இன்று காலை யதார்த்தமாக குதம்பை சித்தர் பாடலான அண்டத்துக்கு அப்பால் பாடலைகேட்டதும் எழுந்த பாடல்.
வண்ணத்து பூச்சியாய்
வண்ணம் சுமப்பினும்
வெளியில் தேடி அலைவாய்.. (2)
கல்லை செதுக்கிடின்
தொல்லை தர்க்குமாய்
எண்ணி தொலைவாய் மனமே(2)
எல்லை இல்லாவானம்
வெள்ளை யெனவெண்ணி
வெறுமையை மறந்து திரிவாய்(2)
ஓவிய படமொன்றில்
மலரை வைத்திட்டு
மெய்யை பெய்யாக்கி திரிவாய் (2)
தன்னை ஔித்திட்டு
உன்னை பெருக்கிய
ஒன்று வெளியில்லை மனமே. (2)
அண்டத்தில் அண்டமாய்
பிண்டத்தில் பிண்டமாய்
அண்டித் திரிவான் அவனே (2)
உன்னில் புதைந்ததை
வெளியில் அறிவது
மூடம் எனஅறி மனமே (2)
கண்ணில் ஔியென
விண்ணில் வெளியென
விரவி கிடப்பது அவனே (2)
إرسال تعليق