இல்லறவியல் - ஈகை

நற்குணங்களின் வரிசையில் தானம் பற்றி விளக்குகிறார் பேராசான். 

221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

உரை: இல்லார்க்கு தருவதே தானம் மற்றவை ஒன்றை எதிர்பார்த்து செய்வது. 


222. நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று.

உரை : நல்லதே என எவர் சொன்னாலும் ஒன்றை பெறுவது தீயது.  சொர்க்கம் கிடைக்காது என்றாலும் தானம் நல்லது. 

223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

உரை : தன்னிடம் இல்லாத துயரத்தை சொல்லாது தானம் செய்தல் நல்ல குலத்தில் பிறந்தவனிடமே இருக்கிறது . 


224. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

உரை: யாசகம் கேட்டு வந்தவர் முகம் மலர தந்து அந்த மலர்ந்த முகத்தை யாசகம் கேட்டு நிற்பான் கொடுப்பவன். 


225. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.

உரை: வலிமையிலும் வலிமை தன் பசி பொறுத்தல். அதனிலும வலிமை பிறர்பசி தீர்த்தல் ..  ஒருநிமசம் ஔவையார பாத்த மாதிரியே இருக்கு ஆசானே. 



226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

உரை : வறுமையில் வாடுபவரை அழிக்கும் பசியை தீர்ப்பதால் ஒருவன் புண்ணியம் என்ற  செல்வங்களின் புதையலை பெறுகிறான்.. 


227. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

உரை: பலருடன் பகிர்ந்து உண்ண பழகியவனை பசி தொடுவது கடினம். 


228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

உரை: தன் செல்வங்களை சேர்த்து வைத்து இழந்து போகும் கல்மனத்தார் தான். பிறர்க்கு தருவதால் வரும் இன்பத்தை ஏன் தான் அறிவதில்லையோ?. 


எனக்கு பிடிச்ச குறள். வள்ளுவரை கவிஞனாக சாமானியனாக நான் கொஞ்சும் குறள். கொடுக்கும் இன்பம் அடையத் தெரியலயேடா ன்னு கேட்கும் மகாரசிகன். பேராசான்..



230. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.

உரை:  சாவை விட கொடியதில்லை தான் ஆனால் தானம் செய்ய முடியாத போது சாவது கூட இனியதே. 



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم