சூக்குமமாய் உள்ளதொரு சோதியனுக் கடியேன்
நீலகண்டம் கொண்டதொரு நேயனுக்கு அடியேன்
~ நீர்நில மாகாய மானதீரர்க் கடியேன்
மேலவரின் மேலான மேனியருக் கடியேன்
~ மாதொரு பங்கனாம் மாயவருக்கு ஆளே. 4

கங்கையை தன்சிகையில் கொண்டாருக் கடியேன்
~ காங்கேயன் தன்தந்தை ஆனவருக் கடியேன்
மங்கையோர் பங்கிலே வைத்தாருக் கடியேன்
~ மண்ணாய மாவெளியும் ஆயினார்க் கடியேன்
அங்கையில் தீயேந்தி ஆடுவார்க் கடியேன்
~ அன்றாடங் காக்கின்ற ஆநிலையர்க் கடியேன்
நங்கையோர் பங்காகி நாகத்தை சூடி
~ நன்நெறியில் செய்கின்ற நாதருக்கு ஆளே.. 5

எறிபத்தர் வேல்நம்பி கூற்றுவர்க் கடியேன்
~ மங்கையர் கரசியார் மூர்த்தியார்க் கடியேன்
விறண்மிண்டர் மெய்ப்பொருள் வாயிலார்க் கடியேன்
~ பூசலார் முனையடுவார் மூர்க்கருக் கடியேன்
சிறப்புலியர் சாக்கியர் சோமாசி மாறர்
~ செருத்துணையர் கண்ணப்பர் ஏனாதி நாதர்
சிறுதொண்டர் குங்கிலியர் திருகுறிப்புத் தொண்டர்
~ திருஞான சம்பந்தர் கணம்புல்லர்க் கடியேன்.  6

காரிக்கும் மூலருக்கும் கழற்சிங்கர்க் கடியேன்
~ காரைக்கால் அம்மைக்கும் குலச்சிறையார்க் கடியேன்
ஏயர்கோன் கலிகாமர் ஆனாயர்க் கடியேன்
~ஐயடிகள் காடவர்கோன் பசுபதிக்கும் அடியேன்
அதிபத்தர் அப்பூதி அமர்நீதிக் கடியேன்
~ அரிவாட்டா யர்க்கும் இடங்கழிக்கு மடியேன்
கலிகம்பர் வாயிலார் மணிவாச கருக்கு
~ கழற்றிற்ற

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post