பாயிரவியல் - நீத்தார் பெருமை

நீத்தார் பெருமை

அறவழி நின்று ஆழ்ந்த ஞானம் வளர்த்து அதன்வழி உலகம் உயர நினைத்து தன் பற்றுகளான ஆசை பாசம் விருப்பம் ஆகியவை அனைத்தையும் விலக்கியவர்களையே நீத்தார் என்கிறது மறை . அவர்தம் பெருமையை நாமுணர பேராசான் இனி  விளக்குகிறார்..

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

உரை : ஒழுக்கத்தில் நிலையாக நின்று ஆசாபாசங்களை நீத்து பெருமைபட வேண்டுமென நூல்கள் துணிவாக கூறுகின்றன.

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

உரை : முற்றும் துறந்தவர்களின் பெருமையை உவமை என்னும் துணைகொண்டு சொல்லப்போனால். இறந்தவரை எண்ணிவைப்பது போல கணக்கில்லாதது.

23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

உரை : இம்மை என்னும் இப்பிற்பபையும் மறுமை என்னும் மறுபிறப்பையும் வகையாக தெரிந்து இங்கு அறம் என்னும் நிலை நின்றவரால் பெருமை  அடைந்தது உலகு.

24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

உரை : திண்மையால் ஐம்புலனையும் அடக்கி காப்பான் வரம் எனப்படும் முக்திக்கு விதையாவான்..

அதாவது ஐம்புலனை அடக்கி காப்பவன் மற்றவர்  அவனன வழியில் வளர்நது வீடுபெற வைக்கும் விதையாவான். என்கிறார் தெய்வப்புலவர்

25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

உரை : ஐம்புலனையும் அவித்தவனின் ஆற்றலுக்கு  விரிந்த வானத்தை ஆளும் இந்திரனே சிறந்த சான்று.

26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

உரை : பலராலும் செய்வதற்கு அரிய செயல்களை செய்பவரே பெரியவர் மற்றவர் சிறியவர்..
அதாவது ஐம்புலனை அடக்குதல் என்பது செயற்கரிய செயல் என்றும். அதை செய்பவனே உயர்ந்தவன் என்றும் விளக்குகிறார் தெய்வப்புலவர்.

27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

உரை: ருசி பார்வை தொடுதல் சப்தம் வாசனை என்கிற ஐந்தின் வகை தெரிவான் கையில் உலகம் அடங்கும். இதில் சுவையொளி ஊறோசை நாற்றம்   பற்றி அறிய எனது சைவசித்தாந்த அறிமுகத்தை நாடவும்.

28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

உரை : நிறைவான கருத்துக்களை கொண்ட சான்றோரின் பெருமை உலகில் மறைகளாக கருதப்படும் . மறைகளால் காட்டப் படும்.

29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

உரை : மெய்யறிவு பற்றின்மை துறவு அறம் போன்ற  நற்குணங்கள் என்கிற குன்றின் மீது ஏறி நின்றவருக்கும்  கோபம் ஒரு கணம் வந்தால் கூட குணத்தை காத்தல்  கடினம்.

30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

உரை : அந்தணர் எனப்படுபவர் எல்லா உயிருக்கும் நன்மை தரும் அருளை அறமாக கொள்பவர்.


2 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post