இதயம் படபடக்க கார்த்தி ப்ரேக் மறந்து ஆக்ஸிலேட்டரில் அவசரம் காட்ட ஒரு ராட்சத பறவையாய் என்றன் ஸ்கார்பியோ சீறியபடி ஆழியார் தோட்டத்தை அடைய நான் வேகவேகமாய் உள்ளே ஓடினேன். வராண்டா போர்டிகோ ஹால் எல்லாம் அடிகளால் துரத்தி அவளது அறைக்குள் நுழைய விமல் மூலையில் விம்மிக்கொண்டிருந்தான்.. வஜ்ரவேல் தன் அவசிய கடமைகளை செய்துகொண்டிருந்தார்..
என்னை பார்த்ததும் விமல் ஓடிவந்து என்னை பற்றிக்கொண்டு அழுதான்.. வஜ்ரவேல் என்னை பார்த்து என் பதட்டத்தை பார்த்து ஒரு நிமிடம் ஆசுவாசம் தந்தார்..
அந்த கட்டிலில் அமைதியாக தூங்கும் யுவாவை பார்த்த எனக்கு இந்த யுவதி இறந்துவிட்டாள் என்பதில் துளியும் ஒப்புதல் இல்லை.. ஒரு காபி தரும் புத்துணர்வின் ஆழத்திலோ. கடவுளை தேடி உணர்ந்த ஆனந்தத்திலோ. முழுகாமம் எய்திய சிறு இன்பத்தின் உச்சத்திலோ . இருப்பதாய் தான் முகம் சொன்னது..
பவி உனக்கு தெரிஞ்சவங்ககிறதால கூப்டேன் ஆனால் உனக்கு தெரிஞ்சத சொல்லு விசாரிக்க வேண்டியது கடமை..
சரிங்க வஜ்ரவேல் ஆனா அதுக்கு முன்ன ஒரு டிடெக்டீவா கொஞ்சம் நான் பாத்துக்கட்டுமா?.
தாராளமா பவி..
கான்ஸ்டபிள்இதுவரை எதும் கைவைக்கல தானே.. பாடிய யார் முதல்ல பாத்தது.. ?. விமல் நீதான் முதல்ல பாத்தியா.?.
இல்ல பவி விமலுக்கே நாங்க சொல்லிதான் வந்தார்.. வேலைக்காரர் தான் இந்த டைம்ல ஜீஸ் தர வருவார் அவர்தான் பாத்து சொன்னார்... அவர் அதோ அங்க இருக்கார்.
ஒக்கே வஜ்ரவேல் வாங்க வெளிய எல்லாரும். அவுட்.. விமல் சிசிடிவி இருக்கா..?..
மீண்டும் கேட்டிலிருந்து முதல் முறையாக போவது போல் பார்த்து கவனித்து போனேன்...
ஒரு கார்டன் . இடது புறம் ஒரு புல்தரை..வலது புறம் ஒரு வில்லா டைப் ஸ்விம்மிங் பூல் . இப்போ தண்ணியில்ல.. அப்புறம் வீட்டின் முன்பு ஒரு பவுன்டெய்ன். இரண்டு கதவுகளாக திறக்கும் படியான மரக்கதவுகள். கதவுகளில் லட்சுமி செதுக்கப்பட்டிருந்தது.. நுழைந்ததும் ஒரு போர்டிகோ அங்கு மூலையில் 4 ஜோடி செருப்புகள் இருந்தது. மீண்டும் ஒரு கதவு.. அதனுள் ஹால் மிக விசாலமான ஹால் ஒரு ரவுண்ட் டேபிள் கான்பரன்ஸ் நடத்தலாம். அங்கிருந்து இடது புறம் ஒரு படுக்கையறை வலதுபுறம் சமையல் அறை .நேரெதிர் மாடிக்கான படிகள். என ஒரு வசந்த மாளிகைதான்..
இடதுபுற ரூமில் தான் யுவா இருக்கிறாள்.. சமையல் அறையின் நுழைவில் இருந்து பார்த்தால் படுக்கை அறை தெளிவாக தெரிகிறது.. அப்போது ஜூஸ் போடும் போது யுவா அசைந்தாலே அந்த வேலைக்காரனுக்கு தெரியும்.. ஆனால் அவன் ஜூஸ் தர வந்தபோதுதான் பார்த்தேன் என்கிறான்.
வஜ்ரவேல் அந்த வேலைகாரர லெவல் 2 ல விசாரிங்க.. வாசல்ல இருந்த செருப்புல நாலாவது ஜோடி ஒரு லேடீஸ் செருப்பு அது யாரோடதுனு பாருங்க.. விமல் அப்ப எங்க இருந்தான் கேளுங்க. சிசிடிவி ல ஒரு கிளான்ஸ் பாத்துடுங்க..
நீ சொல்றதுக்கு முன்னமே இதெல்லாம் பாத்துட்டேன் பவி. விமல் அவன் புதுசா தொடங்கின மெடிக்கல் சப்ளை ஆபிஸ்ல இருந்துருக்கான் அவன் அங்க இருந்ததுக்கு வீடியோ இருக்கு.. வேலைக்காரன் ஜூஸ் போடும் போது பாத்துருக்கான் அம்மா தூங்குறாங்கனு ஜூஸ் போட்டு எடுத்துட்டு போயிருக்கான். ஆனா அவன் போகும் போதுதான் அவனுக்கும் தெரிஞ்சிருக்கு.. அம்மா என் பொண்ணுமாதிரினு அழுவுறான். டவுட்டா தெரியல.. அதுவுமில்லாம இது மர்டர்ங்கிற மாதிரி இல்ல. நேச்சுரலா தான் நடந்துருக்கு.. கழுத்துலயோ எங்கயும் காயமில்ல. யாரும் வந்தமாதிரி தெரியல சிசிடிவிலயும் ஏதும் பூட்டேஜ் இல்ல.. .. ரிலாக்ஸ் இதுஒரு நேச்சுரல் டெத் தான் இருந்தாலும் ஒரு ப்ரொசிஜர்காக தான் க்ராஸ் எக்சாமைன் பண்ணேன்...
ம் வஜ்ரவேல் அந்த செருப்பு?.
அதயும் கேட்டேன் அது இந்த வீட்டுல இருந்த பழைய வேலக்கார அம்மாவுது. அது வேலைய விட்டு போயி நாலு மாசம் ஆச்சு. அதான் அதோட செருப்பு இங்கயே இருக்கு.. இதயும் வேலக்காரன் தான் சொன்னான்..
ம். வஜ்ரவேல் நீங்க இத ஒரு ரெண்டுநாள் தள்ளிபோட முடியுமா?. பர்ஸ்ட் போஸ்ட் மார்டம்க்கு அனுப்பிருங்க ..
ஏன் பவி உனக்கு எதாவது டவுட் இருக்கா?..
இருக்கு வஜ்ரவேல் ஆனா அதுவும் கான்பிடன்ஸா இல்ல . பட் இத ஒரு மர்டரா தான் நெனைக்குறேன்..
மர்டர்னா எதாவது டவுட் பாயிண்ட் சொல்லு அப்பதான் நான் போஸ்ட் மார்டம்க்கு சஜ்ஜஸ்ட் பண்ண முடியும்..
இருக்கு.. வஜ்ரவேல்.. டெத் நடந்து 2 மணிநேரம் ஆகியிருக்கும். ஆனா பாடியில வியர்வை இருக்கு நார்மலா பாடி சில்லுனு ஆகிடும் ஆனா வியர்வை இருக்கு அதுவே பெரிய பாயிண்ட் தான்..
சரி நான் அனுப்புறேன். ரிப்போர்ட் வந்ததும் சொல்றேன்..
வஜ்ரவேல் விமல கைது பண்ண முடியுமா.?.. அவனுக்கும் பாதுகாப்பு அவசியம்..
இலல பவி நான் விமல கைது பண்ண காரணம் சந்தேகம்னு எழுதனும் அப்புறம் கேஸே் விமல் மேல திரும்ப வாய்ப்பிருக்கு..
ஓ சரி வஜ்ரவேல் நான் கூடவே வெச்சிக்குறேன் வீட்ட லாக் பண்ணிடுங்க.. நாங்க வரோம்..
கார்த்தி தான் வண்டி ஓட்டினான். என் அலுவலகம் வந்ததும் கார்த்தி ஒரு காபி டா.. விமலுக்கும் ..
இல்ல வேண்டாம் பவி என்று மிக வருத்தத்தில் இருந்தான்..
டேய் வருத்தபடாத டா என்னகாரணம்னு பாக்கலாம் ஆனா யுவா இழப்பு உனக்கு பெருசாபாதிச்சிருக்கும் தான் ஆனா இப்போ வருத்தபடாத இதுக்கான காரணம் தெரியனும்.. எனக்கிது நார்மலா தெரியல ஏதோ நடந்திருக்கு.. என்றதும் என்னை சட்டென்று வியப்பாய் நிமிர்ந்து பார்த்தான்.. விமல்..
காபி வந்தது குடிடா.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு இத எப்படியாவது நாம கண்டுபிடிக்கனும
إرسال تعليق