சிசம் - வினையம் 2 - பாகம் 5

ஹலோ ஹரி இங்க சிசிடிவி. விஷுவல் வருது ஆனா ரெக்கார்டிங்கல எதுவும் இல்ல . எப்படி பாக்குறதுடா.. என்றேன்.

மாமஸ் அதோட யூனிட் பாக்ஸ்ல ஸ்க்ரூஸ் கழட்டிருக்கா பாரு. ..

தெரியல டா ஆனா அந்த ஸ்க்ரூ மேல ஒட்டுற லேபிள கட்பட்டிருக்காங்க..

ஓ ப்ரோண்ட் நேம் என்ன? மாம்ஸ்.

ஜெப்ரானிக்ஸ் டா..

ஓ , நீ என்ன பண்ணு பாக்ஸ பிரி அதுல ஹார்டிஸ்க் லைன் கழட்டிருக்கனும் இல்ல லூஸ் கனக்சென்ல இருக்கும்.. நல்லா மாட்டி  பாரு லோட் வருதான்னு..

சரிடா நான் பாத்துட்டு கூப்புடுறேன் என்று கட் செய்துவிட்டு..

ஸ்க்ரூஸ் கழட்ட வஜ்ரவேல் இங்க வாங்களேன்..

சொல்லு பவி. நான் க்ளிப்ல புடிக்கிறேன் மானிட்டர்ல ஹார்ட்டிஸ்க் (வன்தகடு) திறக்குதா பாருங்க.

ம் சரி பவி புடி..

வந்ததா?

இல்ல பவி ஹார்ட் டிஸ்க்  ஓபன் ஆகிருக்கு  ஆனா வீடியோஸ் எதும் இல்ல..

சரி வஜ்ரவேல் என் போன்ல இப்ப கடைசியா ஒரு போன் பண்ணேன் அந்த நம்பருக்கு கால் பண்ணி ஸ்பீக்கர்ல போடுங்க..

சொல்லு மாம்ஸ்..

டேய் சொன்னதெல்லாம் பண்ணிட்டேன் ஆனா வீடியோ எதுவுமே இல்லடா ..

யோவ் மாம்ஸ் அறிவிருக்கா அங்கதான் ஹார்ட் டிஸ்கே கனெக்ட் ஆகலயே அப்புறம் எப்படி வீடியோ சேவாகும்.. ? . 

டேய் இப்ப என்ன பண்றது ? 

அந்த பாக்ஸ்ல பச்சைகலர்ல 1 இன்ச்ல சதுரமா ஐசி இருக்கா  பாரு. ?.

இருக்குடா.

அப்ப சரி பாக்ஸ எடுத்துட்டு வா ஹேக் பண்ணனும். .

சரிடா..

வஜ்ரவேல் இத எடுத்துக்கலாம் வேற எதாவது கிடைச்சதா?.

நிறைய கிடைச்சுருக்கு பவி . யுவாவோட ரீசன்ட் மெடிக்கல் ரிப்போர்ட் . அவளோட கப்போர்ட்ல ஒரு பென்டிரைவ். அதுக்கூட விமல் போட்டோஸ் கொஞ்சம் . வீமேக்ஸ் ப்ளேயர் ஒன்னு அதுல கொஞ்சம் ரத்தக்கறை இருந்துக்கு.. அப்புறம் கொஞ்சம் மெடிசன்ஸ் எடுத்துருக்கேன். அதுபோக யுவாவோட பர்சனல் ஹேண்ட் பேக்.

சூப்பர் அப்ப நாம கிளம்பலாம்..

அடுத்தது என்ன பவி.. ?

அந்த வேலைக்காரன் அப்புறம். அந்த லேடிஸ் செருப்ப விட்டுட்டு போன வேலைக்காரி.. ரெண்டு பேரயும் விசாரிக்கனும்..

இன்னும் நீ இத கொலையாதான் நம்புறியா.?.

வஜ்ரவேல் இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை வரல சிசிடிவி ஹார்ட் டிஸ்க் க்ளிப்ப ஏன் கழட்டனும் .

ரெக்கார்ட் ஆகக்கூடாதுனு ..

ரெக்கார்ட் ஆகக்கூடானு இந்த வீட்டுல ரெண்டு பேரும் நெனைச்சா ஏன்்சிசிடிவி வெக்கனும். அப்ப யாரு கழட்டிருப்பா?.

இது கொஞ்சம் சீரியஸ் ஆகுற மாதிரி இருக்கு பவி.. சொல்லு யார்யார விசாரிக்கனும்.  ரெண்டு வேலைக்காரங்க. அந்த கால் ரெக்கார்ட் . இதெல்லாம் வேணும் ..

சரியென கிளம்பினோம். வாட்டர் மின்ட் வாங்கி குடித்து விட்டு டீ குடித்தோம். . நன்றாக தலைவலிக்கும் இதற்கு.  ஆனால் அதைவிட பெரிய தலைவலி வந்தது எங்களுக்கு. .

சரி பவி காலைல பாக்கலாம் என்று கிளம்பினார் வஜ்ரவேல்..

எனது அலுவலகத்தில் விமல் இருந்தான் கார்த்தியும் இருந்தான் நிவே அம்மா வீட்டிற்கு போனதாக சொன்னான் . சரி டிபன் வாங்கிட்டு வரியா? ..

இல்லணா நானே சமைக்குறேன்..

கார்த்தி ஏற்கனவே தலைவலிடா நீ டிபன் வாங்கிட்டு வந்துரு.  சாப்பிட்டு தூங்கனும் போல இருக்கு.  இந்த இந்த பார்சல ஹரிஷ்கிட்ட குடுத்துடு வஜ்ரவேல் குடுத்தாருனு சொல்லு..

டிபன் வந்தது சாப்பிட்டு தூங்கிப் போய்விட விமலும் கார்த்தியும் ஏதோ கதை பேசிக்கொண்டிருக்க. தூக்கம் கலைந்தவன் விமல் பேச்சையும் முக உணர்ச்சிகளையும் பார்த்திருந்தேன். சிறிது  நேரம் கழித்து . ..

டேய் விமல் ஏன் யுவாவ கொன்ன? ..

ஹே பவி நான் ஏன் கொல்லனும்?. அவ என் மனைவி டா..

விமல் கேஸ் எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டேன். இப்ப உண்மைய சொல்லு யுவாவ கொன்ன..

டேய்நான் கொல்லலடா . உனக்கே தெரியும் எனக்கு அவளும் அவளுக்கு என்னையும் தவிர யாரும் இல்ல அப்படி இருக்க ஏன் கொல்லனும்?.

சரி அந்த பார்மஸிக்கு டென்டர் எவ்வளவு கோட் பண்ண?.

அத ஏன் கேட்குற 19 லட்சம்..

அந்த பணம் உனக்கு எப்படி வந்தது ?.

நான் யுவா கிட்டதான் வாங்குனேன்.

எப்ப எப்படி வாங்குன.?.

கேட்டேன்  எடுத்துக் கொடுத்தா.. அவளுக்கே தெரியும். பிறக்குற கொழந்தை பேரதான் கடைக்கு வெக்கனும்னு சொன்னா..

எப்படி கேட்ட மிரட்டிதான?

டேய் மிரட்ட வேண்டிய அவசியமே இல்ல டென்டர் எடுக்கும் போதே யுவா கூட இருந்தா அவகிட்ட சம்மதம் கேட்டுதான் 19 லட்சத்துக்கு ஒத்துக்கிட்டேன்   ..

சரி விமல் நீ ஒரு நாளைக்கு யுவாவுக்கு எத்தனை கால் பண்ணுவ?.

3-4 இருக்கும் ஏன்டா.

உன் ரெண்டாவது சிம்ல இருந்து ?.

அதுல இதுவரைக்குமே 5 முறைதான் கால் பண்ணிருக்கேன்..

பொய்.. மொத்தம் 264 முறை பேசிருக்கு ஒரு நாளை சராசரியா எட்டு. அதுவும் யுவாவ பணம் கேட்டு மிரட்டிருக்க..

ஏய் நான் ஏன் மிரட்டனும்.?.

அது எனக்கு தேவையில்லாதது நீ மிரட்டியிருக்க 27 லட்சம் கேட்டுருக்க.. அவ  தர மறுத்துருக்கா அதனால அவள கொன்னுட்ட..

டேய் லூசுத்தனமா பேசாத 27 என்ன 70 லட்சம் வரை நானே எடுக்க முடியும் அவள் முழு சொத்தும் என்கிட்ட தான் இருந்தது..  அவள கேட்டோ கேட்காமலோ எடுக்க எனக்கு அனுமதி இருந்தது. . 

சரி இதெல்லாம் உன்கிட்டயே இருக்கும் போது ஏன் யுவாவ கொன்ன. ?.

டேய் நான் தான் கொல்லலங்கிறேன்ல நான் அவளுக்கு எவ்வளவு க்ளோஸ்னு தெரியுமில்ல. 

இங்க பாரு உன் மொபைல்ல இருந்து நீ பேசுன ரெக்கார்ட். மிரட்டுன ஆடியோ எல்லாம் கொண்டு போய் கோர்ட்ல குடுத்தா நீ தான் கொலையாளினு தீர்ப்பு வரும். ஒழுங்கா சொல்லு ஏன் கொன்ன..

டேய் நான் கொல்லலடா நான் கொல்லவும் எந்த காரணமும் இல்லடா. அந்த போன்கால் பத்தி எனக்கு எதுவும் தெரியாது..

விமல் நீ பொய் சொல்றதால நொடிக்கு கூட பயனில்ல உண்மைய சொல்லு.

டேய் நான் கொல்லலடா எவனாவது இவ்வளவு சப்பையா ஐடியா பண்ணுவானா. நான் ப்ளானே பண்ண தேவையில்லடா.. பணம் எனக்கு குடுக்குறா. குழந்தை பிறக்கப்போகுது கேட்ட மாதிரி டென்டர் எடுத்துருக்கோம் இதவிட என்னடா வேணும் எதுக்கு கொல்லனும்..

அப்புறம் ஏன் சிசிடிவி ல ஹார்ட் டிஸ்க கழட்டி வெச்ச.?.

டேய் அதுவும் எனக்கு தெரியாதுடா.

நீ மிரட்டுனதா என்கிட்ட யுவா வந்து சொன்னா. அதுக்கென்ன சொல்ற.

எதுவுமே தெரியலடா . நான் கொல்லலடா. 

அப்புறம் ஏன் போஸ்ட் மார்டம் பண்ற டாக்டர்கிட்ட ரகசியமா பேசப்போன?.

நான் பேசப்போலடா கேட்கப் போனேன் அந்த குழந்தைய எப்படியாவது காப்பத்த முடியுமானு கேட்டுப் பார்த்தேன்.

அதவிடு இந்த போன்காலுக்கு என்ன சொல்ற. யுவா கர்பமா இருக்குறத உன்கிட்ட சொன்னப்ப நீ சந்தோசப்படலனு சொன்னா.

டேய் அவ கர்பமா இருக்குறான்னு எனக்கு ஏற்கனவே தெரியும் அதனால என்னால எந்த ரியாக்டும் பண்ண முடியல..

அப்ப நீ யுவாவ கொல்லல .

டேய் நான் கொல்லலடா அவஇறந்ததே எனக்கு அதிர்ச்சி இதுல நானே கொன்னேன்னா என்னால தாங்க முடியல என்று அழுதே விட்டான்.

அப்ப யாரு கொன்னுருப்பா?..

அண்ணா நெசமாவே கொலை தானா?..என்றான் கார்த்தி..

அப்படித்தான் கன்க்லூட் ஆகுது கார்த்தி.. எதுக்கும் நீ ஹரிஷ்க்கு போன் பண்ணு அந்த பார்சல் என்ன ஆச்சுனு கேளு..

மாம்ஸ் என்ன மர்டர் கேஸ் போலதே.. ?

டேய் எப்படி சொல்ற?.

அதான் வீடியோல ஒன்னுமே இல்லயே!.

அப்புறம் எப்படிடா கொலைனு சொல்ற..

மாம்ஸ் கேக்குறது நீ வீடு ஆழியார் தோட்டம் ரீசன்டா ஒரு டெத் நடந்துருக்கு. வீடியோ கட் ஆகிருக்கு . இதெல்லாம் பாத்தா மர்டரா இருக்காதா?.

உனக்கே தோணுதாடா.?. ஐஸ்க்ரீம் டப்பாவே வை போன..

கார்த்தி இப்ப என்ன சொல்ற?

மர்டரா இருக்கலாம் அண்ணா..

கார்த்தி நல்ல காப்பி கொஞ்சம் இன்டர்நெட். . அப்படியே அந்த பாக்ஸ எடுத்துத்தா..

நல்லவேள அண்ணா நான் இருக்கவும் ஆச்சு இல்லனா காபிக்கு என்னபண்ணுவீங்க என்னபடி பாக்ஸ கொடுத்தான் கார்த்தி..

இல்லனா விமல போட சொல்லிருப்பேன் இல்ல நானே போட்டுக்குவேன்..

பாக்ஸை பிரித்து பைலை எடுத்து பார்த்தேன்..அதில் யுவாவின் ரிப்போர்டில்  கெரட்டினைன் (creatinine) சராசரியை விட ரொம்ப அதிகமாக இருந்தது. அடுத்த மாதத்தில் இன்னும் அதிகமாக இருந்தது.

கார்த்தி இந்த கெரட்டினைன் எதுக்குடா?.

அழுது ஓய்ந்த விமல் அது ஒரு கழிவு மாதிரி பவி குறிப்பிட்ட அளவுக்கு மேல இருக்கக் கூடாது. அந்த கழிவதான் கிட்னி சுத்தப்படுத்தனும். ரத்தத்துல இந்த கெரட்டினைன் இருக்கும் அதுதான் தசைகள் உடையறதால வர கழிவு.

ஓ. ஒருவேள ப்ளட்ல இது அதிகமா இருந்தா என்ன ஆகும்?.

கிட்னி சரியா வேலை செய்யலனு அர்த்தம் பவி..

அப்ப இது உனக்கு தெரியும் தெரிஞ்சும் நீ யுவாவ கண்டுக்கல அப்படித்தான?.

என்னது யுவாக்கு கெரட்டினைன் இருந்துதா?. என்று அதிர்ச்சியாக கேட்டான் விமல்.

டேய் ரெண்டு மாச ரிப்போர்ட பாரு.. என்று அவனிடம் நீட்ட..

டேய் இந்த ரிப்போர்ட் நாங்க எடுக்கவே இல்ல நாங்க இந்த டாக்டர்ட்ட கன்சல்ட் பண்ணும் போது அவளுக்கு எந்த கம்ப்ளைண்டும் இல்ல . நானே ரிப்போர்ட்ட வாங்கி பாத்தேன்.  அதுல எந்த ரைஸுமே கிடையாது. 

விமல் என்ன சொல்ற நல்லா ஞாபக படுத்தி சொல்லு.?.

சத்தியமா எனக்கு தெரியும் நானும் மெடிக்கல் பீல்ட்தான எனக்கு இது தெரியாதா?. இந்த ரிப்போர்ட்ல இல்லவே இல்ல.

கார்த்தி எங்கடா காபி?

வந்துட்டேன் வந்துட்டேன்.   காபி வந்தது.

விமல் இந்த மாத்திரை எல்லாம் எதுஎதுக்கு னு எழுதிக்குடு. 

பார்த்தவன்.
டைலின் - காய்ச்சலுக்கு  தடுப்பூசி போடும் போது காய்ச்சல் வந்தா தரது.
அமிமைட் - இது அமினோ ஆசிட் மாத்திரை வளர்ச்சிக்குத் தரேன்.
சிட்ரஜன் - அது தூக்கத்துக்கு
பீடாவெர்ட் - இது பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களுக்கு
சோனோ - இது காம்பினேஷன்ல பாத்தா குழந்தை வளர்ச்சிக்கு..

பாதி காபியில் நிறுத்தி. லாஸ்டா என்ன சொன்ன?

சோனோ ஏன் பவி.

இல்ல இதுவரைக்கும் பேர்லயே சொன்னவன் இதுக்கு மட்டும் ஏன் காம்பினேஷன் பாத்த?.

பேர்ல மீனிங் இல்ல அதான்..

கார்த்தி சோனோ மாத்திரைய பத்தி நெட்ல தேடு..

விமல் எனக்கு என்னமோ இதுல டவுட்டா இருக்கு . மெடிக்கல் டெர்ம்லயே இல்ல..

அண்ணா அப்படி ஒரு மாத்திரைய பத்தி எந்த டீடைலும் இல்லணா.

விமல் இதுல எத்தன மாத்திரை மிஸ்ஸிங்? 

மூணு ஸ்டிரிப் இருக்கு ஆறு மாத்திரை சாப்பிட்டுருக்கு இன்னும் 24 இருக்கு பவி

கார்த்தி இந்த காம்பினேஷன்ல என்னனு தேடு..

தேடியவன். அண்ணா கர்ப காலத்துல குழந்தை வளர்ச்சிக்கு உதவுறது.

கார்த்தி கேஸ் வேற மாதிரி மாறுது இது 100% மர்டர் தான் . விடிஞ்சதும் விமல் வீட்டு வேலைக்காரங்க ரெண்டு பேரயும் விசாரிக்கனும்... வஜ்ரவேல்கிட்ட மறுபடியும் வீட்டுக்கு போகனும்.

அண்ணா அண்ணா பொறுமை விடிஞ்சிருச்சு.. சரி நீயும் விமலும் இங்கயே இருங்க நான் வஜ்ரவேல் கூட போய்டு வரேன். 

நானும் வஜ்ரவேலும் முதலில். வீட்டு வேலைக்காரனை விசாரித்தோம்.

விமலுக்கும் யுவாவுக்கும் எதாவது சண்டை வந்துருக்கா?.

இல்லங்க தம்பி நல்ல சந்தோசமா தான் இருந்தாங்க

சரி மாத்திரைகள யாரு கொண்டு போய் தரது? .

அந்த பொண்ணு ஒன்னு இருந்ததுங்க அதுதான் குடுக்கும் வேளா வேளைக்கு எல்லாமே செஞ்சி தரும். இப்ப ரெண்டு வாரமாதான் வரதில்ல என்னனு தெரியல..

அவங்க வீடு  எங்கயிருக்கு தெரியுமா?.

தெரியுமுங்க தம்பி  நானே கூட்டிப் போறேன் வாங்க..

நாங்கள் போனபோது வீடு சாத்தி இருந்தது. பக்கத்து வீட்டு பெண் ஒருவள் ஏம்பா அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க.

அவங்க அம்மா வீடு எங்க இருக்கு?

சாந்தலட்சுமி நகர்ல இருக்குப்பா மத்தபடி எதும் தெரியாது..

சரிங்க என்று நானும் வஜ்ரவேலும் மட்டும் சாந்தலட்சுமி நகர் போனோம்  ஆறு தெருக்களில் சுற்றி ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்தோம்.

அங்கு சென்று கேட்ட போது தான் தெரிந்தது அந்த பெண்ணும் ஒரு தினங்களுக்கு முன் இறந்து போனாள் என்று.. எங்கள் வருத்தத்தை தெரிவித்து வந்த விசயத்தை சொன்னோம்

அவங்களும் எங்களுக்கு விவரத்த சொன்னாங்க யுவா தங்கமான பொண்ணு தம்பி . என் பொண்ணு அடிக்கடி அவள பத்தியே தான் பேசிட்டு இருப்பா. ரெண்டு பேருமே கர்பமா இருந்தாங்க . அந்த பொண்ணு எது செஞ்சாலும் இவளுக்கும் சேர்த்துதான் வாங்கும்.. இப்ப சாவும் ரெண்டு பேருக்கும் ஒட்டுக்காவா வரணும்...என்று அழுதார்கள்..

அம்மா யுவா எல்லாம் வாங்கி தந்தானு சொல்றீங்க மாத்திரைங்க எதாவது? ..

ஆமா தம்பி இன்னும் கூட இருக்கு..

அத தர முடியுமா?.

பொண்ணே போய்டா மாத்திரைய வெச்சு என்னப்பா பண்ணப்போறேன் தரேன்..

அவர்கள் கொடுத்த மாத்திரைகளிலும் சோனோ மாத்திரைகள்..

ஹலோ கார்த்தி  அன்னிக்கி பார்சல் அனுப்புனல்ல . அந்த அட்ரஸ்க்கு இந்த சோனோ மாத்திரைய அனுப்பு..

வஜ்ரவேல் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் என்னாச்சு?

ஒன்னும் பெருசா இல்ல பவி .எல்லாம் வழக்கமா தான் எழுதிருக்கு சட்டன் செஸ்ட் பெயின் என்ட் ஹார்ட் ப்ளட் வெசல்ஸ் அரஸ்ட். னு ஹார்ட் அட்டாக் தான் எழுதி வெச்சிருக்காங்க.  

வஜ்ரவேல் ரெண்டு மரணம் நடந்துருக்கு விடக்கூடாது..


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم