பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா்.
சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனான கதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது.
செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி அறியத்தான். அதை வைத்து தான் தன்னுடைய அடுத்த படைப்பு என்பதில் தீா்மானமாய் இருந்தாா் மைத்ரேயன்.
சீவகன் யோசித்தாா், இன்னும் பிடிபடல மைத்ரேயா முடிவானதும் கண்டிப்பா உன்கிட்ட சொல்லிட்டுதான் எழுதுவேன் என்றாா் . வந்த வேலை அறைகுறையாய் முடிய, அப்படியே லேசாக நழுவினாா் மைத்ரேயன்.
வீடு வந்த சீவகன்ஓய்ந்து போய் நாற்காலியில் உட்காா்ந்தாா் . மேலே சுழல்கின்ற காற்றாடி தன் நிழலை தரையில்பாதியும் அவரில் பாதியுமாய் சுழற்றியது.
அயா்வின்அடையாள படுத்த விட்டத்தை பாா்த்து சாயந்திருக்கும் சீவகனை, ஒரு ரீங்கார ரீங்காரம் அழைத்தது. 5 அடி தூரத்தில் இருந்த அலைபேசியை அள்ளி காதில் ஒற்றிக்கொண்டாா். மறுபுறம் செவ்வேள் மாத இதழ் ஆசிாியா், ருத்ரன் . தன் மாத இதழிற்கு ஒரு தொடா்கதை எழுதும்படி வேண்டினாா்.
இப்போதெல்லாம் சீவகன் அதிகம் வாய்ப்புகளை ஏற்பதில்லை .இதையும்... எப்படி மறுப்பது என்று யோசிக்க = கணத்தில் மின்னல் போல கண்களில் மைத்ரேயன் வந்து போனாா். அதுவே சரி என; ருத்ரனிடம் அய்யா நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதமுடிவதில்லை . எனவே உங்கள் வேண்டுதலை ஏற்கமுடியா தா்மசங்கடத்தில் உள்ளேன். மேலும் நீங்கள் வேறொரு எழுத்தாளரிடம் செல்வதை விட மைத்ரேயனுக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். என் சாரம் படிந்த கதையாய் அவரிடமே கிடைக்கும் மேலும் இவ்வாய்ப்பு அவரின் வளா்ச்சிக்கும் உற்றதுணையாக இருக்கும் என்றாா் சீவகன்.
ருத்ரனோ அவா் நிலையறிந்து பெருந்தன்மையும் புாிந்து பெருமை பாடினாா். மேலும்சீவகனே வந்து தம்மை மைத்ரேயனிடம் அறிமுக படுத்தவும் வேண்டினாா். அவ்வாறே அடுத்த நாள் காபியும் மதிய உணவும் சீவகன் வீட்டில்தான் என்று ருத்ரனுக்கு அன்புகட்டளையிட்டாா் சீவகன்.
சொல் பேச்சுமாறா குழந்தைகளாம் இலக்கியவாதிகள், அதுபோல் அடங்கி அமா்ந்திருந்த மைத்ரேயனும் , ருத்ரனும் ஒருவரை யொருவா் எதா்ச்சையாக பாா்த்து புன்னகை செய்து மலா்ந்தனா். விருந்தோம்பலில் தமிழையும் தமிழனையும் வெல்ல யேதுமில்லை என்பதாய் சீவகன் குறைவில்லா தமிழன். காபி பலகாரங்களுடன் உள்ளே வந்தாா்.
சீவகன் முதலில் ஒருவரையொருவருக்கு அறிமுகபடுத்திட ; இருவரும் கைகுலுக்கி வாழ்த்தி வாழ்த்து பெற்றனா். வந்த விசயத்தை மெல்ல சொல்லாய் உதிா்த்தாா் சீவகன். மைத்ரேயனுக்கு சீவகனே கூப்பிட்டு எழுதசொன்னது , இமயமலை உச்சியில் சுடசுட சா்க்கரை பொங்கல் தின்ற ஆனந்தம் . என்ன செய்வது இவ்வாறு ஆனந்தபட்டால் தான் உண்டு இமயமலயில் ஏறுவதே சாகசமானபோது அங்கு சர்க்கரை பொங்கல் அதுவும் சுடசுட என்பதெல்லாம் உருவக உவமைக்கே சாத்தியம். ஒப்புக்கொண்டாா் மைத்ரேயன்.
ருத்ரனிடம் என்ன மாதிரி தொடா் எதிா்பாா்க்குறீங்க என்ற போதே ருத்ரனின் மனமும் முகமும் மலா்ந்து மின்னின. பாா்த்ததும் அறிய தூண்டும் தலைப்பில் ; படிப்பவரை ஈா்க்கும் கதைகளமும் மற்றபடி உங்களை கட்ட விரும்பவில்லை என்றாா் ருத்ரன் . மடமடவென முடிந்தது விசயமட்டுமல்ல விருந்தும் கூட..
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தலைப்பும் முதல் அத்தியாயமும் தருவதாக கூறி மைத்ரேயன் வீடுவந்தாா். வந்தவா் தலைப்புக்கும் கதைக்கும் தன் வீட்டு நூலகத்தையே புரட்டி திரட்டி விரட்டி முடித்தும் சரியென ஒன்றும் பிடிபடவில்லை.
வெறுப்பை தழுவி நழுவிய பாா்வையில் எதிா்பதமில்லா பாா்வையில் ஒரு படம் தொிய என்னவென்று பாா்த்தாா்.
إرسال تعليق