நா. முத்துக்குமார்

நா.முத்துகுமார் ..

திரையிசை தமிழில் கிளர்ந்த நான்காம் பிரளயம்.. யதார்த்த வரிகளின் யட்சன் அவன்.. அவன் கவிதைகள் பாமரனின் சொல்கொண்டு செய்த வேதம். 

நெடுங்காலமாய் எங்கள் தமிழ்கடல் தன்னுள்ளே பொதிந்து வைத்திருந்த அரிய முத்து அவன்..

இலை வடிவ இதயத்துள் மலை அளவு கவிதை சேர்த்தவன்.. எங்கள் பேரின்பத்தின் நளின ஊற்று அவன் வரிகள். .. அவன் எங்கள் பேரன்பின் ஆதி ஊற்று. ..

இயற்கையின் காதலன்.. உவமைக்கு பொய்யுரைத்தவர் மத்தியில் இயற்கையின் நிஜத்தை உவமைக்கு உரைத்தவன் .. இவன் நம் காலத்து பாரதி..

மூங்கிலுக்கும் நதிக்கும் இலைக்கும் மீனுக்கும் மட்டுமே புரியும் அவனில்லாத காலத்தின் துயரம்..

மஞ்சள் வானில் வெள்ளை நிலவு எங்கள் முத்து.. கடுமையான வெயிலிலும் கடுமையான குளிரிலும் வாழும் வரிக்குளம் எங்கள் முத்து...

அவன் ஆதியும் அந்தமும் ஆனதொரு கவிஞன்.. பிறிதொரு துயர்சொல் சொல்லாத சொல்லின் செல்வன் ...

தன்னம்பிக்கை நிறைந்தவன் எங்கள் முத்து.. அதனால் தான் அவன் வரிகள் இன்றும் நம்பிக்கை தருகிறது...

அன்னை பாசமென திரிந்த திரைக்குபின்னிருந்து தந்தையின் பாசமதை உலகுரைத்தவன்..

அவன் வரிகள் வைரத்தை போல பட்டை தீட்டியவையல்ல.. அவை காகித பென்சிலை கூர்மை செய்வது போல எளிமையானது..

இதோ எங்கள் முத்துகுமாரின் ஈற்று சொத்துக்கள்...

பெருந்துன்பம் பழகி போனாலே சிறு துன்பம் ஏதும் நேராது.
தண்ணீரில் வாழும்மீனுக்கு ஏது குளிர் காலமே..

இங்கே தெரியும் சிறிய மலை
இயற்கை தாயின் பெரிய முலை
பருகும் நீரில் பாலின் சுவை..

ஆம் அன்று பாரதி சொன்னான்.. எளிய சொற்கள் எளிய பொருள் ஏழைகளுக்கான செய்தி.. என அவை முத்துகுமாருக்கும் பொருந்தும்..

முத்துகுமார். மூங்கில் விட்டுச் சென்ற காற்று.. தூண்டிலில் சிக்கிய மீன்.. புயல் பறித்து சென்ற மலர். ... வெயில்  கடத்திய நீர்.. மாறி வருவான் மாரியாக...

முத்துகுமார் கொதிகலனிலிருந்து வந்த ஞான நிலவு.. கலைக்கடலை தேடிவந்த காஞ்சிபுரத்து நதி....

மறைவில்லை அவன்.. நம் மனதினுள் தூர் எடுத்துக்கொண்டிருக்கிறான்... காலம் அவனை விரைவாக வாசித்துவிட்டது.. ஞாலம் அவனை விரைவாக விதைத்துவிட்டது...


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم