செஞ்சொற் பொருள்

அல்குல் - கண்புருவம் / பெண்குறி

திகிரி - வட்டவடிவம் / உருளை

சென்னி - தலை / உச்சி / சிறப்பு

வார் - நெடுமை (தூரம் ) / நீர் / மேகம்/ நுண்மை / துண்டம்.
  [ கடல் , அறிவியல் , மழைக்கு உருவகபடுத்தலாம்]

ஓர்மம் - மனோதிடம் / ஒன்றுபடுதல்

பவ்வம் - கடல்/ நுரை/ நீர்குமிழி / பருவகாலம் / மரக்கணு.

மாகம் - மேகம் / சொர்க்கம்/ மேலிடம்/ ஆகாயம் / வளி

நட்டிருள்- நடுஇருள் / சாமம்.
சாமம் - 3மணிநேரம் 71/2 நாழிகை / அறுகு /கருமை / பஞ்சம்

கொற்றம் - வீரம் / வெற்றி /வன்மை / அரசியல்

ஞாதம் - அறியப்பட்டது / காண்பது

எவ்வம் - துன்பம் / இளிவரவு / மானம் / கபடம்/ வெறுப்பு./ தீராமை

நுதி - நுனி / தலை /அறிவுக்கூர்மை / முனை

நனி - மிகுதி / பெருமை

கணி - காளை / சித்திரம் / வேங்கை / சோதிடன்..

யாண்டும் - எப்போதும் / எவ்விடத்தும்

ஞாழல் - மஞ்சள் மலர் / கொன்றை

ஊழி - கடற்கோள் / நெடுங்காலம் / முறைமை

நையம் - மூக்கிலிடும் மருந்து / காக்கை

பைஞ்சுதை - சிமண்ட் கலவை

பையம் - கூடை / கோரைப்புல்.

தேயம் - இடம் / களவு / பணையம் / கொடைப்பொருள்

மசி - மை / க்ரீஸ் / நசுக்குதல்

விரசம் - வெறுப்பு / நிந்தை

விடம் - நஞ்சு / பாடாணம் / கயமை / தாமரைநூல் / மலை/ மரக்கொம்பு.

புடம் - கண்ணிம் / உள்வளைவு / தூய்மை / மூடி / கோள்களின் தினசரி போக்கு

புரணம்- நிறைவு; அசைகை; துடிக்கை; தோன்றுகை; மயக்கம்; ஒளி

மேழி - ஏர்
நல்குரவு - வறுமை/ஏழ்மை.
இடு்ம்பை - துன்பம்.

ஊழ் -  விதி /கர்மா
வெய்யம் - சூடு.

கன்னல் - கரும்பு

நித்திலம் - முத்து

ஆழி - கடல்

கேள்வன் - கணவன்

கிழவன் - தலைவன்

ககனம் - வானம்.

நவிழ் - சொல்உதிர்த்தல் - பேசுதல்.. சத்தமிடல்

துவி - இரண்டு

வேய் - மூங்கில்
கழு - கோரைப்புல், கிளையில்லா மரம்
எயிறு - பல்
கெழீயிய - எளிமையான
கோட்டு - கொம்பு
எயில் - மதில் / கோட்டை / அரண்
நிரை - கூட்டம்!

அங்கதம் = தோளணி, அரவுஅசைதல் = ஆடல், தங்கல்அடுதல் = சமைத்தல், கோறல்(கொல்லுதல்)அண்டர் = தேவர், ஆயர்அண்ணல் = பெருமை, தலைவன், பெருமைஅணங்கு = தெய்வம், துவமை(துறக்க)மாதர், மையல், நோய், வருத்தம், கொலை,அணி = பூண், அழகுஅந்தம் = ஈறு, அழகுஅந்தில் = அவ்விடம், அசைநிலைக் கிளவிஅம்பரம் = கூரை, கடல், ஆகாயம்அமர்தல் = மிகுதி, பொலிவுஅயில் = வேல், கூர்மைஅரணம் = மதில், கவசம்அரலை = கழலை(உடலில் தோன்றும் கட்டி), கனியின் காழ் (பழத்திலுள்ள கொட்டை)அரி = கண்வரி, கடல், பொன், கிண்கிணிப்பரல், (கிண்கிணிப்)பொன், நிறம், குதிரை, தவளை, குரங்கு, பகை, வாள், சயனம், வலி, வண்டு, வெம்புகை, (என்னும் 15 பொருளுடன்) சிங்கம், திருமால், திகரி, இரவி, இந்திரன், காற்று, யமன், அங்கி, (ஆகிய வடமொழிச் சிதைவும் பொருளாம்)அரில் = பிணக்கு, சிறு-துறும்பு, குற்றம்அருகல் = சுருங்குதல், காதல்அருணம் = சிவப்பு, ஆடுஅலரி = பூ-மரம், அருகன்அழுங்கல் = இரக்கம், கேடுஅளக்கர் = கடல், நிலம், சேறுஅளகம் = மாதர் மயிர், மரவின் முள்ளை(திருவையின் முளை)அளி = வண்டு, மது, கொடை, அன்புஅற்றம் = மறைபொருள், சோர்வுஅறல் = அறுதல், நீர், நீர்த்திரை, திரையலையால் சேரும் கருமணல்அன் = கூர்மை, செறிவுஆகம் = மார்பு, உடல்ஆசு = சிறுமை, குற்றம், விரைவு, மெய்-புகு-கருவி (கவசம்)ஆணை = ஏவல், மெய்ப்பாட்டு இலாஞ்சனை(முத்திரை), சூள், விறல், செயல
்ஆய்தல் = நுணுக்கம், தெரிதல்
ஆயம் = கூட்டம், சூது-கருவி
ஆர் = கூர்மை, ஆத்தி-மலர, தேர்ச்சக்கரத்-துளை
ஆர்தல் = நிறைதல், உண்டல்
ஆரம் = சந்தனம், மாலை, பூண், ஆத்தி, முத்து,
ஆரல் = செவ்வாய்க்-கோள், கார்த்திகை-நாள்
ஆலுதல் = ஆடல், ஒலித்தல
்ஆற்றல் = வலி, செயல், வல்லார்-ஆற்றல், ஆள்வினை
இடி = தகரம், சுண்ணம், தருப்பணப்பிண்டி,
இதழ் = பூவின் தோடு, பனை-இதழ், வாயின் அதரம்
இதை = மரக்கலப் பாய், புதுப்புனல
்இயல் = சாயல், நடை
இரங்கல் = அரவம், அழுஙல், இசைத்தல்
இரலை = தலைநாள்-பெயர் (அசுவணி-நாள்), ஊதுகொம்பு, புல்வாய்-மான், கலைமான்
இராகம் = கீதம், நிறம், செந்நிறக் கெழு, ஆதரவு, முடுகியல

்இருத்தல் = செகுத்தல், வீழ்த்தல்
இவர்தல் = சேறல், எழுச்சி, செறிவு, விருப்பம், ஏறல்
இழும் = ஓசை, இனிமை
இளைமை = இளமைத் தன்மை, மத்தம் (பித்து)
இறத்தல் = மிகுதல், கடத்தல், சாதல்
இறுத்தல் = தங்கல், சொல்லல்
இறும்பூது = வியப்பு, இராசீலம், சிறு-தூறு, மலை

(4)இறை = கடன் (கடமை), இல்லினில் இறப்பு (இறைவானம் என்னும் கூரைச்சரிவு), சிறுமை, தங்கல், உயர்ந்தோர், சிறந்தோர்

உடு = நாள்-மீன், பகழி (அம்பு)
உணர்தல் = கருதல், தெளிவு
உந்தி = கொப்பூழ், தேர்-அச்சு, யாழ்-உறுப்பு
உம்பர் = மேலிடம், அமரர்
உருத்தல் = தோன்றல், வெருட்சி (மருளல்)
உலவை = மரத்தின் கோடு, மருப்பு, காற்று,
உழை = மான், யாழின் நரம்பு, அருகிடம், அறைதல
்உறழ்வு = இடையீடு, உணர்வு, ஒத்தல், செறிவு
உறை = நீர் முதலாகிய நுனி, மருந்து, முதல்-நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருள், கூறை மாசு கழுவும் உவர்நீர் (புதுத்துணியின் அழுக்கை நீக்கும் உவர்நீர், பாலுறு பிரை, காரம்(சுவை) ஒழுகல், ஓர் இடைச்சொல்
ஊக்கம் = வண்மை, முயற்சி, மனத்தின் மிகுதி, உண்மை
ஊர்தி = தேர், மா, சிவிகை,
ஊறு = இடையூறு, கொலை
எஃகு = வேல், கூர்மை
எகினம் = கவரிமா, அன்னம், நாய்,எதிரி = மோதும் இருதிறப் படைஎல் = ஒளி, இரவி, பொழுதுஎல்லை = பகலவன், அளவைஎள்ளல் = நகை, இகழ்ச்சிஎற்று-எனல் = எற்று-எனல், எள்(ஏளனம்ஃ-செய்)-எனல்
எற்றுதல் = புடைத்தல், எறிதல்
ஏண் = வலிமை, நிலையுடைமை
ஏணி = மரன்-கன்று, எல்லை
ஏமம் = சேமம், காவல், இன்பம், இரவு, பொன், ஏமாப்பு, மயக்கம்
ஏவல் = வியங்கோள், ஆணை
ஏற்றல் = கோடல், எதிர்த்துப் பொருதல்
ஏனை = மீன்-விகற்பம், ஒழிவு
ஓதி = மாதர்-மயிர், மாலை, அன்னம்,
ஓரி = ஆடவர்-மயிர், முசு(வாலில்லாக் குரங்கு)
ஓரை = கூட்டம், மகளிர்-விளையாட்டு, இராசி(களில் ஒன்று)

அள்ளல் - மண் / சேறு / தூசி

பழனம் -  வயல்/பழமையான / குளம் /

மாந்தல் - உண்ணுதல்

துரவு - வயல்பாய்சலுக்காக சேமிக்கபட்ட ஏரி / குளம்.

அளி - வண்டு
நத்து - விருப்பம்
வாவி - குளம்
பத்தி - வரிசை
தகை - அன்பு அருள் மேன்மை பொருள் குணம்.

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم