வேலவா உன் வேலதும் விரைந்து வந்து காக்கனும்
வீழ்ந்திடும் மனிதர் தம்மின் முன்பு வந்து காக்கனும்
கால நேர தூரமெல்லாம் தாண்டி வந்து காக்கனும்
ஞாலம் எங்கும் நம்மை சேர கந்தன் நீயும் வந்திடு.. 1
மூச்சினில் நுழைந்து தாக்கும் மூர்க்கம் தன்னை வீழ்த்தனும்
வீசும் காற்றும் நஞ்சுமாக சுத்தம் நீயும் செய்யனும்.
ஈரல் ஊறி நின்ற கிருமி நாசமாகிப் போகனும்
வீர தீர வேலவா மாமருந்தை தந்திடு. 2
பிராண வாயு சேர்ந்திடாமல் நோயும் தீமை செய்திடும்
சுவாச காற்றை மாற்றி நீயும் நோயை கூறு போடனும்.
அஞ்சி அஞ்சி வாழும் மாந்தர் அச்சம் தன்னை தீர்க்கனும்
ஆதிநாதன் தந்த ஞான வேலவா நீ வந்திடு.. 3
வேண்டி வேண்டி கேட்கும் எந்தன் வேண்டுதல்தான் தீரனும்
ஓடி ஓடி ஔியுமிந்த காலமின்றே மாறனும்
காற்றில் எங்கும் பரவுமிந்த கிருமி நாசாமாகனும்
நெற்றிப் பொட்டில் வந்த செந்தில் விரைந்து நீயும் வந்திடு..4
ஊடரங்கு நாட்கள் எல்லாம் இன்றே முடிந்து போகனும்
ஊரில் நல்ல வாழ்வும் கூட , கூட நீயும் சேரனும்
நோயும் நோயில் பட்டுபோக நேசம் நீயும் சிந்தனும்
வேக வேகமாக நீயும் மயிலின் மீது வந்திடு..5
மூச்சில் மூச்சில் தொற்றிக்கொள்ளும் நஞ்சை வெற்றிக்கொள்ளனும்
கீச்சு கீச்சாய் கூறுபோட்டு அச்சம் தன்னை தீர்க்கனும்
பூச்சி போல மூச்சில் சேரும் மோசம் தன்னை நீக்கனும்
பேச்சின் ஓசை நிற்குமுன்னே வெற்றிவேளே வந்திடு. 6
வாழுமாறு பூமி தன்னை தூய்மை நீயும் செய்யனும்
வீழுமாறு செய்யும் நோயை வீழ்த்தி வெற்றி கொள்ளனும்
பாழும் நச்சை கொண்ட கிருமி மொத்தமாக தீரனும்
அஞ்சும் அஞ்சல் தீர்வதற்கே ஆறுமுகன் நீ வந்திடு . 7
சூழும் நஞ்சும் நீங்கியோட வேலன்தோன்றி காக்கனும்
வீறுகொண்டு வீழ்த்தும் கிருமி வெற்று பொருளாய் போகனும்
சூரன் தன்னை வென்றயெங்கள் தீரன்துணையாய் காக்கனும்
ஈறுவென பிளந்த வேலை எடுத்துநீயும் வந்திடு.. 8
إرسال تعليق