நான் மீண்டும் என் ஆபிஸ்க்குள் நுழைந்தேன் . விமலும் கார்த்தியும் இருந்தனர்.
அண்ணா சாப்பாடு வாங்கிட்டு வரவா எனக் கேட்டான் கார்த்தி.
இல்லடா வஜ்ரவேல் கூடவே சாப்டேன். நீங்க சாப்டாச்சா? .
ஓ சாப்டமே வள்ளி மெஸ்ல.
விமல் இப்பவாவது உண்மைய சொல்லு நீ யுவாவுக்கு போன் பண்ணல?.
டேய் நான் பண்ணவே இல்லடா.
அப்ப உன் போன்ல யுவாவுக்கு கால் ரெஜிஸ்ட்ரி டைல் ஆகிருக்கு அப்புறம் ஏன் அத கவனிக்கல...
ஏதோ காரணம்டா அப்ப இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிக்கவே இல்ல..
ம்.. ஹலோ ஹரிஷ் என் போன்ல என் பர்மிசன் இல்லாம ஒருத்தருக்கு வேற ஒருத்தர் கால் பண்ண முடியுமா?
முடியும் மாம்ஸ் போன ஹேக் பண்ணிருந்தா என் எடத்துல இருந்து நானே செய்ய முடியும்.
ஆனா என் வாய்ஸ்லயே பேச முடியுமா?.
இதெல்லாம் சப்ப மேட்டர் மாம்ஸ் உன் போனோட பழய கால் ரெக்கார்ட எடுத்து அதுல உன் வாய்ஸ ரீட் பண்ணி டோன் சேஞ்சர்ல பண்ணமுடியும்.
சரி வை நான் கூப்புடுறேன்..
விமல் இப்படி டெக்னிக்கலா இத யார் செய்வா என்ன மோடிவ் இருக்கும். ?.
பவி ஒன்னு சொல்லவா?.
சொல்லு விமல்.
இல்ல முன்ன மைதி கேஸ்ல ஒரு ஓலசுவடி பாத்தோம்ல அதுல கூட அவங்க மாமா தப்பிக்கிறதாவும். யுவாவ கொல்லப் போறதாவும் இருந்ததே. ஒருவேள...
கேட்டுட்டேன் விமல் அவங்க மாமா இன்னும் ஜெயில்ல தான் இருக்கார்.. ..
பேசிக்கொண்டிருக்கும் போதே கார்த்தி ஒரு கோக் எடுத்து வந்தான். பருகும் சமயத்தில் என் போன் ரிங்க.
சொல்லு ஹரிஷ் மாம்ஸ் நீ கேட்டதும் டவுட் பட்டு பார்சல பாத்தேன் அதுல ஒரு பெண்ட்ரைவ் இருந்தது.. அதுல ஒரு வீடியோவும் இருந்தது.. உன் போன்க்கு வாட்ஸ்சாப்ல அனுப்பிருக்கேன் பாரு..
விமல் வாட்ஸாப்ல ஹரிஷ் ஏதோ வீடியோ அனுப்பிருக்கான் பாரு. என்று என்போனை தர..
வாங்கி ப்ளே செய்தான்.. யுவா தான் இருந்தாள்..
பவி நான் தப்பு பண்ணிட்டேன் . இவ்ளோ நாள் விமல சந்தேகப்பட்டேன். ஆனா ரெண்டு நாளா யாரோ என்ன பாலோ பண்றாங்க.. எனக்கு ரொம்ப நெருக்கத்துலயே இருக்காங்க. எனக்கு என்ன பன்றதுனு தெரியல இந்த பென்ட்ரைவ் உன்கிட்ட எப்படியாவது அனுப்பிறேன் அத பாத்து எதாவது பண்ணு ப்ளீஸ்.. ஒருவேளை இந்த பென்ட்ரைவ் உனக்கு கிடைக்கும் போது நான் உயிரோட இல்லாமலும் போகலாம் . நான் சந்தேக பட்டமாதிரி நீயும் விமலதான் சந்தேகப்படுவ. ஆனா விமல எப்படியாவது காப்பாத்து.. கைவிட்டுடாத.. அவங்க என் பணத்துக்கு குறிவெச்சதா தெரியல இதுல வேற எதோ இருக்கு நீ தான் அத கண்டுபிடிக்கனும்..
என்னடா இது கேஸ் இடியாப்பம் மாதிரி கொசகொசனு இருக்கு..
அண்ணா எனக்கொரு டவுட் யுவா மாமா ஜெயில்ல இருந்தா என்ன? ஆள் வெச்சு செய்யலாமில்ல.. என்றான் கார்த்தி..
கோக் குடிச்சிட்டே யோசிக்க. அவனுக்கும் என்ன மோடிவ் இருக்கும்.. யுவா லீகல் ஆனா யுவாக்கு அடுத்து விமல் தான் லீகல். விமல காப்பாத்து னு யுவா சொல்றான்னா அவனுக்கும் ஏதோ பாதிப்பு வரதா இருக்கனும். யுவா இறந்தது. அதேபோல வேலைக்காரி இறந்தது. அதவிட ரெண்டு பேர் வீட்டுலயும் பேரே புதுசா ஒரு மாத்திரை எப்படி இந்த கனக்சென். இவ்வளவு சிம்பிளா ஏன் பண்ணனும். விமல் மேல ஏன் டவுட் வர வெக்கனும். என்ன லிங்க் வரும்?..
கார்த்தி அந்த பார்சல் அனுப்புன அட்ரஸ்க்கு போன் பண்ணி ரிப்போர்ட் கேளு..
அண்ணா மெயில் பண்ணிருக்காங்கலாம் சொன்னாங்க.. உங்ககிட்ட பேசனுமாம்.
ஹலோ ஜோஹன். சொல்லுங்க.
ஹே பவித்ரன். முதல்ல நான் டெஸ்ட் பண்ணப்ப பெருசா மர்டர்க்கு எதுவும் இல்ல . பட் ஸ்வெட் ல சம் டாக்ஸின்ஸ் இருந்தது. அந்த டாக்ஸின்ஸ ஐசோலேட் பண்ணப்ப எதுவும் தெரியல பட் த டேப்லெட் இஸ் வெரி இன்ஜிரியஸ் . அண்ட் வித் தட் இட் லீட் டு டெத் என்றான்.
கார்த்தி மெயில் ப்ரிண்ட் எடு..
இந்தாங்கண்ணா ஸ்டாப்ளர் காணோம் . அப்படியே பாருங்க.
கார்த்தி கேஸ் முடிஞ்சிதுடா. விமல் கேஸ் முடிஞ்சது..
எப்படி சொல்றீங்க. ?.
இந்த மாத்திரை தாண்டா வேையே பண்ணிருக்கு வெளிய வேற காம்பினேசன காட்டி.. உள்ள. Paraphenylene diamine அதோட benzodiazepines கலந்துருக்கான் அதான் இந்த மாத்திரை சாப்டா கிட்னி வேலை செய்யாது. அதனால தான் யுவா உடம்பு வேர்த்துருக்கு. இந்த வேர்வைய டெஸ்ட் பண்ணதுல அதுல சில டாக்ஸின்ஸ் இருந்துருக்கு. அந்த டாக்ஸின்ஸ அவன் ரிசர்ச் பண்ணதுல இந்த பழம் சிசம்னு பேரு இத சாப்டதா காட்டிருக்கு.
அதாவது star fruit தமிழ்ல சிசம். இல்லைனா தமரத்தை கந்தசட்கம் .விளிம்பிப்பழம் னு பேரு இத சாப்ட வெச்சதுதான் இறப்புக்கே காரணம்.. கன்பார்மா கொலை தான்.. கொலைகாரனுக்கு இவ கிட்னி டிபக்ட்ல இறந்தானு முடியும் அதனால அவன் தப்பிக்கலாம்னு நெனச்சிருக்கான்.இந்த பழம் சாப்டா கிட்னி பிரச்சனை இருக்கவங்க இத சாப்டா இறந்துருவாங்கனு அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படி இதனால இறக்கலனாலும் இந்த மாத்திரைல இருக்குற. பாராபினைலின் டையமைன் ஒரு ஸ்லோ பாய்சனா வேலை செய்யும்.
சரி இப்ப யாரு கொலை பண்ணிருப்பா என்றான் கார்த்தி..
இனிமே எல்லாம் ஈசிடா..வா
ஒரு மாதம் கழித்து வள்ளிராஜன் (டி எஸ்பி ) வந்திருந்தார். என்ன பவி அந்த கேஸ எப்படித்தான் முடிச்ச..
சிம்பிள் தான்ங்க. மாத்திரை குடுத்த டாக்கடர விசாரிச்சா அந்த மருந்த தரவேஇல்லலைனு சத்தியம் பண்ணுச்சு.. சரி வெளிய விசாரிச்சதுல. யுவா அவங்க மாமாவின் மனைவியும் இந்த டாக்டரும் ஒரே மாதிரி இருக்குற சகோதரிங்கன்னு தெரிஞ்சது . அத பயன்படுத்தி அவங்க மாமாவின் மனைவி டாக்டரா நடிச்சி இந்த மாத்திரைய குடுத்துருக்கா அவளே வேற மாதிரி சொல்லி இந்த பழத்த சாப்டா ரொம்ப நல்லதுனும் சொல்லிருக்கா. அத நம்பி யுவாவே நம்ம ஊர்ல கிடைக்காத பழம்ங்கிறதால ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிருக்கா... அப்புறம் விசாரிச்சதுல..யுவா மாமாவுக்கு ஒரு அண்ணன் இருந்தான் . அவன்தான் விமல் பேர்ல போன்பண்ணவும். மிரட்டவுமா இருந்துருக்கான். அதுவும் அந்த கொஞ்ச பணத்துக்காக இல்ல விமல் மேல சந்தேகம் வந்து யுவா தடுமாறினா என்ன பண்ணுவான்னு ஒரு பிளான்ல ஆரம்பிச்சிருக்கான் . அதுபடி யுவா என்ன பாக்கவந்தத தெரிஞ்சு எனக்கும் அந்த சந்தேகம் உண்மையாகனும்னு அதேபோல் போன் பண்ணி மிரட்டிருக்கான். யுவா இறந்ததும் விமல் உள்ள போய்டா இல்ல விமல முடிச்சிட்டா . சொத்து வாரிசுக்கு பழைய கார்டியன் மூலமா. இவங்க கைக்கு வந்துடும்.. அதான் இவங்க பிளான் . அதுக்காக தான் விமல் மேல சந்தேகம் வரவெச்சது. எல்லாம் யோசிச்சு பாத்தா சரியா வருது. எப்படியோ புடிச்சிட்டேன்...
சரி தான் ஆனா ஒரு சாதாரண டெத்ல இருந்து இவ்வளவு தூரம் வந்துருக்க. ஆமா உன் பர்த்டே எப்ப?
மே 10 ஏன் .
இல்ல ஒரு ட்ரீட் குடுக்கலாம்னு தான்.
அதுக்கு எதுக்கு பிறந்தநாள் வரைக்கும் வெய்ட் பண்ணிக்கிட்டு இப்பவே போலாம். ட்ரீட் னா நான் இன்னிக்கே கூட பர்த்டே கொண்டாடுறேன்..
டேய் விளையாட்டா இருக்காத . ஒரு சீரியஸான கேஸ் தரேன் 3 வருசமா டிபார்ட்மெண்ட் ல சால்வ் ஆகல. சிபிசிஜடிக்கு மாறப் போறதா பேச்சுவருது. என்பீரியட்ல அனுப்புனா எனக்கு நேம் போய்டும். அதனால ஜுரிடிக்ஷன்ல 6 மாசம் டைம் கேட்டுருக்கேன். நீ சால்வ் பண்ண பாரு டிபார்ட்மெண்ட்ல இருந்து எந்த ஹெல்பும் கிடைக்கும். சீக்கரமா முடிச்சுக் குடு.
என்ன கேஸ்?.
மாஸ் மிஸ்ஸிங் , ப்ராஜெக்ட் கிருமி.
அது ஏன் கிருமி?
காணாம பேனவங்க எல்லாரும் வைராலஜிஸ்ட் . கிருமியியலாளர்கள் .
ம் எப்ப இருந்து எடுத்துக்கட்டும்?.
உன் விருப்பம். பிறந்தநாள் எல்லாம் முடிச்சிட்டு வா.
இல்ல இப்பவே கேஸ் ரெக்கார்ட்ஸ் வேணும்..
ம்.. சரி.. சுரேந்தர் அந்த கேஸ் டீடைல கொண்டு வாங்க.. . ஸ்பெசல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் சரண் தான் இத இப்ப ஹேண்டில் பன்றார் .. நல்ல டைப் பாத்து பேசிடு அவர் கைட் பண்ணுவார். கூட வெச்சிக்கோ..
பைல்கள் வந்தது. எனிவே நான் இந்த 7 நாள் சென்னை போறேன். பாத்து பாலோ பண்ணிக்கோ. இந்தா பைல்ஸ் பர்த்டே கிப்ட்டா வெச்சிக்கோ.!. ஹாப்பி பர்த்டே..
தேங்க் யூ வள்ளிராஜன்.. மே பி திஸ் இஸ் மை சீரியஸ் கிப்ட் ப்ரம் பிபோர்.. சென்னைல இருந்து வந்ததும் ட்ரீட் எங்கனு சொல்லுங்க.. பை..
إرسال تعليق