Sung by - Bharani Mahesh
அறியாத சிறுபிள்ளை எனக்கென்று நல்லறிவை என்றும் தருகிற (tharugindra) குருவே.. 
அனுபல்லவி 1
கலையாவும் முனைப்புடனே நித்தமெனக் கருளும் மனம்தனை தினம் பணிவேன் குருவெனும் கடவுளே. 
சரணம் 
ஏற்றவடிவினில் எனக்கறிவினை தந்தாய் , ஏணியென என்னை உயர்த்திடும் சேவை செய்தாய். 
கீர்த்திபல நான்பெறவே தந்தாய் பெரும்ஞானம் - வாழ்வு
முழுதிலுமுன் கருணைக்கு ஈடேது...
அறியாத சிறுபிள்ளை எனக்கென்று நல்லறிவை என்றும் தருகிற (tharugindra) குருவே.. 
அனுபல்லவி 2 (while repeating) 
ஒருகீதம் உனைப்புகழ சித்தமெனக் கிருந்தும் மொழியது துணை வருமோ ஆசறு தலையே..
பல்லவி (finishing) 
உனைபாடும் பொருள்தேடி இணையில்லா புகழ்கண்டேன் குருவே உன் (thiruvadi) சரணம்

0 تعليقات