சிக்மண்ட் ப்ராய்டை போல
கனவின் அர்த்தம் சொல்லவா!
ஐாக்கி சானை போல
ஸ்டண்டில் காதல் சொல்லவா!
ஐன்ஸ்டீன் தியரி போல
உன்மேல் மோகம் கொள்ளவா
எடிசன் பல்பை போல
உன்னில் நுட்பம் தேடவா
டச் ஸ்க்ரீனை போல
உன்னை நானும் தொடவா?.
டார்க் வெப் போல
உன்னில் கொஞ்சம் மர்மம் காணவா?.
ஸ்க்ராச்சில் இருந்து என்னை
புதிதாய் டெவலப் செய்தாயே
வெப் பேஜாய் உன்னை
காண மனமும் பிரவுசர் ஆனதே.
குக்கீஸ் போல கொஞ்சும் முத்தம்
லட்சம் கேட்குதே.
சிம்பனி போல உள்ளமெங்கும்
சத்தம் கேட்குதே..
வென்காப் சிக்கன் போல
உன்னை நானும் மெல்லவா
வெய்யில் பட்ட ப்ளாஸ்டிக்காக
கொஞ்சம் கரையவா..
إرسال تعليق