அவன் இவன் படத்துல டைடில்ல ஒரு பாட்டு அவன பத்தி நான் பாடப் போறேன்னு .. அந்த பாட்டுல ஒருவரி மனுச பயலின் ரத்தத்தில் இருப்பது உனகென்ன தெரியும் னு..
சரி அப்படி என்ன இருக்கும்னு படிக்க ஆரம்பிச்சது தான் இந்த கட்டுரை பிறந்தகதை. .
முதல்ல ரத்தம் உறையும் நிகழ்வ பத்தி சொல்லலாம். ஒரு மனிதனுக்கு சிறியதோ பெரியதோ காயம் ஏற்பட்டால் ரத்தம் வடிவது அனைவரும் அறிந்ததே வந்த ரத்தம் தன்னை தானே வெளியேறாமல் தடுத்துக் கொள்ள தன்னை அந்த காயத்தின் மேல் உறைய
செய்துகொள்கிறது..
இந்த உறைதலை clotting (க்ளாடிங்) என்போம். உறையும் செயலை காகுலேஷன் (coagulation) என்கிறோம். இவ்வாறு உறைவதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் ரத்தத்திலேயே இருக்கின்றன அவற்றை பற்றி பார்க்கலாம்..
நம் காயத்தில் வெளியேறும் ரத்தத்தை தடுக்க . 9 துணை காரணிகளும். 5 செயல் பொருட்களும் தேவை. அவற்றில் முதலில் காரணிகளை காண்போம்.
காரணிகள் :
1) ஆன்டிஹிமோபிலிக் - Antihemophilic factor - இது ரத்தத்தை உறையச் செய்யும் புரதங்களில் முக்கியமானது.
2) கிருஸ்துமஸ் - Christmas factor - இது ஒருவகை நுண்பொருள் புரதத்தின் பிணைப்புகளை பிரிக்கிறது 1952 Stephen Christmas என்பவரால் கண்டறியபட்டு அவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
3) ஸ்ராட் - stuart factor - வைட்டமின் k வினை கொண்டு நமது கணையத்தால் உருவாக்கப்படும் நுண்பொருள்.
4) ஹெக்மேன் - Hageman factor- குருதியிலிருக்கும் மஞ்சள் நிற புரத திரவத்தில் (plasma) இருக்கும் நுண்பொருள். 1955 ல் ஜான் ஹெக்மேன் என்பவரால் கண்டறியபட்டது.
5) நார்சத்தை சீர்செய் காரணி - Fibrin Stabilizing Factor- இ்ந்த நுண்பொருள் பெரும்பாலும் செயலற்ற நிலையிலேயே இருக்கும் எனினும் வேதிவினையால் செயலுக்குட்படும் . இதனை1948 kallman lakin; laszlo loarand என்பவர் கண்டறிந்தனர்.
6) ப்ளட்சர் காரணி - Fletcher Factor - 85000 புரத்ததுகள்களை சேர்த்து Prekallikrein என்பதை உருவாக்கும் 1965 Hathaway
7) நார் பிரிக்கும் பொருள் - Fibrin Split Products
8) பிட்ஸ்ஜெரால்ட் காரணி - Fitzgerald Factor - முன்பு ப்ளட்சர் காரணி உருவாக்கிய பொருளை சேர்த்து அதிக துகள் எடைகொண்ட துகள்களாக செய்யும் . high molecular weight kininogen என்பர்
9)வேன் வில்ப்ராண்ட் காரணி - ரத்தம் வடிவதை தடுக்கும் சர்க்கரை புரதம். - Von Willebrand Factor.
பொருட்கள் :
1) பைப்ரினோஜன் - நார்சத்து இது ரத்தத்தில் சர்க்கரை (க்ளுக்கோஸ் கொஞ்சமாக) கலந்த புரதம். இது பொதுவாக முதுகெலும்பு உள்ள உயிரிகளில் சுரக்கிறது. Fibrinogen
2) ப்ரோ த்ரோம்பின் - Prothrombin - புரதத்தின் பிணைப்புகளை பிரித்து சிறுசிறு அமினோ அமிலங்களாக மாற்றுகிறது.
3) த்ரோம்போ ப்ளாஸ்டின் - Thrombo plastin - ப்ளேட்லட் மற்றும் பாஸ்போதுகள்கள் இணைந்த பொருள்..
4) ப்ரோ ஆக்செலெரின் - Proaccelerin - துணை செய்யும் புரதம். இது
5) ப்ரோ கன்வெர்டின் - Pro convertin- ரத்தத்தை உறைய செய்யும் புரதம்.
Post a Comment