பகைவனுக்கு ஓர் மடல்.

பகைவா பகைவா

என் ஆடையின் கிழிசல்களை காட்டும்முன்

உன் அந்தரங்க மறைப்புகளை சரிபார்த்துக்கொள்.


எதிரியே எதிரியே

என் எதிரில் வந்து நிற்கும் முன்

உன் மன உடல் பலத்தை சோதித்துக்கொள்


கால காலமாய்

என்னை வெல்லும் வழிகளை ,

உன்னை கொண்டே தயார் செய்கிறேன் . 


ஆண்டாண்டாய்

நான் வளர்வதும் உன்னால்தான்

நான் மிளிர்வதும் உன்னால்தான்.. 


நம்புகிறேன் வாழ்வில் 

எப்போதும் நீ என்னை வென்றுவிடலாம்

இப்போதே தெரிந்துகொள் 

ஓடும் குதிரையை ஓடி வெல்வது கடினம்.. 


வம்புகளாய் வராதே

வீம்புகளால் கெடாதே

உன் பகுத்தறிவின் படிமங்களுக்கு

என் கடவுளின் சுவடுகூட தெரியாது.. 


உன் ஞானம்போன்ற தர்க்கங்களுக்கு

என் உணர்வதனின் உன்மத்தம் தெரியாது.. 


எப்போதும் நான் தனியானவன் தான்

எப்போதும் நான் பிரபஞ்சங்களின் வான்.. 


பகைவா பகைவா.. 

தொடர்ந்து வந்து வெல்ல முயலாதே.. 

என் குதிரைகளின் வேகத்தை 

உன் கால்கள் எட்டுவது கடினம்.. 


பகைவா பகைவா 

கொஞ்சமாவது கேள்.. 

இனியாவது உனக்காக வாழ்.. 



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم