அவ்விரண்டு வினையும் அழிபட உதவும்
இவ்விரண்டு நிலையும் இலதென படுத்தும்
பவ்வமது களைந்து படையழித் தவனே
எவ்வமது குழைய எதிர்படு பவனே. 1
நவதுளை நினைந்தே நலிந்தது உயிரே
அவதிகள் படவே அதிசரம் கெடவே
பவனென வருவாய் படுதுயர் தடுப்பாய்
நவமரும் அருள நலந்தரு பவனே. 2
இகபர வாழ்வும் இனிதுடன் சேர
சுகபரி பாலா சுமைதணி வேலே
குகவடி வேலா குருபர வீரா
அகமுறை ஞான அருளமு தோனே. 3
அதிசய சரவணா அசபயுள் வருகுணா
சதிசெயும் அவுணரை சகதியில் புதைத்தவா
விதிசெயும் வினைகளை விலக்கிட வருபவா
நதிதரு பரஞ்சுடர் நுதிபட வருபவா. 4
சுனைபடு பழனியில் சுகந்தர நின்றவா
புனைதமிழ் பழங்குக புரங்குழை வேலவா
நினைமனத் திடையில் நிதம்விதைத் திட்டிட
வினைவர தயங்கிடும் வரைதலை கந்தனே. 5
முனைமுனிக் கறிவினை முதிர்பட அருள்பவா
சினைகருத் துணையென கதிர்படு முருகனே
எனைவுயர்த் திடும்படி எனக்குடன் வருபவா
வனைகரம் பிடித்தவா வடிவுடை குருபரா. 6
பதியொரு பாகமாய் பெறுமுமை
தருகுகன்
கதியென நாடியே கடம்பனை துணைவரும்
பதியென பற்றிட பதமருள் தருபவா
மதிமுக மொத்ததாய் முருகுடை முகையதே. 7
கசடுகள் நீங்கிட கசப்புகள் ஓய்ந்திட
அசபயுள் சேர்ந்திட அதிசரம் கூடிட
வசம்வரும் மந்திரம் விருத்திக ளாகிட
அசலென என்னுயிர் அசைத்திடும் கந்தனே. 8
உயிரென உறைபவ உடலென விரிபவ
எயிறுடை கணபதி எழுந்தருள் புரிந்திட
வெயிலுடை கதிரென வெளிபட துணைவரு
மயிலுடை முருகனே மணிமுடி முருகனே. 9
வயற்பொழில் திருத்தணி விரும்பிய திருக்கரன்
இயற்தமிழ் இசைத்தமிழ் இனிப்பென சுவைத்திடும்
கயற்கடல் களிப்புடன் கனிந்திட அமர்ந்தவன்
நயற்படு சுடர்தரு நயமுடை முருகனே. 10
إرسال تعليق