சூழல் - சிறுகதை

இரவு 8:20 மணி அந்த தெருவில் மயான அமைதி காற்றுக்கூட வீசாத அமைதி தூரத்தில் புகைவிட்டு கொண்டிருந்தது சாம்பலாகப் போகும் குப்பை.. பட பட படவென சிரத்தையான சப்தமொடு சில்லிட்டு கிடந்த இருளில் பால்நிறத்தில் வந்து நின்றது அந்த ஜாக்குவார் 380. நிலவு தன் நிறத்தை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருக்கையில் இன்ஜின் அணைக்கப்பட்டு.. 


வளையல் போல வளைந்த மரத்தில் மேகத்து தூறல்போல்  சருகுகள் சிந்தின .

அந்த சருகுகளை சரசரவென உரசியது நான்கு கால்கள். 6 அடி வெளுத்த கட்டுமஸ்தான தேகத்தில் வெள்ளை கோட் சூட்டுடன் முழுபோதையில் இருந்தான் ஹரி 29 வயதில் கணக்கிலில்லா பணம் சேர்த்த பணக்காரன்.. 


அங்கு ஒரு பில்டிங். பங்களா போன்ற பில்டிங். இருளில் பாதிப்பாதியாக தெரிந்தது .. போதையினால் நிலையின்றி பங்களாவிற்குள் சென்றான் ஹரி . அவனை தடுத்தபடியே சென்றேன் நானும். பங்களாவிற்குள் சென்றவுடன் கொஞ்சமே குடித்திருந்த எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதனால் ஹரியை இழுத்து இழுத்து பார்த்தும்அவன் வருவதாய் இல்லை. மேலும் உள்ளே சென்றான். அங்கு நகர்ந்ததும் நுழைவு வாயில் கதவு தானாக பூட்டிக் கொண்டது.. பின்னர்  எனக்கு மேலும் பயம் அதிகமானது. அந்த இருண்ட பங்களாவில்.. புகை நாற்றமும் கண் எரிச்சலும் உணர்ந்த போது ஏதோ வழி திறந்திருக்கும் என்று தேடியபடி என் மொபைலில் டார்சை கொண்டு பார்த்துக்கொண்டே நடந்தேன். சிறிது தூரத்தில் ஒரு ஜன்னல் திறந்திருப்பது தெரிந்தது. அந்த ஜன்னல் வழியாக ஏதோ எரிவது போல் தெரிய ஜன்னலை நெருங்கிப் பார்த்தேன் அங்கொரு மனித உடல் நின்றபடி எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்தேன். 


உடனே ஹரியை கூட்டிக் கொண்டு தப்பிக்க ஓட நினைத்து ஓட. ஹரியை காணவில்லை பயம் இன்னும் அதிகரித்தது மனம் ஏதேதோ நினைத்து நடுங்கியது.  நடுங்க நடுங்க ஹரியை தேடி அலைந்தேன். ஹரி ஹரி என்று கூப்பிட்டபடி நகர்ந்தேன். கீழே எங்கேயும் காணவில்லை என்பதால் மாடிக்கு படி ஏறும்போது உபரியாக காலடி சத்தம் கேட்க . பயத்தில் திரும்பலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இன்னும் மூன்று படி ஏற மேலும் காலடி சப்தம் கேட்க திரும்பி பார்க்கையில் என் எதிர் நானே இருக்க பதட்டத்தில் காலிடறி கீழ விழ படிகளில் உருண்டு தரையில் ஒரு மூலையில் போக பக்க ஒரு கரம் தொட்டது போல உணர்ந்து நடுங்கியபடி திரும்ப ஹரி தரையில் விழுந்து கிடந்தான். ஹரி ஹரி என்று உலுக்கியும் அசைவற்று கிடந்தான். என்ன செய்ய என்று தேடி  அருகே கிடைத்த தண்ணீர் பாட்டல் எடுத்து முகத்தில்ஊற்றி அவனை போதையிலிருந்து தெளிய வைத்தேன். .


இருந்தும் சரியான தெளிவில்லாமல் உளறியபடி பின்னே வந்தான். மாடியில் யாரோ ஒரு பெண் காப்பற்ற சொல்லி அலறும் சப்தம் கேட்டு. நானும் ஹரியும் மாடிக்கு படியேறி செல்லும் போது. அருண் ஆ ஊ என போதையில் கத்திக்கொண்டே வந்தான். மாடிக்கு சேர 5 படிகள் இருக்கும் போது கீழே பெரிய பெரிய பொருட்கள் விழுந்து உடைவது போல சப்தம். மேலே அலறுபவளை காப்பாற்றப் போவதா? கீழே உடைவதை பார்க்கப் போவதா?  இல்லை முதலில் நாம் தப்பிக்க ஓடுவதா? என குழம்பிக் கிடக்கையில் பொருட்களை விட மனித உயிர் முக்கியமென அலறல் கேட்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். 


மேல் மாடியில்இரண்டு அறைகள் இரண்டும் தேக்கு மரத்தால் செய்த கதவுகள் அதில் தங்கநிறத்தில் ஏதோ ஒரு உருவம் பதிக்கப்பட்டிருந்தது.. அந்த உருவத்தை தொட்டு கதவை திறந்தபோது அறை வெளிச்சத்தில் ஒரு கட்டில் மெத்தையில் கரிய உருவம் சரியாக தெரியாத போதிலும் அறைகுறையாக தெரிந்தது. அந்த உருவம் ஓலமிடுவது போல இருந்தது. நானும் ஹரியும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க.. கீழே டம் டம் டம் என்று சப்தம். குழப்பம் பயம் வேட்கை தப்பிக்கும் அவசியம் என பலப்பல விதமான எண்ணங்கள் எங்களை உலுக்கிட ஏதோ விபரீதமாக பட்டது ..


அப்போது அந்த கரிய உருவம் நெருங்கி வந்து ஹரியை பிடித்துக் கொண்டது. பயத்தில் .ஹரி கத்தக் கத்த அந்த உருவமும் அலற .. உச்சகட்ட போராட்டமாய் ஹரியை காப்பாற்றும் முயற்சியில் நானும் ஹரியும் இருக்க. அபரிதமாய் தப்பித்து ஓடி கீழே வந்தோம். வந்தபோது நாற்காலி அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. நடுங்கி நின்றிருந்த போது அந்த நாற்காலியில் ஹரியின் உடல் வந்து விழுந்தது. மிகவும் பயந்துபோன நான் திரும்பி பார்த்த போது ஹரியும் பயந்து வெளிரிப்போய் தான் இருந்தான் .. 


இன்னும் வெளியே ஓட முயன்றோம்.. அங்கே கதவினை திறக்க முடியாமல் திணறினோம் அப்போது அங்கே அந்த கரிய உருவமும் எரியும் உடலும் எங்களை நெருங்கி நெருங்கி வந்தது .. அந்த எரியும் உருவம் ஹரியை பிடித்துக் கொண்டது. அந்த கரிய உருவம் என்னை ஓங்கி அறைந்தது நான் அங்கேயே மயங்கி விட்டேன்..  அதற்குமேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. 


என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அர்ஜுனின் வாக்குமூலத்தை நானும் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலும் கேட்டுக் கொண்டிருந்தோம்... 


என்ன வஜ்ரவேல் ரொம்ப  சினிமாத் தனமா இருக்கே.  என்றேன் நான்.. பவித்ரன் என்னும் நான். 


என்ன பண்ணலாம் பவி ? எப்படி சால்வ் பண்றதுனே புரியல.. 


வஜ்ரவேல் இங்க ஒருத்தனோட பார்வை மட்டும் தான் இருக்கு மேற்கொண்டு நடந்தத சொல்லுங்க. நீங்க எப்படி இந்த கேஸ்ல வந்தீங்க என்ன கவனிச்சீங்க.  எல்லாம் சொல்லுங்க.. 


பவி இந்த கேஸ இப்படி ஸ்டேட்மண்ட் எழுதினா என்னைய பார்த்து டிப்பார்மெண்டே சிரிக்கும்..  அதனால தான் உங்க ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்.. 


சரி வேற தகவல்கள் உங்களுக்கு தெரிஞ்சி எதாவது?. இருக்கா வஜ்ரவேல் .எனக்கு இங்க முழுசா விசயமே வரல.. 


சொல்றேன் என் டி சி கார்டன் ன்னு என் சர்க்கிள்ள ஒரு பங்களா இருக்கும் மொத்தம் 30 ஆயிரம் ஸ்கொயர் பீட்ல பின்னாடி பார்க் மாதிரி கட்டி முன்னாடி வீடு சிங்கிள் காம்பவுண்ட்ல.. அங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரிதான் இவங்க அங்க போயிருக்காங்க. காலைல கார பார்த்து நம்ம ஹெட் கான்ஸ்டபிள் தான் தகவல் சொன்னாரு. நாங்க ஒரு டீமோட அந்த பங்களாவுக்கு உள்ள போய் பாத்தா அர்ஜுன் மயக்கத்துலயும். ஹரி தலைய தவிர மீதியெல்லாம் எரிஞ்சு போயும்இருந்தாங்க. அர்ஜுன ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டோம். ஹரியோட பேமிலிக்கு சொல்லி அனுப்பிட்டோம்.. பணக்கார வீட்டு பையன் டிப்பார்ட்மெண்ட்ல ப்ரசர் ஜாஸ்தி . அதான்.. 


சரி இத சால்வ் பண்ணா எனக்கு என்ன தருவீங்க?. 


என்ன ? கவர்மண்ட் ஷீல்ட் ரிவார்ட் தருவோம்.. 


அதெல்லாம் வேணா என் ப்ரண்டஸ் கூட ஒரு தமிழ்நாடு டூர்  .செலவு உங்களுது எப்படி?.


அவ்ளோதானா தாராளமா செஞ்சிடலாம்.. 


நானும் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலும் கான்ஸ்டபிள் 2 பேரும் அந்த பங்களாவிற்கு சென்றோம்.. 


வஜ்ரவேல் சரியா அந்த கார் நின்ன இடத்துல நம்ம ஜீப்ப நிறுத்துங்க.. என்றேன்.


சரி என்று நிறுத்தினார் கான்டபிள் . நான் இறங்கி அந்த பங்களாவை நோட்டம் விட்டேன் மாலை 5:20 மணி இருக்கும் பங்களாவிற்கு பின்னே சூரியன் ஔிந்து கொண்டிருந்தது.. பங்களா எந்தவிதத்திலும் ஒரு அமானுஸ்யத்தை காட்டும் விதமாக இல்லாவிட்டாலும். அது ஒரு மர்மத்தை வைத்திருப்பதை போல நிற்கிறது.. உடன் வந்த அனைவரும் பங்களாவை நோக்கி செல்ல அந்த  பங்களாவின் மேல் மாடியில் வலதுபுறத்து அறையில் இருகண்கள் என்னை கூர்ந்து பார்ப்பது போல தெரிந்தது.. எனினும் இதுபோன்ற எண்ணங்கள் சிலநேரம் கோயில் கோபுர சிற்பங்களை காணும்போதும் தோன்றியிருக்கிறது.. 


அருகில் இருக்கும் வீடுகளை நோட்டம் விட்டேன்  .. எல்லாம் இயல்பாகவே இருந்தது அர்ஜுன் சொன்னது போல அமானுஸ்யங்கள் ஏதும் இருப்பதாக இருந்தால் இப்படி சாதாரணமாக இருக்க முடியுமா? .. என்னைகடந்து சென்றவரை சார் என்று அழைத்தேன் . அவரது டீசர்ட்டும் ஷார்ட்ஸூம் ஜாக் ஷூஸும் கழுத்தில் இருந்த ப்ளூடூத்  டிவைசும் அவரின் 59 வயதினை முடிந்தளவு மறைத்தது.. சார் என்று கூப்பிட்டேன்.


ஏனோ அவரிடம் என்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை.. காரணம். நம்மில் பலர் அறிமுகம் இல்லா நபரிடம் தரும் உண்மையை போலீசிடமோ இல்லை என்னை போன்ற டிடெக்டீவிடமும் சொல்வது இல்லை. எங்களின்  சந்தேகப் பார்வையும் ஒரு காரணம்.. மற்றொன்று இந்த வயதினரிடம் கேள்வியால் சரியான விடையை பெறுவது சிரமம் என்பதும்.. 


சார் என்ன இந்த பில்டிங்க்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? என்று கேட்டேன்..


அதுவா  போன சனிக்கிழமை இந்த வீட்டுல ஒரு கொலை நடந்துருச்சி .. அத விசாரிக்கத்தான் தெனமும் போலீஸ் இப்படி வந்து போறாங்க.. 


கொலையா எப்படி?.. 


ஏதோ இந்த வீட்டுல பேய் இருக்குறதா அக்கம் பக்கத்துல பேசிக்கிறாங்க . 


ஏன் சார் வீட்டப் பாத்தா அப்படி ஒன்னும் பேய் வீடுமாதிரி தெரியலயே. ?


இல்லப்பா இங்க ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு குடும்பம் இருந்துச்சி அந்த குடும்பத்துல ஒரு அழகான பொண்ணு 20 23 வயசு இருக்கும். அதே அந்த மாடில ஒரு ஜன்னல் இருக்கில்ல அங்கிருந்து விழுந்து செத்துப் போச்சி.. அதுக்கப்புறம் அந்த குடும்பத்துக்கு இங்க எதுவும் சரியா இல்லஅதனாலயே அந்த குடும்பம் இந்த வீட்ட விட்டுட்டு வெளியூர் போய்டாங்க.. இப்ப இந்த வீட்டுல சுப்பையான்னு ஒருத்தன் தான் பாத்துக்குறான் .. என்னவோ தெரியல அவனும் சில நாளா ராத்திரியில இருக்குறதில்ல. 


இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதும் சில முறை அந்த மாடி ஜன்னலை கவனித்தேன் அதே கரிய உருவம் கண்கள் என்னை பார்ப்பது போன்ற உணர்வு இந்த முறை பிரமை என்று கடந்துவிட முடியவில்லை.. 


பங்களாவின் வாசலில் இருந்தவஜ்ரவேல் பவி அங்க என்ன பன்ற இங்க வா என்றார். 


அந்த பெரியவர் சற்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டு என்னை பார்த்து நீ .. நீங்க யாரு என்றார்.. 


பயப்படாதீங்க நான் வெறும் டிடெக்டீவ் தான். 


அவர் சிரித்துக் கொண்டே நான் ஏன் பயப்படனும் என்று என் தோளில் தட்டியபடி மறைந்து போனார்.. 


ஒரு நொடி நான் முழுதுமாக அதிர்ச்சியில் உறைந்து போனதை வஜ்ரவேல் உலுக்கிய பின் தான் உணர்ந்தேன் ... 


என்ன ரொம்ப நேரமா அங்கயே பார்த்துட்டு இருக்க ? அங்க என்ன இருக்கு ? என்றார் வஜ்ரவேல்..


ம்ம் ஒன்னுமில்லை என்று என்னை நானே சுதாரித்து கொண்டு பங்களாவுக்குள் நுழைந்தேன்  .. அர்ஜூன் சொன்னது போலத்தான் இருந்தது எல்லாம். அவன் சொன்ன ஜன்னலை சென்று பார்த்தேன் அங்கே ஒரு பார்க் போல மணல் கொட்டி விளையாட்டு பொருட்களுடன் இருந்தது.. அங்கேயே வெறித்து பார்த்தபடி.. சிந்தனையில் மூழ்கினேன்..


அந்த மாடி ஜன்னலில் உள்ள உருவம் கண்கள்?. வந்த அந்த பெரியவர் சட்டென மறைந்தது. ஏதும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.. ஒரு ஹாரன் சப்தத்தால் எண்ணம் கலைந்து பார்த்த போது அந்த பார்க் கிரவுண்ட் முடிவில் காம்பௌன்ட்க்கு பின்னால் ஒரு  தெருவின் சாலை இருக்கிறது .. 


திரும்ப வந்து ஹரிஇறந்த இடத்தில் இருக்கும் மார்க்குகளை பார்த்தபடி அந்த அறை முழுதும் பார்வையால் அலசினேன்.. அர்ஜுன் சொன்னது போல எந்த பொருட்களும் சிதறின மாதிரி தெரியல.. ஆனாலும் அந்த ஜன்னல் கண்களும் சந்திந்த பெரியவரும் என்னை உள்ளுககுள் உலுக்கிக் கொண்டே இருந்தன.. 


என்னையே கவனித்து வந்த வஜ்ரவேல் .. பவி நீ வந்ததில இருந்து ஏதோ மாதிரி இருக்கயே என்னாச்சு? உடம்புக்கு எதாவது முடியலயா குடிக்க எதாவது எடுத்துட்டு வர சொல்லட்டா? என்றார்.. அதுவும் சரிதான் யோசித்தால் வேலைக்காகாது அதுமட்டுமில்லாது ஏதேனும் சாப்பிட்டால் தேவலாம் என்றிருந்தது.. (இப்படி தேன்றித்தான் அரசமரத்தடி பிள்ளையாரை விட பெரிய தொப்பை வந்திருக்கு ).. வஜ்ரவேல் ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கிடைக்குமா? என்றேன்.. 


616 போய் எல்லாருக்கும் காபி வாங்கிட்டுவா. என்று தன் பர்சிலிருந்து பணத்தை எடுத்து தந்தார் இதிலிருந்தே வஜ்ரவேல் எப்படிபட்டபோலீஸ்காரர் என்று உங்களுக்கு தெரியும்.. 


சூடாய் காபி பருகி கொஞ்சம் சமநிலைக்கு வந்தேன் . வஜ்ரவேல் சில விசயங்கள விசாரிக்கனும்.. என்றேன். 


சொல்லு பவி என்ன விசாரிக்கனும்..?.


இந்த வீட்ட பாத்துகுறதா சொல்லபட்ட சுப்பையா.. ஹரிக்கும் இந்த வீட்டுக்கும் ஏதாச்சும் பழைய தொடர்பு. அர்ஜுன் ஹரி நட்பு.  இந்த தெருவோட சிசிடிவி பூட்டேஜ் கடைசி 4 மாசத்துக்கு. இங்க எதாவது கைரேகை . ஹரிக்கு ஆகாதவங்க பத்தின லிஸ்ட் . சோ அன் சோ..  என்றேன்.. 


சொன்னதையெல்லாம் 432 கான்ஸ்டபிள் நோட் பண்ண அதனை வாங்கி பார்த்த வஜ்ரவேல்.. ஒவ்வொன்றாக பதில் தேட.. 


பவி . கம்ப்ளைட் வந்த அன்னக்கே பாத்துட்டோம் அர்ஜுன கைரேகைய தவிர யாருதும் இல்ல . ஏன் .ஹரியோடது கூட இல்ல.. 


என்ன ஹரி கைரேகை கூட இ்ல்லையா ரிமார்க்பிள். முதல் முறையா கொலையானவனின் கைரேகை கூட இல்லாம ஒரு கேஸ்.. என்றேன்.


அடுத்து 2 வார சிசிடிவி பார்த்துட்டேன் எதும் சந்தேக படுற மாதிரி யில்ல.. 


வஜ்ரவேல் இதுவரை நாம கொலைனு தான விசாரிக்குறோம்... அப்புறம் எப்படி 2 வார சிசிடிவி பார்த்த போதும் அட்லீஸ்ட் 2 மாசமாவத வேணாமா .?.


சரி பாக்க சொல்றேன் பவி.. 


சரி அர்ஜுன் ஹரி பத்தி கேட்டது ?.


அர்ஜுன் ஹரி ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் எப்பவுமேஒன்னா இருப்பாங்க.. ஒன்னா சுத்துவாங்க .. இப்படிதான் கிடைச்சது பவி.. 


அடுத்து இந்த வீட்டக்கும் அவங்களுக்குமான பழைய தொடர்பு.. ?. 


அப்படி ஏதும் இல்லையே இத ஏன் கேக்குற.  பவி ?.


இவ்ளோ போதையிலும் இங்க சரியா வந்துருக்கான்னா.. அர்ஜுன் தடுத்தும் உள்ள போயிருக்குறான்னா? பழக்கம் இல்லாமலா வஜ்ரவேல்.. 


அதுவும் சரிதான் பவி ஆன எந்த தொடர்பும் இல்லயே ஏன் இது ஒரு தற்செயலா இருக்கக் கூடாது?.. 


சரி அப்ப அந்த சுப்பையா ?. 


யாரு சுப்பையா நான் விசாரிச்ச வரையில அப்படியாரும் இல்லையே.. 


என்மனம் அந்த பெரியவர் சொன்னதை நம்பலாமா வேணாமா என்றிருந்தது .. எதுக்கு இன்னும் க்ளியரா விசாரிச்சுடுங்க வஜ்ரவேல் என்று நகர்ந்தேன்  . 


அப்போது ஒரு பெண்ணின் அழுகை சப்தம் கேட்டது . நான் வஜ்ரவேல் கான்ஸ்டபிள் 4 பேர் என எல்லோருக்கும் கேட்டது.. அந்தமாடி ஜன்னல் அறைக்கு ஓடினேன் அந்த கதவை திறக்க முடியவில்லை. கான்ஸ்பிள்களை விட்டு உடைத்து திறந்த போதுஅங்கு ஒரு கட்டில் மெத்தையும் ஒரு கப்போர்டும் அந்த ஜன்னலும்  மட்டுமே இருந்தது.. நான் மெல்ல மெல்ல சென்று அங்கிருந்த கபோர்டை திறந்தேன் அதனுள் ஒரு கரிய உருவம் முன்பு பார்த்த கண்கள் என என்னை தூக்கிவாரி போட்டது . நான் சிலைத்து போய் நிற்க நெருங்கிய கான்ஸ்டபிளும் வஜ்ரவேலும் அந்த உருவத்தை கண்டு அதிர்ச்சியாக அது ஒரு ஓலமோடு புகைந்து மறைந்தது. 


அனைவருக்குள்ளும் அச்சம் பற்றி எரிந்தது. வஜ்ரவேல் கேசை மூடிவிடலாம் என்றார். கான்ஸ்டபிள் வாங்க ஓடிவிடலாம் என்றார். வேண்டாம் இன்னிக்கி நைட் இங்கயே இருக்கலாம்  என்றேன்.. 


அனைவரும் முதலில் மறுத்தனர் பின்பு சம்மதித்தனர்.. ஒருவழியாக இரவு இங்குதான் என்றானபின் வஜ்ரவேல். யோவ் 309 நீபோய் எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வா என்று பணத்தை கொடுத்தார். அதில் 3 நோட்டுகளாக 500 ரூபாய் இருந்தது.  ஆறு பேருக்கு 500 ரூபாய் ஆகும் என்றால் சரவணபவன் போன்ற பெரிய கடையாக இருக்குமென நினைத்தேன் . ஆனால் ரோட்டுக் கடைகளும் அந்த விலைக்கு வந்துவிட்டன என்று சாப்பிட்ட பின் தெரிந்தது.. கான்ஸ்டபிள் சொல்லாமலே காபி எடுத்து தந்தார் (என் நெடுநாள் ஆசைகளில் இதுவும் ஒன்று ) . 


எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை அந்த மாடி ஜன்னல் கண்களையும் சந்திந்த பெரியவரையும்  அப்புறம் அந்த கப்போர்டில் இருந்த அதே கரிய உருவத்தையும்.. வஜ்ரவேல் ஞாபகப் படுத்தித் தொலைத்தார்.. 


பவி உன்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்.  இந்த கப்போர்ட்ல அந்த உருவத்த பாத்தப்ப எப்படி இருந்தியோ அப்படியேதான் அங்க வாசல்லயும் இருந்த . அப்ப அந்த வாசல்ல என்ன நடந்தது.. ?


இப்ப சொன்னா நம்புவீங்கன்னு நெனைக்குறேன் வஜ்ரவேல் அங்க நான் நின்னப்ப ஒரு 60 வயசுள்ள பெரியவர் வாக்கிங் போறத பாத்தேன் அவர்கிட்ட இந்த பங்களா பத்தி விசாரிச்சேன் .  என்று நடந்தவைகளை சொன்னேன். 


அப்ப அவர் சொல்லிதான் உனக்கு இந்த  சுப்பையா விசயம் தெரியும் .. ? . சரி யோவ் 616 நீ இந்த ஏரியாவுல அக்கம் பக்கம் சுப்பையான்னு ஒரு ஆள பத்தி விசாரி.. யெஸ் சார் என்று வஜ்ரவேலுவுக்கு ஒரு போலீஸ் சல்யூட் அடித்து நகர்ந்தார் அந்த கான்ஸ்டபிள் 616  என்ற மாரிமுத்து.. 


அவர் சென்ற ஓரிரு நிமிடங்களில் ஒரு புகை நாற்றம் வீச நான் அந்த ஜன்னலை சென்று பார்த்தேன் ஏற்கனவே அர்ஜீன் அந்த பார்க் ஜன்னலை பற்றி சொல்லியிருந்ததால் நேரடியாக இங்கே சென்றேன். வஜ்ரவேலும் இ்ன்னும் சிலரும் பின்னே வந்தனர் . 


புகை மெல்ல மறைய நாங்கள் கண்ட காட்சி எங்களை திகிலூட்டியது ஆம் அர்ஜுன் சொன்னது போல்  ஒரு ஆள் நின்றபடி எரிந்து கொண்டிருக்கிறான்.. வஜ்ரவேல் தனது கான்ஸ்டபிள்களை சென்று அணைக்க சொல்ல நான் வேண்டாம் என்று தடுத்தேன் ஒரு அவசர வாக்குவாதம் எங்களுக்குள் புறப்பட்டது இறுதியில் வஜ்ரவேல் விட்டுக்கொடுத்தார்.. 


நாங்கள் மீண்டும் வந்து ஹாலில் அமர்ந்தோம் . ஏனோ எல்லாருக்கும் பயம் தொற்றியிருந்தது ஒருவேளை அர்ஜுன் சொன்னது போல அந்த எரியும் பணமும் கரிய உருவமும் வந்து தாக்கினால் என்ன செய்வது என்ற பயம்.. 


அப்போது மாடியில் ஒரு பெண்குரல் ஓலமிடுவது அனைவருக்கும் கேட்டது. அப்போது நான் மட்டும் செல்வதாக சொன்னேன் இல்லை என்று வஜ்ரவேல் ஒரு கான்ஸ்டபிளை துணைக்கு அனுப்பினார்.. நாங்கள் அந்த ரூமை திறந்த போது அந்த கரிய உருவம் அழுது கொண்டிருந்தது.(பேய் அழுமா என்ற சந்தேகம் வந்தால் நீங்கள் பெரியாரிஸ்டாகும் வாய்ப்பு இருக்கிறது என்று அறிக ) 


ஏனோ என் வக்கிர புத்தி  அழட்டும் அழட்டும் நல்லா அழட்டும் என்றது.. சார் போயிரலாம் என்ற கான்டபிளின் பேச்சைக் கேட்டு திரும்பிய போது அந்த கரிய உருவம் பாய்ந்து எங்களுக்குள் ஊடுருவி வெளியே சென்றது.. அந்த நொடி அந்த நொடி தான் எனக்கு யோசனை வந்தது.. 


வேகமாக கீழே வந்து பார்த்தேன் மற்றவர்கள் கொட்ட கொட்ட விழித்திருந்து ஆளுக்கொரு திசையை நோக்கி அலர்ட்டாக இருந்தனர்.. 


கான்ஸ்டபிள் கதவ திறங்க..என்றேன். திறந்தது.. சரியென்று அனைவரையும் காத்திருக்க சொல்லிவிட்டு நான் அந்த ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு முழுதும் 4 முறை அந்த எரியும் ஆள் தோன்றினான் பயம் தொற்றினாலும் பெருமளவில் ஏனோ உணரவில்லை. அந்த எரியும் ஆளின் மேல் ஏதோ முழுமையற்ற தன்மை இருப்பதாக மூளை சொன்னது.. 


இரவு முழுவதும் பங்களா முழுக்க அலைந்து திரிந்தேன் அந்த  கரிய உருவம் ஒருமுறை கூட தோன்றவில்லை. காலை புலர்ந்தது கதிரவன் கதிர்கள் ஊடுருவத் துவங்கியது . வஜ்ரவேல் 616 இடம் காபியும் பேப்பரும் வாங்கி வர சொல்லியிருந்தார்.. 


காபி கொண்டுதந்தார் கான்ஸ்டபிள் மாரிமுத்து செய்தித்தாளின்   ஏதோ தலைப்பு செய்தி என்னை ஈர்த்தது . சரியென்று மெல்ல புரட்டினேன். பிரபல தொழிலதிபரின் மகனும் இளம் கோடிஸ்வரருமான ஹரியின் மர்ம மரணத்தில் போலீஸ் தொய்வு காட்டுவதாக ஹரியின் உறவினர்கள் கண்டனம்.. என்றது செய்தி.. 


பாத்தியா பவி நாம இங்க எப்படி கஷ்டபடுறோம் இவனுங்க வாய் கூசாம பேசுறாங்க . என்றார் வஜ்ரவேல். 


வஜ்ரவேல் இந்த கேஸ் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க? என்றேன்.


அட நீயும் தான பாத்த பவி அந்த பேய் எப்படி கோரமா இதுலயே கேஸ் முடிஞ்சது தான் . ஏதோ நீ இருக்க சொன்னனு தான் இருக்கோம் பவி.. 


வஜ்ரவேல் இது ஒரு மர்மமான கொலை கேஸ் இல்லையா? 


ஆமாம். அதுக்கென்ன?. 


நான் கேட்டது இன்னும் வரலேயே ? 


என்ன வரல?.


சிசிடிவி பூட்டேஜ் , சுப்பையா, . 


ஏன் பவி இந்த கேஸ நடத்த போறியா?.. 


ஆமா . நிச்சயமா நடத்தப் போறோம்.. 


ஏன் என்ன காரணம்? சரி சொன்னா கேக்க மாட்ட. கான்ஸ்டபிள் இந்த சுப்பையா பத்தி விசாரிச்சீங்களா? 


விசாரிச்சோங்க ஐயா , சுப்பையா இந்த வீட்டு வேலக்காரன் வீட்டின் தொடர் நிகழ்வுகளுக்கு அப்புறம் கேர் டேக்கரா ஆகிறுக்காப்டி. ஆனா 3 மாசத்துக்கு முன்னாடி தான் உடம்பு செரியில்லாம ஆஸ்பத்திரியிலேயே செத்துட்டாரு. அதுக்கு பின்னாடி யாரும் இந்த வீட்ட பாத்துக்க வரல.. என்றார் கான்டபிள் சௌரி. 


இத பாரு அந்த சுப்பையாவும் 3 மாசத்துக்கு முன்னாடியே செத்துட்டான்.. இப்ப என்ன பண்ணப் போற பவி. பேசாம கேஸ விட்டுத்தள்ளு. என்றார் வஜ்ரவேல்


இல்ல வஜ்ரவேல் இங்க ஒன்னு வித்தியாசமா இருக்கு எனக்கு இங்க ஏதோ முழுசாஇல்ல அதுக்காவது இத நடத்த நினைக்குறேன்.. 


சரி அப்ப என்ன சிசிடிவி தான.. யோவ் 616 வாய்யா போய் சிசிடிவி விசாரிக்கலாம். என்றார் வஜ்ரவேல்.


வஜ்ரவேல் ஒருநிமிசம் என்கூட வாங்க என்று அந்த கிரவுண்ட் பகுதிக்கு சென்றேன்.  சரியாக அந்த எரியும் ஆள் இருந்த இடம் அங்கே கீழே மணல் மற்றும் சிலமரகட்டைகள் எரிந்ததுபோல் கருகி இருந்தது.  


வஜ்ரவேல் இங்க பாருங்க கட்டைகள் எரிஞ்சிருக்கு.. என்றேன்.. 


அதுக்கு என்னயா இப்ப.?..


அட நாம நேத்து ராத்திரி இங்கதான அந்த எரியுற பேய பாத்தோம்?. 


ஆமா அதத்தான் பாத்தோமே? .. 


கான்டபிள் 616 இந்தகாம்பவுண்ட் எகிறி குதிங்க.. குதித்தார் . திரும்ப எகிறி வாங்க.. யெஸ். என்றேன். 


என்ன அந்த எரியுற பேய் மாதிரி ஒருத்தன் வேசம் போட்டு எகிறி குதிச்சு வந்தாங்கிறீயா? என்றார் வஜ்ரவேல்.. 


அப்டி இல்ல ஒருவேளை கொலை செஞ்சவன் இந்தபக்கமா எகிறி வந்துருக்கலாம்ல.. என்றேன். 


ஆமால்ல . யோவ் 342 அந்த ஏரியா கேமராக்களையும் பாத்துடு.. 


நானும் எனது வீட்டிற்கு வந்து விட்டேன் இரண்டு நாட்கள் சென்றது எனக்குள் இன்னும் அந்த எரியும் உருவமும் . கரிய உருவமும் வந்து வந்து போயின. 


மூன்றாம் நாள் அமாவாசை இரவில் என் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். குறைந்தது 3 நபராவது இருக்க வேண்டும் கொஞ்சம் பதட்டத்துடனும் சுதாரிப்புடனும் கதவை நெருங்கி தாக்க தயாராக திறந்தேன் . ச்சைக் நீங்க தானா? 


வஜ்ரவேலும் 616ம் இன்னொரு கான்ஸ்டபிளும் இருந்தனர்  . மூவர் முகத்திலும் ஏதோ கவலையும் களைப்பும் தெரிந்தது.  என்ன என்று விசாரித்தேன்.. 


இருந்தாலும் நீ இப்படி பண்ணிருக்க கூடாது பவி . இப்ப நாங்க உன்ன கைது பண்ண வேண்டிய நிலைக்கு வந்துருக்க வேண்டியதில்ல.. என்றார் வஜ்ரவேல்.. 


என்ன சொல்ல வரீங்க வஜ்ரவேல் என்ன ஏன் கைது பண்ணனும் . ?...


மேலிடத்து உத்தரவு அது மட்டுமில்ல உங்க நெருங்கியநண்பர்  வள்ளிராஜன் தான் உங்கள கைது பண்ண சொல்லி உத்தரவு போட்டுருக்கார். மத்தபடி எங்களுக்கும் எந்த தகவலும் இல்ல.. என்றார் வஜ்ரவேல். 


என்னவென்று புரியவில்லை என்னுள் பல லட்சம் கேள்விகள் துளைக்கின்றன. அப்போதே என்கைகளை வளைக்கின்றது காவல்துறை வேறுவழியில்லை இவர்களுக்கு ஒத்துழைத்தாக வேண்டும்.. ஒருவேளை ஹரி கேஸை முடிக்க முடியாமல் என்னை நுழைக்கிறார்களோ?.  இல்லை சமயம் பார்த்து வள்ளிராஜன் பழி செய்கிறாரோ? புரியாமல் குழம்பும் என்னை கமிஷனர் ஆபிஸில் வைத்து விசாரிக்க அமர்த்தினர்.. 


சொல்லுங்க பவித்ரன் ஹரிய ஏன் கொலை செஞ்சிங்க?. உங்களுக்கும் ஹரிக்கும் என்ன பிரச்சனை?. என்றது ஒரு  போலீஸ் எஸ்ஐ. 


இல்லை இல்லவே இல்லை நான் ஏன் ஹரிய கொல்லனும் இன்பாக்ட் ஹரிய இதுக்கு முன்னால பார்த்தது கூட இல்ல .. உங்களுக்கு குற்றவாளி கிடைக்கலன்னு என்ன பலிகிடா ஆக்க பக்குறீங்க.. என்றேன்.. 


சரி ஹரிய நீங்க கொல்லன்னு கூட விட்டுறலாம் ஆனா ஆதாரம் உங்களுக்கு எதிரா நிறைய இருக்கு. அதகூட விட்டுறலாம் ஆனா. கான்ஸ்டபிள் 342 சௌரிய ஏன் கொன்னீங்க?.. என்றார் எஸ்ஐ. 


என்ன?  342 சௌரி கொல்லப் பட்டாரா?  என்று அதிர்ந்தது நானும் வஜ்ரவேலும் தான் .. 


பட் சாரி எனக்கிது தெரியாது  என்றேன் 


தெரியாது தெரியாது என்று அடிக்கவந்த  எஸ்ஐ யை தடுத்தார் வஜ்ரவேல்.. 


வஜ்ரவேல் சம்திங் கார்னரிங்மீ  என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல ப்ளீஸ் எதாவது புரியிற மாதிரி சொல்லுங்க. அட்லீஸ்ட் நான் வள்ளிராஜனயாவது மீட் பண்ணனும் ப்ளீஸ்.. என்றேன்.


வள்ளிராஜன் வந்தார். நான் முழுவதுமாக குழப்பப்பட்டிருந்தேன்.. பவி என்ன மன்னிச்சிரு எல்லாம் உனக்கெதிரா இருக்கு என்றார் வள்ளிராஜன்.. 


வள்ளிராஜன் நான் டிடெக்டீவ் எத்தனை கேஸ் பாத்துருப்பேன் நான் செஞ்சா இப்படி மாட்டும்படி செய்வனான்னு யோசிங்க. அதுமட்டுமல்ல எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. நான் அந்த வீட்டுக்கே டிடெக்டீவா தான் போனேன்.. 


பவி நான் உனக்கு ஓரளவுதான் உதவ முடியும். இதுவே பெரிய தப்புதான் . உனக்கு எதிரா இருக்குற சாட்சிகள நான் வெளியிடுறது. இருந்தாலும் உன்மேல இருக்குற நம்பிக்கைல செய்யுறேன். யோவ் மார்க்சிம் அந்த வீடியோவ ப்ளே பண்ணு... என்றார் வள்ளிராஜன்..


வீடியோவை ப்ளே செய்தார் மார்க்சிம் என்ற எஸ்ஐ.. 


திரையில் ஒரு அறையிரவு நேரம் கிட்டதட்ட 8 மணிஇருக்கும் . அதுவொரு மூன்று சாலைகள் ஒன்றுகூடும் இடம் . பொதுவாக இந்த இடம் அதிக கூட்டமில்லாததல் சிக்னல் வைக்கவில்லை ஆனாலும் வேகமாக வருவதால் பலமுறை விபத்துக்கள் நடப்பதுண்டு.. கான்ஸ்டபிள் சௌரி நாயகமும் அங்கு ரோந்து பணிக்காக இருந்தார் .  அப்போது அந்த வழியாக வந்த நான் அங்கு அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் . திடீரென அவரை ஓர் கத்தியால் 2 3 முறை குத்திவிட்டு ஓடுகிறேன்.. 


வஜ்ரவேல் என்னை ஒருமாதிரியாக பார்த்தார். 


வள்ளிராஜன் நிஜமா இது நானில்ல. வேற எதோ பெருசா நடந்திருக்கு. என்றேன் . 


எப்படி நிரூபிப்ப பவி . கோர்ட்ல இப்படி சொன்னா செல்லுமா? என்றார் வள்ளிராஜன் .. வஜ்ரவேல் என்னை குற்றவாளி போல் பார்த்தார் . அதுமட்டுமில்ல அந்த வீட்டுல இருந்து எடுத்த கைரேகைகள் உன்னோடதா இருக்கு என்றார் மார்க்சிம். 


வள்ளிராஜன் இது எப்ப நடந்தது? என்றேன்.. 


இன்னிக்கு சாயங்காலம் 8 மணிக்கு.. 


நோ சான்ஸ் வள்ளிராஜன் நான் 7 மணியில இருந்து வஜ்ரவேல் கூடத்தான் இருந்தேன் வஜ்ரவேல் என்ன வீட்டுல விடும்போது மணி 9 சோஇதெப்படி நடக்கும்.. என்றேன்.. 


ஒருவேளை இது அந்த பேயோட வேளையா இருக்குமோ என்றார் வஜ்ரவேல்.. 


யோவ் என்னயா பேய் பிசாசுன்னுட்டு வெளிய சொன்னா சிரிப்பாங்க. என்றார் வள்ளிராஜன்.. 


ஆனா பவி இந்த உருவம் நீதான் சட்டம் இததான் பேசும்  அதனால உன்கிட்டயே ஒப்படைக்கிறேன் நீயே தப்பிக்க வழிகண்டு பிடி கேஸ முடி... என்று கிளம்பினார் வள்ளிராஜன்.. 


வஜ்ரவேல் என்ன இப்படி ஆகிருக்கு? என்றேன்.  


அதான்பவி அப்பவே கேஸ க்ளோஸ் பண்ணிருக்கலாம்..என்றார் வஜ்ரவேல்


வஜ்ரவேல் நான் அந்த சிசிடிவி வீடியோ முழுசா பாக்கனுமே. 


சரி பவி மார்க்சிம் ப்ளே தட்.. என்றார் வஜ்ரவேல்..


மார்க்சிம் ப்ளே செய்த வீடியோவில் நான் கவனித்தது செளரியின் முகபாவனைகள் மட்டுமே. குத்திவிட்டு ஓடும் என்னை பிடிக்கவோ தொடரவோ முயற்சிக்கவில்லை . சாமானியர்களுக்கு இது சகஜம் ஆனால் காவல்துறையில் அப்படியல்ல..  


சௌரி தேடியது ஒரு துண்டு சீட்டைஅதில் எதையோ எழுதியிருந்தார். இதனை வஜ்ரவேலிடம் சுட்டிக்காட்ட அதனை அந்த மானிட்டரில் கொண்டுவந்தார்  மார்க்சிம்.


RS3 -C4- 14:06- 9:30 சௌரி என்றிருந்தது.. 


வஜ்ரவேல் உங்களுக்கு ஏதாவது தோணுதா ? இது என்ன விசயமா இருக்கும்.?.


தெரியல பவி எதோ கெமிஸ்ட்ரி மாதிரி தெரியுது. ஆனா அவர் கெமிக்கல் சம்பந்த பட்ட ஆளில்ல.. என்றார் வஜ்ரவேல்.. 


கொஞ்சம் யோசிங்க ?..


சரி நான் யோசிச்சி பாக்குறேன் நீ அந்த பங்களா கேஸ பாரு.. 


என்ன சொன்னீங்க வஜ்ரவேல்.? 


பங்களா கேஸ பாருன்னு.. 


வஜ்ரவேல் அந்த காம்பவுண்ட் பின்னாடி வர ரோட்டல சிசிடிவி பாக்க சொல்லி நீங்க சௌரிய தான அனுப்புனீங்க..?.


ஆமா. 


அப்ப இத அது சம்பந்தபட்டு பிரிச்சு பாத்தா.. RS3 C4 14:06 9:30. வலது பக்கம் 3வது பில்டிங். அதுல 4வது கேமரா 14ந்தேதி 6வது மாசம் 9:30 மணிக்கு இல்ல 30ந்தேதி 9வது மாசம் 2 மணிக்கு.. சீக்கிரம் போய் பாருங்க.. என்றேன்.


சரியா 53 மணி நேரங்கள் என்னை கமிஷனர் ஆபிஸ்க்குள் கவுரமாக சிறைவைத்திருந்தனர்.. கேட்ட உணவு கேட்ட புத்தகங்கள் என சகல சவுகரியம். எல்லாம் இந்த கேஸிலிருந்து நான் தப்பிக்க முயலும் வரைதான் அதுவும் வரையான(வரை - மலை) காரியம்தான். 


கமிஷனர் ஆபிஸ்க்கு ஒரு போன்வந்தது பழக்க தோஷத்தில் எடுத்துவிட்டேன் என்று உணரும் நேரம் மார்க்சிம் மற்றும்இதர காவலர்கள் என்னை விழுங்குவது போல பார்த்தார்கள் . ஆனால் லைனில் வஜ்ரவேல் என்றதும் விட்டுவிட்டார்கள். வஜ்ரவேல் எப்பாடுபட்டோ அந்த கேமரா காட்டிய ஆட்களை அள்ளிக்கொண்டு வந்து விசாரித்து பார்த்திருக்கிறார் ஒன்றும் புலப்படுவதாக இல்லை என்பதால் என்னையும் அழைக்கிறார் என்று  மார்க்சிமிடம் நான் சொன்ன போது என்னை ஒரு குற்றவாளியாக பார்த்தான் . பின்னர் நீயும் கூட வா என்றதும் இணங்கினான்.. 


வஜ்ரவேலின் ஸ்டேஷன் சென்ற போது மனம் பதறத்தான் செய்தது பல முறை பல காரியங்களுக்காக வந்த போதும் இப்போது ஒரு பதட்டம் காரணம் இம்முறை குற்றமில்லா என்னை காப்பாற்ற வேண்டிய கட்டம்... இந்திய அரசியல்சட்டப்படி குற்றம் செய்தவர் கூட எளிதில் வெளிவந்திடலாம். குற்றம் செய்யாதவர் சில ஆயுள்களை தர வேண்டியிருக்கும்.. 


உள்ளே லாக்கப்பில் 5 பேர் இருந்தனர். ஒரு பத்து நிமிடம் அவர்களை நோட்டமிட்டேன்.. வெளியே வந்து வஜ்ரவேலிடம் அந்த3வது ஆளை மட்டும் தனியா கூட்டிவந்து விசாரிக்கனும் என்றேன். 


ஏன் பவி. 


மீதி நாலு பேருக்கும் என்ன தெரியல இவன் மட்டும் என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு தெரியாதது போல் நடித்தான் அதனால.. 


இதெல்லாம் ஒரு காரணமா பவி.. 


இது தான் முக்கிய காரணம் வஜ்ரவேல் . ஒருவேளை இவன் என்ன பாத்திருந்தா எங்கெல்லாம் பார்த்திருக்கலாம்?. 


ஒரு டிடெக்டீவா 

ஒரு கேஸ்ல எதாவது ஆப்போசர்ன்ல

இல்லனா ஒரு காபிபார்ல

இல்லனா...  என்றார்வஜ்ரவேல்.


இல்லைனா அந்த பங்களாவுல.

இல்ல சௌரி கொலையில... சரியா? இதுல எங்கெல்லாம் பார்த்திருந்தா இப்பஎன்கிட்ட சகஜமாபேசலாம்..?  


டிடெக்டீவ் கேஸ் காபிபார்ன்னு . அப்ப இவன் தான் கொலைகாரன்கிறியா பவி . 


இல்ல இவனுக்கு அது சம்பந்தமா ஏதோ தெரிஞ்சிருக்கலாம்.  என்றேன்.


அப்ப இது பேய் பண்ண வேலையில்லையா? பவி.. 


அட என்ன வஜ்ரவேல் இவ்ளோ வீக்காவா இருப்பீங்க.. பேய் பண்ணுமா என் கைரேகைய எடுத்து அங்கங்க வெக்குமா? முதல்ல பேயன்னு ஒன்னு இருக்கா?. 


அப்ப எப்படி நடந்ததுங்கற? . 


வஜ்ரவேல் ஆரம்பத்துல இருந்தே எனக்கு சில சந்தேகம் இருந்தது . அதெல்லாம் சொல்றேன் பாருங்க.


முதல்ல பங்களா பக்கத்துல இருந்த யாரும் பேய் இருந்ததாவோ அமானுஷ்யமா எதும் நடந்ததாவும் சொல்லல. 


சுப்பையான்னு ஒருத்தன் 3 மாசம் முன்னாடி வர இந்த பங்களாவ பாத்துக்க இருந்திருக்கான். 


ஒருவேள பேயாவே இருந்தாலும் ஹரிய கொன்னது எப்பவும் எல்லா சமயத்துலயும் கூடவே இருந்த அர்ஜுன எதும் பண்ணல 


அப்புறம் நம்மளயுமே ஒன்னும் பண்ணல . இங்க தான்என் சந்தேகமே அதிகமாச்சு. 


அப்புறம் அர்ஜுன் சொன்னது போல அந்த எரியுற ஆள் வீட்டுக்குள்ள வரல ஏன் நார்மலா எரியுற ஆளா இருந்தா வலியில ஓடுவான் அங்க நகரவேயில்ல. 


அதவிட நான் ராத்திரி பாத்தப்ப எரியுற ஆளோட நெருப்பு காத்து வீசுற பக்கமா சாயல. எரியுற பிணங்கள நான் பலமுறை பார்த்துருக்கேன் அங்க வர புகை இங்க இல்ல.. 


என் கைரேகை அங்க இருந்தது அந்த ராத்திரியில தான் அத இதுக்கு முன்ன எடுத்த ரிப்போர்ட்ல எப்படி வரும்?. 


இப்படி பல கேள்வி இருக்கு அதுல ஏதாவது அவனுக்கு தெரிஞ்சிருந்தால் கூட நமக்கு ரொம்ப நல்லது.. அப்புறம் சுப்பையாவுக்கு அப்புறம் அந்த பங்களாவ பாத்துக்க யாராவது இருந்தாங்களா என்று விசாரிச்சு பாருங்க.. என்றேன்.


சரி பவி என்னமோ புதுசா குழப்புற எனக்கு எதும் சரியாபடல. சரி யோவ் 616 ச்ச மாரிமுத்து அந்த பங்களா பத்தி விசாரிக்க சொன்னனே என்னாச்சு.? என கேட்டார் வஜ்ரவேல். 


விசாரிச்சேன் ஐயா அந்த பங்களா ஓனரு மும்பையில ஏதோ எக்ஸ்போட் கம்பனி வெச்சிருக்கார். அந்த வீட்டுல இவரு சொல்ற மாதிரி எந்த குடும்பமும் இருக்குல அது அந்த மும்பை பார்டியோட கெஸ்ட் அவுஸ் தான். எப்பவாவது வருவாங்க. சுப்பையா தான் பாத்துக்கிட்டான் டெங்கு ஜொரம் வந்து அவன் போய்ட்டான் அதுக்கப்புறம் மும்பையிலிருந்தே ஒருத்தன இங்க பாத்துக்க அனுப்பிருக்காங்க. அவன் போட்டோ இந்த கம்ப்யூட்டர்ல அனுப்பிருக்கேன் பாருங்க. - மாரிமுத்து


நானும் வஜ்ரவேலும் பார்த்த போது தான் அதிர்ச்சி .. பவி கேஸ் முடியப் போதுவா என்று ரெண்டு பேரும் ஜீப்பில் ஏற ஜீப் நேராக அர்ஜுன் வீட்டிற்கு சென்றது. ஆனால் அர்ஜுன் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடியிருக்கிறான்.. ஓமனில் இருப்பதாக தகவல் ..நேற்று தான் சென்றிருக்கிறான்.. ஈஸி ஈஸி பிடிச்சரலாம் பட் எவிடன்ஸ் வேனும். எப்படியும் ஓமன்ல ஒரு ரெபரன்ஸ் கேப்பாங்க.. 


அர்ஜுன் தான் காரணம் எல்லாவற்றுக்கும் அவன்தான் காரணம். ஆனால் இந்த எரியும் ஆள் கரிய உருவம் அந்த பெரியவர் .கடைசியாக சௌரிய குத்திய நான். எல்லாம் எப்படி சிங்க் ஆகும் எப்படி சாத்தியம்.. 


வஜ்ரவேல் ஜீப்ப முதல்ல ஸ்டேஷனுக்கு விடுங்க அந்த பையன விசாரிக்கனும் முதல்ல.. 


வஜ்ரவேல் போனில் சொல்ல.. நாங்கள் செல்லும் போது அவனை முடிந்தளவு கொத்து பரோட்டா செய்து வைத்திருந்தனர். 


நாங்கள் கேட்ட போது முதலில் மறுத்தான். பின்னர் ஒத்துக்கொண்டான். 

காரணம்  மும்பையில் அர்ஜுனுடன் அவன் எடுத்த புகைப்படம்.. 


ஆம் நாங்க தான் ஹரிய கொன்னோம் . எங்க கூட உயிரா இருந்த ப்ரண்ட் அசோக்க அவன் கொன்னுட்டான். அதுக்காக அவன கொன்னோம். ப்ளான் பண்ணி கொன்னோம். - 3வது ஆளான மித்ரன். 


சரி கொன்னிங்க இந்த பங்களா இந்த அமானுஸ்யங்கள் எல்லாம் எப்படி? 


விர்சுவல் ப்ரோஜக்ஷன். 


அப்படின்னா?.


விர்சுவல் ப்ரொஜக்ஷன் னா ஸ்க்ரீன் இல்லாம வெட்ட வெளியில ஒரு படத்த காட்டறது. ஒருவகையான ஹாலோகிராம் மாதிரி. 


ஆனா அதுக்கும்  ஸ்க்ரீன் வேணுமே..(ட்ரான்ஸ்பர்ட் ஸ்க்ரீன் பயன்படுத்துவர்) அதில்லாம் எப்படி செஞ்சீங்க..? 


லைட் இருந்தது அத மறைச்சோம் . முதல்ல அந்த எரியுற ஆள ரெடி பண்ணோம் அதுக்கு ஒரு கட்டைய எரிய வெச்சி அதோட நெருப்பு மேல ப்ரோஜெக்ட் பண்ணோம். அந்த நெருப்ப எங்க ஸ்க்ரீனா பயன்படுத்திக்கிட்டோம்.  நீங்க பாத்த அந்த பெரியவருக்கு நாங்க சீனரிய ஸ்க்ரீனா யூஸ் பண்ணோம்.  


அப்படின்னா? 


ஒரு கண்ணாடி ப்ளேட்ட தரையில வெச்சி அந்த கண்ணாடியில இருந்து ப்ரொஜக்ட்  பண்ணலாம். அதயே தான் சௌரிக்கும் பண்ணோம். காரணம் சௌரிக்கு எங்கள பத்தி தெரிஞ்சிருச்சி. அப்ப நாங்க தப்பிக்கனும்ன்னு தான்.. 


ஆனா எப்படி பேசவோ தொடவோ முடியும். 


பேசறது வெறும் ஸ்பீக்கர் அதுல ஒரு சென்சார வெச்சி எங்களுக்கு வேணும்ங்கிற வாய்ஸ்ல ப்ளே பண்ணோம்.  தொடுறதுக்கு ஒரு சென்சார் இருக்கு அதுமூலமா உங்க உடம்புல தொட்ட மாதிரி உணர்வ ஏற்படுத்தலாம்.. 


ஆனா கத்தி எடுத்து குத்துறது நடக்காதே ஒரு ப்ரொஜக்ஷன் மெட்டிரியல் ரியலா குத்துமா என்ன?. 


அங்க தான் எங்க டெக்னிக்க நாங்க யூஸ் பண்ணோம் . அர்ஜுன் தான் அங்க சௌரிய குத்துனது ஆனா அர்ஜுன் மேல நான் உன்உருவத்த ப்ரொஜ்க்ட் பண்ணேன் . அதுல கொஞ்சம் குழப்பமாகி அதுல அர்ஜுன்ங்கிறது சௌரிக்கு தெரிஞ்சிருச்சி . அதனால தான் குத்திட்டு ஓடி வந்துட்டான். இல்லைனா சௌரியவும் ஹரிய போலவே எரிச்சு . உன் மேல கேஸ திருப்பி விட்டு  தப்பிக்குறது தான் எங்க ப்ளான்.  


ஆனா என்ன எப்படி ஸ்கேன் பண்ணீங்க.? அப்புறம் என் கைரேகை எப்படி போச்சு?. 


நீ அந்த பார்க் கிரவுண்ட வந்து காம்பவுண்ட எட்டி பாக்கும் போது தான் நாங்க உன் கையில கிளவுஸ் இல்லங்கிற கவனிச்சோம். அதனால உன்ன எங்கயாவது கைவெக்க வெச்சி அந்த ரேகைய பழைய போலீஸ் ரிப்போர்ட்ல மாத்துறது தான் வழின்னு முடிவு பண்ணோம் நீ மாடி ரூம்ல அந்த கப்போர்ட திறக்கும் போது அந்த கைரேகைய காப்பி பண்ணோம். 


ஆக சில டிஜிட்டல் சமாச்சாரத்த வெச்சி கொலை பண்ணிட்டு தப்பிக்க பார்த்துருக்கீங்க. வஜ்ரவேல் கேஸ் ஓவர் என்று விட்டுவிட்டு வந்தேன்.. 


சில நாட்களுக்கு பிறகு வஜ்ரவேல் வந்தார் . இத பாரு பவி என்று என்னிடம் ஒரு போட்டோவை காட்டினார்.. போட்டோவில் . அர்ஜுன் மித்ரன் அப்புறம் நான்.. என்ன இது என்று புரியாமல் கேட்டேன்.  


உன்ன மாதிரி இருக்குற இவன் பேருதான் அசோக். இவனுக்காக தான் இத்தனை கொலை எல்லாம். சௌரிய இவங்க கொன்னது இவனோட உருவத்துல தான் நாம தான் நீயின்னு குழப்பிகிட்டோம். சரி நான் வரேன் . சீக்கிரமே எங்க டூர்ன்னு சொல்லு .  என்றார் வஜ்ரவேல்.. 


அவர் சென்றதும் ஒரு ஸ்ட்ராங் காபி போட்டு குடித்தபடியே என் அறையினுள் இருந்த ரகசிய அறையை திறந்தேன் அந்த விர்சுவல் ப்ரொஜக்ஷன் பாகங்கள் எல்லாம் சரி பார்த்துக் கொண்டேன். பாவம் மித்ரன் அர்ஜுன் என்னும் தியாகிகள். அவர்கள் என் நண்பர்களும் கூட... 


நான் ஏன் கொல்லனும். அதுக்கு அவங்க ஏன் தண்டனைய ஏத்துக்கனும். அத ஏன் நானே கண்டுபிடிக்கனும் .  யோசிச்சிக்கிட்டே இருங்க ஒரு காரணம் கிடைக்கும். கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள் .. பார்க்கலாம் யாராவது கண்டுபிடிப்பார்கள். 



(ஒரு நண்பன் இருந்தால் - நல்ல

நண்பன் இருந்தால் - நாம்

இரு கொலைகள் கூட செய்யலாம்.. இது என் ப்ரண்ட் சந்தோஷ் எழுதி கவிதைன்னு சொல்லிக்கிட்டது. ஆனா இது இப்படி ஒருகதையை தந்தது )

1 تعليقات

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم