சஷ்டி கவசமா? இஷ்டமா?

நேற்றை வெளியான எனது கறுப்பர் கூட்டமும் கந்தபுராணமும் என்கிற கட்டுரையை படித்துவிட்ட என் சம வயது நண்பன் ஒருவன் (பேர் சொல்லக்கூடாதுனு கண்டிசன்) 

போன் செய்து டேய் கட்டுரைய படிச்சேன்டா.. அதெல்லாம் சரியோ  தப்போ இருந்துட்டு போகுது விடு . எனக்கு நீ என்ன பதில் சொல்ற.?. 

உனக்கென்னடா சொல்லனும்?. 

நீ நாத்திகன்ட்ட (அவனா முடிவு பண்ணிக்கிட்டான்) சமாளிச்சிட்ட நான் முருகன நம்புறவன் எனக்கு அந்த வரி தப்பா தான் தெரியுது எனக்கு என்ன பதில் சொல்லப் போற.  

நீயுமாடா?. டேய் அந்த வரி சரியா தப்பான்னு முருகனுக்கும் உனக்குமான பிரச்சனை அதுல யாருமே கருத்து சொல்ல முடியாதுடா.. 

இந்த வேலை எல்லாம் வேணா நேரடியா சொல்லு..  

டேய் ஒன்னு புரிஞ்சுக்கோ கடவுளுக்கு  பக்தன் தேவையில்ல ஆனா பக்தனுக்கு கடவுள் வேணும். பக்தன் பார்வைக்கு ஏத்ததாதான் கடவுள் வரமுடியும்.. 

டேய் இந்த கமல் டயலாக் மாதிரி எல்லாம் சொல்லாத தெளிவா விவரமா சொல்லு.. 

நான் சொல்வேன் நீ ஒத்துக்க மாட்டியே?. 

முதல்ல சொல்லு.. 

ஏன்டா போன சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு பொங்கல் வெச்சி படைக்கிறனு வெச்சிக்கோ . இந்த சதுர்த்திக்கு புது பொங்கல் தருவியா? அதே பொங்கல தருவியா?. 

அதே பொங்கல் எப்படிடா தரமுடியும் புதுசாதான் செய்வோம்.. 

சூப்பர். தமிழ்கடவுள்ங்கிற எத்தனை தரம் புது தமிழ குடுத்துருக்க? கந்த சஷ்டிக்கு பல வருசத்துக்கு முன்னாடி பழசு தான் திருப்புகழ்.. பாலதேவராயர் அவர் தேவைக்கு திருப்புகழப் பாடாம ஏன் புதுசா பாடுறாரு?. தன் தேவை தன் கஷ்டம் தன் மொழி தான் சரினு நெனைக்குறாரு. உன் தேவைய கேட்க ஏன் பாலதேவராயர் பாட்டுக்கு போற.  

முருகனோட தேவை பாலபிஷேகமோ? பஞ்சாமிருதமோ? இல்லடா . தன் பக்தர் எல்லாரும் ஒரு அருணகிரி மாதிரி ஔவையார் மாதிரி இருக்கனுங்கிறது தான்.. யோசிச்சி பாரு எல்லாரும் அப்படி மொழியில நல்லாயிருந்திருந்தா? நாம ஏன் பாலதேவராயர் பாட்டுக்கு கூனிக்குறுகி நிக்கனும்.. என்கிட்ட வாடான தெம்பா நிக்கலாம். தமிழ் உலக அளவுல பெருசா இருந்துருக்கும். 

இந்த நிமிசம் என்னால பெரியார பாராட்டி கவிதை எழுத முடியும். 

வறியர் தம்மை அறிந்தும் 

அறியார் தம்முள் நெறிகாண

அரிதாய் வந்த பெரியார்.. 

இந்த வரியையும் முருகன் தான் குடுத்தான்  என்பேன் நான்..  

ஆனா எந்த பெரியாரிய சிந்தனையாளர் நெனச்சாலும் அருணகிரி ஆக முடியாது . ஏன்னா தமிழ முருகன் குடுக்கனும். கத்துக்கலாம் படிக்கலாம் கதை சொல்லாம் விவாதிக்கலாம்  . ஆனா பக்தியும் கவிதையும் கண்ணீர் மாதிரி தானா உள்ளயிருந்து வரனும்.   வராதவனுக்கு  உள்ள ஏதோ பிரச்சனை அவ்வளவுதான். 

இதெல்லாம் நல்லா பேசு ,நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்ட?

அட , மடப்பயலே சரி உனக்கு அதுக்கு பதில் வேணும் அவ்வளவு தான.. 

பாட்டு பேரென்ன? கந்த + சஷ்டி + கவசம் - கந்த + ஆறு+ கவசம்… கவசம் யாருக்கு வேணும் யாருக்கு பாதுகாப்பு இல்லயோ அவனுக்கு இல்ல யாருக்கு பிரச்சனையோ அவனுக்கு.  நீ பிரச்சனைக்கு போகலனா உனக்கு தேவையில்ல. உனக்கு பிரச்சனையில திறமையிருந்தா தேவையில்ல.. 

மார்புக்கும் வயிற்றுக்கும் மாற்றும் போது முக்கியமான இடத்திற்கு மாட்டாதது முட்டாள்தனமில்லையா?. இங்க எது ஆபாசம்ங்கிற இல்லாதத இருக்குனு சொன்னா அபத்தம் இருக்குறத திரித்து சொன்னா ஆபாசம். இங்க எதையும் திரிச்சி சொல்லலயே.. ஆபாசமங்கிறதே பார்வையிலும் புரிதலிலும் தான.. 

சரி ரைட்டு விடு.. அந்த பாட்ட விட்டுடலாம்

இதுக்குதான் முன்னயே சொன்னேன். 

ஓ அப்படியா? சரி வெச்சிடுறேன் .. 

அடப்பாவி , ஊத்தாப்பம் செய்றத பத்தி அரமணி நேரமா கதையா சொன்னா . அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் னு போவானே அது மாதிரி இருக்கு.. 





சித்தம் இருந்து சிவகுரு காக்க

பித்தம் தனையே  பழனியாேன் காக்க

ஞானத்தை எங்கள் ஞானவேள் காக்க

மானங்கொள் மனதினை முருகாநீ காக்க


சொல்லும் நாவை செந்திலோன் காக்க

செல்லும்  வாழ்வை செவ்வேள் காக்க

உள்ளும் ஆசைகள் உமைமகன் ஆகுக

வெள்ளை சிந்தையாய் வேலவர் மாறுக


என்னை என்னிலே எங்கோ ஒழித்து

என்னில் தன்னையே எங்கும் நிறைத்து

தன்னை தந்துநீ தன்மை செய்யவே

என்னை புவியினில் எடுத்து வந்தேன்.. 


முன்னை நினைவில் முளைத்த பிழைகள்

இன்னை இனிமேல் இல்லை எனவே

என்னை சரிசெய் தென்னை உனது

பொன்னை நிகர்த்த பாதத்தில் வை.. 




1 تعليقات

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم