றெக்கை

இரண்டு நாளா இந்த றெக்க தொல்ல தாங்கல.. எல்லாரும் பரமபிதாவின் தேவதூதர் ரேஞ்சுக்கு செய்றாங்க.. நம்ம மொகரகட்டைக்கு அதெல்லாம் வொர்த் இல்லனு தான மனுச பயலுக்கு றெக்க வெக்காம விட்டான்..

ஆரம்ப காலத்து பைபிள்ல அதாவது கட்டன்பர்க் பைபிள்ல மனுசங்க பறக்க ஆசைபட்டதாவும் அதற்காக குறிப்பிட்ட ஒரு பறவையின் இறகுகளை சேர்த்து அதோட ஒரு விலங்கின் (றெக்கையுள்ள விலங்கு பேர் தெரியல) றெக்கைய வெட்டி    தன்னோட ஆடையோட தைத்து பறக்க முயன்றாங்க ஆனா நம் கைகளின் வலிமை உடலெடை என பல காரணங்களால் பறக்க முடியவில்லை.. இருந்தாலும் காலங்காலமாக பறக்கும் ஆசை அவர்களை விட்டு போகவே இல்லை   ..

அந்த ஆசையின் காரணமாக ஓவியங்களில் தாங்கள் றெக்கையோடு வானில் பறப்பது போன்ற வரைய தொடங்கினர்.. அந்த வரைவின் பிற்கால புனைவே தேவதைகள்  என்கிறது காமன் எரா ஆப் வேல்ட் என்கிற புத்தகம்.

இந்த தேவதைகள் தூதுவராக இருந்தது பற்றி பைபிள் காட்டுகிறது  ..  ஆக காலங்காலமாக மனிதனுக்கு பறப்பதை விட றெக்கை மீது மோகமுள்ளது.. அந்த குப்பீட் கூட றெக்கை வைத்திருப்பது இதனால் தான்..  அதேப்போல யூனிகார்ன் போன்ற விலங்குகளுக்கும் அங்கே றெக்கைகள் புனையப்படுகிறது.  பல கதைகளுள் அது ஒரு மாயாஜாலம் போல இருக்கும்.

இதனை தமிழரோடு ஒப்பிட்டு பார்த்தால் ஒரு வித்யாசமான பார்வை தென்படுகிறது.. அதாவது பறக்கும் ஆசை என்பது தோன்றயதும் இங்கே றெக்கைகளுக்கு போகாமல் பறவைகள் மேல் சவாரி செய்வது போல காட்ட பட்டிருக்கும்.  மாடு குதிரை யானை போல சவாரிகளை பின்பற்றி இருக்கும். அதில் என்ன வென்றால் விலங்குகளுக்கு றெக்கை புனைய பட்டிருக்கும். காமதேனு யானை குதிரை என றெக்கை இருக்கும்..  இதில் மனித இயல்பை உணர்ந்ததை காட்டலாம்.  ஆனால் தொன்மம் என்பது மட்டுமே இதற்கு தடையாக அமைகிறது..

அதைப்போலவே பலரது கனவுகளில் இந்த றெக்கைகள் கொண்ட விலங்குகளும் மனிதர்களும் ஏன் காதலன் காதலிக்கூட இவ்வாறு தோன்றியதாக பல தகவல்கள் சொல்கிறது இதற்கு அடிநாதம் என்பது இந்த ஆசைதான்.  இதன் உளவியல் என்பது நாம் பறக்கும் ஆசை கொள்வது தான் என்பதாக இருந்திருந்தால் இது சரியானது தான் ஆனால் உயரத்தை கண்டு அஞ்சுபவர்க்கும் . பறத்தலை பிடிக்காத மனிதர்களுக்கும் இதே நிலைப்பாடு தான் என்கிற போது . உளவியல் கொஞ்சம் திரும்பி பார்க்கிறது . ஆம் விருப்பம் பறப்பதில் அல்ல றெக்கை கொண்டிருக்கிறோம் என்ற தனித்துவத்திலும் கர்வத்திலும் தான்  . ..

ஆக றெக்கை நம் உளவியலின் ஒரு சார்பு தான் என்பதால்.. றெக்கை வரைந்து கொள்ளுங்கள்.. பறக்கும் முன் கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்..  றெக்கை கிடைக்கப் பெற்றவர்கள்  ஆசிர்வதிக்க பட்டவர்கள்.  ..  கிடைக்கப் பெறாதவர்கள் காதலிகள் இல்லாதவர்கள்..

#ஜிப்சி #வெறும்_கட்டுரை

(இந்த ஜிப்சி என்பது பல்வேறு விசயங்களை ஒன்றாக கலப்பது என்ற பொருளிலான சொல்.. இங்கு என்மீது வந்த றெக்கை என்னும் சொல் தந்த பல எண்ணங்களை குவித்து எழுதுவது தான் வெற்றுக் கட்டுரை .. )

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم