சண்முக சட்கண்டம் - 4- கண்டப் பதிகம்

கண்டேன் கயிலை கொண்டான் கன்றையே
கொண்டேன் கலைகள் கொண்டே தொண்டாகிக்
கண்டேன் கதிரின் கோடிப் பொன்னைத்தான்
கண்டேன் குமரன் காமர்க் கோனையே. 1

கண்டேன் துணையை கண்டேக் கட்டியேக்
கொண்டேன் கரத்தால் காடர்க் வேந்தனை
கொண்டேன் குகனை கண்டே எண்மரரும்
தொண்டாய் தொடரும் திவ்யக் காட்சியே. 2

பண்டை நிகழ்ந்த பாவம் தீரவே
கண்டேன் கமலன் கொண்டே தோற்றுசெய்
அண்டத் திதனுள் அந்தம் சேரவே
கண்டேன் சரவணத் தெய்வத் தோற்றமே. 3

பிண்டம் பிறந்த புண்ணியம் பெற்றனன்
கண்கள் இருந்த காரணம் கண்டனன்
கொண்டப் பிறவிக் காரியம் கண்டனன்
புண்செய் உடலுள் போதம் கண்டனே. 4

பண்டு கழித்த பழைய காலத்து
தொண்டு பழித்து துளிர்த்த சாலத்தை
கண்டு மகிழ்ந்து கயமை ஓடிட
கண்டு பிழைத்த கதைகள் உண்மையே. 5

உண்டு கழித்த உணவெல்லாம் ஒன்றாக்கி
கொண்ட பலமாய் குமைந்தப்பின் நன்றாக்கி
எண்ம திசையர் எளியாராய் செய்தானை
கண்டு களித்த கதைகள் உண்மையே.. 6

அண்டு மடியராய் அமரர் இருந்திட
தொண்டு புரிவராய் திசையர் இருந்திட
கண்டு வருவருள் கடையில் இருந்துநான்
கண்ட நிலையெதை கவிதை புனைவதோ?. 7

பண்டு படித்தவர் பாவலர் தமரொடு
பண்டு தமிழினை பாடவே வழங்கினன்
செண்டு மலரென செவியில் மலர்ந்தகற்
கண்டு கவியினை கேட்டவன் மகிழ்ந்தனன் 8

உண்டு திளைத்தனர் உள்ளம் விதைத்தவர்
கண்டு களித்தனர் கண்ணில் வினைத்தவர்
வண்டு துளைத்தன வாறு விரும்பியே
உண்டு திளைத்தனர் உள்ளக் கவினயே 9

அண்டி நெருங்கிட அன்பு முதலதாம்
தொண்டில் விளங்கிட தூய மனமதாம்
விண்டு விரிந்திட வேண்டும் வினவுதாம்
கண்ட குணங்களை கொட்டி மொழிந்தனே.. 10


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post