நன்மை

நன்மை எனவே நாடோறும் வந்தமரபின்
நுண்மை அறியா நாத்திகனை சாத்திடுவேன்
வன்மை உளதாய் வாய்மையென முறைகெட்டு
திண்மை தெரிய பொய்யுரைக்கும் நாத்திகனை

மென்மை கருதி மேயவிட்டால் சாடுபவனை
வன்மை படவே வாயடைத்தால் ஓடுபவனை
இன்மை எனவே யாமுறைக்கும் பேரிறையை
இழிய தூற்றும் நாத்திகனை சாத்திடுவேன்.

பழியும் பகையும் பூசைபுகழும் நேசதமக்குள்
ஒழியும் வளரும் ஓரமிருந்து ஓத்தோதும்
இழிய செயல்புரி நாத்திகனை சாத்திடுவேன்
அழிவும் பொழிவும் ஆண்டவனென சொல்கிறேனிங்கு

அறியா தறைகுறை அளந்துவிடும் அறிவாளிகளை
வரியா லறிவுறுத்த வாயால்வாழ் தற்குறிகளை
பரிந்து விடலாமென்றால் பிறாண்டி வாய்கிளறும்
கரிந்த கருத்தினை காட்டிவாதம் செய்கிறவனை

எரிந்த சாம்பலை எடுத்துபூசும் என்றிழியும்
செரிந்த மூடனுக்கு செய்தியுரைப்பின் சரியாகுமோ
சொரிந்து நோண்டினால் சட்டென்று கொசவினை
கொல்வ தில்லையா? கல்வியால் மாறினேனென்ற

நாவலர் தம்மில் நாத்திகனை கண்டாலினி.
நாலே கேள்விக்கு பதில்கேளுங்கள் பகுப்பதுவன்றி
நல்ல காரியம் பகுத்தறிவில் தாம்செய்ததென்ன?
வல்ல கடவுளை வாயாற தூற்றியும்
வயிறு வளர்த்த வரலாற்று கதையென்ன?

ஆமென்கடவுள் கள்ளன்தான் பிள்ளைகறி கேட்டவன்தான்
ஆடைதிருடிதான் அடங்காபிடாரிதான் ஐந்தாறு மனைவியன்தான்
பாடிபுகழென வேண்டிபெறுவன்தான் ஓடிஔிந்து நிற்பன்தான்.
கூடிபாவத்தை பார்த்துகிடப்பன்தான் அதனாலன்பரே உமகென்ன?

சாடியிங்கு சாதிக்க என்னவுண்டு? எம்மைமாற்ற
ஈடாயெங்கு என்னபெறுகின்றீர்? நன்நெறியென்று இல்லாவிடின் என்ன?
ஓடியொழிந்த கடவுளைவிடுங்கள் சாகுமெனக்கு சாகாவரம்தர யாருள்ளீர்?.
தேடியலைந்து தேர்ந்த விடயத்தில் பதில்சொல்வீர்?.

இவைக்கு பதில்தராது வாய்பேசும் வீணனைவிட்டு
சுவைக்க தகுந்த நல்லுணவை உண்ணப்போங்கள்..
அவைக்கு பேசுமரசியல் தானன்றி அடுத்தொன்றில்லை..
இவை்கு மீறியும் இம்சிக்கும் நாத்திகனை சாத்திடுவேன்...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post