பாயிரவியல் - அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல்

பேராசான் நமக்கு அறத்தின் வலிமையையும் அதன் வழி நிற்பதால் வரும் நன்மையினையும் நாம் அறத்தின் வழி நிற்க வலியுறுத்துகிறார்..

31. சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

உரை : சிறப்பையும் செல்வத்தையும் தரும் அறத்தை விட உயிருக்கு உகந்தது  எது?  எதுவுமில்லை.

32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

உரை : அறத்தின் வழி நிற்பதை விட நன்மை இல்லை. அறவழி நில்லாமைமை விட தீயதும் இல்லை.

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

உரை : செய்கின்ற வகையில் எல்லா இடத்திலும் எக்காரணத்திலும் அறத்தை மட்டுமே செய்தல் வேண்டும்.

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.

உரை : ஒருவன் மனதினால் குற்றமற்று இருப்பான் என்றால் அவனுக்கு அனைத்து அறமும் பாத்திரத்துள் நீர் இருப்பது போல அடங்கி இருக்கும்..

35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

உரை : பொறாமை , ஆசை , கோபம் , சுடுசொல் என்ற நான்கினாலும் தவறு செய்யாமல் இருப்பதே அறம்..

36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

உரை : பிறிதொரு நாள் செய்வோம் என்று எண்ணாது இப்போதே அறம் செய்க  செய்தால் தாமழியும் போது அது அழியாமல் காக்கும்..

37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

உரை : அறத்தினால் வரும் பயன் எதுவென நூல்களை கொண்டு விளக்க வேண்டிய அவசியமில்லை.. பல்லக்கில் அமர்ந்து வருபவனையும் சுமந்து வருபவனையும் காண விளங்கும். என்கிறார் தெய்வப்புலவர்.. அதாவது அறத்தின் வழி நடந்தால் ஊரானது பல்லக்கில் தூக்கி செல்வது போல மதிக்கும் என்று குறிக்கப்படுகிறது..

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

உரை : அறம் செய்வதற்கு ஒருவன் விடுமுறைவிடாமல் செய்வான் என்றால் அவன் வாழும்வரை மறுபிறவிக்கான வழியை அதுவே அடைக்கும் கல்லாகும்..

39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

உரை : அறவழியில் வருவதே இன்பம் மற்றவழியில் வருவது புகழ்தராத துன்பமே..

40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

உரை: ஒருவன் விட்டு விலக வேண்டியது தீய செயல்களே. அவன் கடைபிடிக்க வேண்டியது அறமே..


1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post