சிசம் - வினையம் 2 - பாகம் 4

ப்ரண்ட்ஸ் நான் டாக்டரெல்லாம் இல்ல.  அடுத்த கேனவர்ல நீங்க மெடிக்கல் விசயங்கள கத்துக்கலாம். இப்போ ஒரு போஸ்ட் மார்டம் ஏன் பண்ணனும்னு சொல்றேன். 

ஒரு பிரச்சனைனா நாம் வழக்கமா ரெண்டு பக்கமும் விசாரிச்சு ஒரு தீர்வுக்கு வருவோம்.. ஆனா ஒரு பக்கம் இறப்புனா விசாரிக்க முடியாது . ஆக ஒரு போஸ்ட் மார்டம்ங்கிறது இறந்தவரே வந்து விளக்கம் சொன்ன மாதிரி தெளிவா இருக்கனும்..

இப்ப இந்த கேஸ்ல . பாத்தீங்கன்னா  எனக்கு தேவையான விசயங்கள் . அல்லது சந்தேகங்கள் பத்தி சொல்லிடுறேன். 

இந்த கேனவர் பேர் யுவா . இவள் நார்மலாதான் இறந்ததா எனக்கு தகவல்கள் வந்தது. விசாரிச்ச வரையிலும் நார்மல் டெத் தான். ஆனா யுவா தனக்கு ஏதாவது நடந்துடும்னு சந்தேகத்துல என்கிட்ட வந்தாங்க. அதனால என்னால இத நார்மல் டெத்னு சொல்லமுடியாது.  அப்ப எனக்கு தெரியவேண்டியது யுவா எதனால இறந்தா அதுக்கான காரணம்..

இயற்கை மரணம் இல்லனா நம்மகிட்ட மூணு ஆப்சன் இருக்கும் கொலை தற்கொலை விபத்து. இதுல யுவா விபத்துல வர வாய்ப்பில்ல.. ஒன்னு தற்கொலை இல்ல கொலை.. தற்கொலைக்கு சில ஆப்சன்தான் பெரும்பாலும் வரும்..

தூக்குல தொங்குறது. கை நரம்ப அறுத்துகிட்டு ரத்தம் இழந்து இறப்பது அடுத்து விசம் குடிப்பது..

இங்கயும் யுவா தூக்குலயும் தொங்கல . உடம்புல எங்கயும் காயமும் இல்ல.. அப்ப ஒன்னு விசம். இல்லனா நோயால இறந்துருக்கனும். அந்த தகவல் தான் வேணும்.  விசமா இருந்தா இறந்த நேரம் வேணும் . எந்த விசம்னு  வேணும் . ஏன்னா விசம் மற்றவர்களால் குடுக்கவும் படலாம் . இந்த விசயங்கள தான் எனக்கு சொல்லும் இந்த பிரேத பரிசோதனை.

இப்ப இந்த கேனவர் முடிந்த வரை விசம்ங்கிற பார்வையில தான் ஆராய போறோம்.

ஏன் நோயால கூட இறந்துருக்கலாமில்ல.. என்றான் ஒரு மாணவன்.

கரக்ட் மத்தவங்கன்னா நோயால இறந்தது தெரியாமஇருக்கும் நாம இங்க அத ஆராயலாம். ஆனா இங்க யுவா கர்பமா இருக்குறதால முடிந்தவரை பெரிய நோய் எல்லாம் செக்கப்ல தெரிஞ்சிருக்கும்... அதனால நோய்ங்கிறதுக்கும் வாய்ப்பில்ல..

விசம் னா அது வயிற்றுல குடல்ல . ரத்தத்துல ஈரல்ல மிச்சம் இருக்கனும்இல்ல கலந்திருக்கனும். இப்ப அந்தசாம்பிள தான் டெஸ்ட் பண்ணபோறோம்..

மகேஷ் அண்ணா ரத்தம்குடல்திசு . யூட்ரஸ் லிக்விட் . புட் சாம்பிள் அப்புறம் ப்ரைன் திசு.. எல்லாம் சாம்பிள் வேணும்..

ம் எடுத்து தரேன். என்றுவிட்டு அவர் எனக்கொரு சாம்பிளும். ஹாஸ்பிடலுக்கு ஒரு சாம்பிளும் கொடுத்தார்.. சரிண்ணா பேக் பண்ணிட்டு பாடிய குடுத்தற்லாம் . இருடா இந்த டாக்டர் ஒரு கையெழுத்து போடனும் வாங்கிட்டு வந்தறேன்.

பேக் பண்ணும் வரை நானும் இருந்தேன். சரி போய் குளித்துவிடலாம் என்றால் யுவாவை உடனடியாய் அடக்கம் செய்வதாய் முடிவு செய்திருந்தனர்.  அதற்காக நான் இருந்தே ஆகவேண்டும்.. யுவாவிற்கு விமலைத்தவிர யாருமில்லை. விமலுக்கும் எங்களை   விட்டால் யாருமில்லை.. நிவே வந்திருந்தால்.. அடக்கம் முடிந்தது. சாஸ்திரங்கள் ஏதுமில்லை...

என்னுள் ஒற்றை ஆதங்கம் கடைசியிலும் என்னை நம்பினாள் . ஆனால் நானோ கைவிரித்து விட்டேன். என்னை விட விமலை மிகவும் நம்பினால் . துரோகி ஏன் இப்படி செய்தான் என்று அவன் சட்டையை பிடித்து கேட்க வேண்டுமென்று ஆத்திரம் வந்தது. 

காரணம் மட்டும் கிடைக்கட்டும் அவனை.. இந்த நாட்டில் மட்டும் தான் பெண்கள் பாவப்பட்ட ஜீவன்கள்.  அவர்கள் சபிக்கப்பட்டுள்ளனர். நிவே மட்டும் தான் இறந்தவளுக்காக கண்ணீர் விட்டவள்.  இந்த கண்ணீர் மட்டுமாவது அவள் வாழ்வின் சோகங்களை கறைக்கட்டும். .

அடிக்கடி கவனித்ததில் விமல் முகத்தில் துக்கத்தின் சுவடுகள் மட்டும் தெரியவே இல்லை..  ஏனென்று தெரியவில்லை . ஒருவேளை யுவா சொன்னது போல் இவனே அந்த துரோகியாக இருப்பானோ?. ஆனால் மோட்டிவ் . மோட்டிவ். அது தான் இன்னும் இவன தொடவிடாம தடுக்குது..

கார்த்தியிடம் பார்சலையும் சீட்டையும் குடுத்து. நீ நிவேவ வீட்டுல விட்டுட்டு பாத்துட்டு வா  நானும் விமலும் ஆபிஸ் போறோம்.. ஆபிஸ்லயே குளித்து விட்டு  அமர்ந்திருந்தேன். விமல் குளிக்க சென்றிருந்தான்.. 

கார்த்தி என்னாச்சு.. ?

பார்சல் அனுப்பிட்டேன் அண்ணா இதென்ன போஸ்ட் மார்டம் ஹைப்போதெர்மியா பத்தி கேட்டுருக்கீங்க..

ஏன்டா? கிடைக்கலயா?.

இல்ல வார்த்தைய பாத்தாலே புரியுமே ஹைப்போதெர்மியா. தெர்மல் ஹைப்பர்.. உஷ்ணம் அதிகரிப்பது ..  பாடில ஹீட் அதிகமானா வியர்க்கும். அமேரிக்காவுல ரெண்டு கேஸ்  ரெக்காட்ர்ட் ஆகிருக்கு. இந்தியாவுல அவ்வளவா இல்ல.. இறந்ததுக்கு அப்புறம் பாடி சில்லுனு ஆகனும் ஆனா சூடாகும். அதான் விசயம் காரணம்னு பெருசா எதுமில்ல..

சரியாதான் இருக்கும் போலடா நம்ம வழக்கப்படி இறந்த உடனே காலையும் வாயையும் கட்டிடுவாங்க ஏன்னா ஆத்மா மறுபடியும் அந்த உடலுக்கு நுழைய பாக்குமாம் அப்ப உடம்பு ரொம்ப சுட ஆரம்பிக்கும்னு ஒரு நம்பிக்கையும் இருக்கு..

சரி இனி என்ன பண்ணப் போறீங்க?.

இரு பாக்கலாம் ரிப்போர்ட் வரட்டும் . எதாவது  காரணம் இருக்குமானு பாக்குறேன் என்ற போது விமல் வெளியே வந்தான்...

சரி கார்த்தி நீயும் விமலும் போய் சாப்பிட்டு வாங்க..

இல்லணா நான் வீட்லயே சாப்புட்டேன் . நீங்க?. 

டேய் போய் சாப்புட்டு வாங்க நான் வேற வேலையா வள்ளிராஜன பாக்கப் போறேன்..

சரிண்ணா தெரியுது..  விமலண்ணா வாங்க போகலாம்...

விமலும் கிளம்பினான்.  எனக்கு மிகவும் வியப்பாய் இருந்தது கட்டியவளை குழியில் இட்டு சில மணிகள் கூட ஆகல கவலயே இல்லாம சாப்புட போறான்..

ஹலோ வஜ்ரவேல் எங்க?  சரி வாங்க எனக்கும் ஒரு வேலை இருக்கு.. விமல் வீட்டுக்கு வரை போகனும்..

வஜ்ரவேலும் நானும் ஆழியார் தோட்டத்தில் நுழைய ஏற்கனவே சீல்க்கு இருந்தது.. பவி இன்னும் ஏன் இந்த கேஸ இழுக்குற?.

இல்ல வஜ்ரவேல் எங்கயோ தப்பு நடந்திருக்கு.. எனக்கு உள்மனசு சொல்லிட்டே இருக்கு.. அதான் அதுவுமில்லாம யுவா சில மிரட்டல்கள் வந்ததா என்கிட்ட சொன்னா..

சரி இப்ப இங்க என்ன தேடுற.?..

என்ன கிடைச்சாலும் சரினு தேடுறேன்.?..

நீ என்ன முடிவுலதான் இருக்குற இத கொலைனு நினைக்கிறீயா?..

நிச்சயமா சொல்லமுடியல வஜ்ரவேல் அத சொல்ல  ஏதாவது கிடைக்குதானு பாக்குறேன்.. இப்படி பேசியபடியே தேடினேன்..

பவி என்னதான் விசயம் என்கிட்ட சொல்லு நான் உனக்கு நம்பிக்கையா இருப்பேன். மறைக்கிறதால டைம் தான் வேஸ்டாகும்..

ம். அதுவும் சரி தான் வஜ்ரவேல்.. யுவா சாவு கொலையா இருக்கும்னு நினைக்குறேன் . நான் விமல கவனிச்சுட்டே இருக்கேன் அவன் அந்த இறப்ப இழப்ப ஒரு பொருட்டாவே மதிக்கல . எனக்கு இதுவே பெரிய சந்தேகம் மனைவிக்கா இல்லைனாலும் தன் குழந்தைங்கிற துக்கம் கூடவா இருக்காது?. அதுவுமில்லாம யுவாவுக்கு விமல் மொபைல்ல இருந்து மிரட்டல்கள் வந்துருக்கு பணம் கேட்டு வந்துருக்கு  அது சம்பந்தமா யுவா என்கிட்ட பல விசயம் சொன்னா! நான் இருக்கும் போதே அந்த கால் வந்தது சேம் விமல் குரல் தான்..

ஓ இதான் விசயமா ? அதுக்குத்தான் விமல் காலையில அந்த டாக்டர்கிட்ட பேசுனானா?..

என்ன சொன்னீங்க?

விமல் காலையில போஸ்ட் மார்டம் பன்ற டாக்டர்கிட்ட ஏதோ பேசுனான். என்னனு தெரியல .

அதான் டாக்டர் போஸ்ட் மார்டம் பண்ணவே வரலயா?.

என்ன வரலயா.?.. சரி பவி உனக்கென்ன ஆச்சு. .?.

ஏன் வஜ்ரவேல்?

விமல் மேல டவுட்ங்கிற . விமல்தான் யுவாக்கு போன் பண்ணான்ற அப்புறம் என்ன டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ் ல சொல்லி கால் ரெக்கார்டும் ரெக்காரட்டிங்க்ஸும் பாத்துடலாம்.. அதவெச்சே அவன விசாரிக்கலாமே எதுக்கு இவ்வளவு குழப்பிக்கிற?.

அடடா ஆமா அந்த ரெக்கார்ட்ஸ கலெக்ட் பண்ணுங்க.. எனக்கு இது தோணவேயில்ல .

சரி அப்ப இன்னும் என்ன தேடுற. ?.

இல்ல வஜ்ரவேல் இந்த கேஸ்ல யுவா சாவுக்கு எதாவது காரணம் இருக்கனும் அத இங்க எதாவது தடயம் விட்டுருக்கனும்..

அப்படி என்ன தேடுறனு சொல்லு நானும் தேடுறேன்..

ம்.. ம்.... ம் சரி. பேங்க் பாஸ்புக். மெடிக்கல் டாக்குமெண்ட் ஸ்டோர்ஸ் பில். மாத்திரை. அவள் சம்பந்தபட்ட எதாவது பொருள்.. அதுபோக சிசிடிவி பூட்டேஜ்.எல்லாம்..

ஆனா சிசிடிவில எந்த பூட்டேஜும் இல்லயே..

என்ன பூட்டேஜ் இல்லயா . ? எப்படி அப்புறம் எதுக்கு சிசிடிவி.. என்ன ஆச்சுனு பாருங்க. .

சரி பாக்குறேன்..


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم