இயக்கம் - சித்த விஞ்ஞானம்.

பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சமதள இயக்கம் மட்டும் தான் மேல் கீழ் கிடையாது..

அதாவது முன் பின் வலது இடது. என்ற நாற்புற திசையில் தான் உலக உயிரினங்களில் தாவரங்கள் தவிர அனைத்தும் இயங்கும் .

அப்படியானால் பறவைகள் என்ற கேள்வி எழும். அவை பயண மார்க்கம் மட்டும் தான் பறப்பது .மற்றபடி வாழ்தல் எல்லாம் இந்த நாற்புறத்தில் தான் .

தாவரங்கள் மரங்கள் முதலியன கீழிருந்து மேல்வளர்பவை. அவைகளுக்கு நகரும் செயல் இல்லை..

ஆதலால் வாழ்தல் என்றால் அசைதல் என்ற பொருளாகிறது. அசைதலால் செயல் நடைபெறுகிறது... செயல்களால் பிணைக்கப்பட்டு இயக்கம் நடைபெறுகிறது..

மேலே சொன்னது போல் உயிர்களின் இயக்கம் வலம் இடம் என்கிற திசை தான்.. ஏனெனில் பிரபஞ்சத்தின் இயக்கமே வலது இடது தான்.. அதாவது சமதளப் பயணம் தான் அங்கு மேல் கீழ் கிடையாது.

இந்த இயக்கம் நடக்க ஒரு உந்துதலும் உழைத்தலும் தேவைபடுகிறது.. உதாரணமாக ஒரு வாகனம் இயங்க. அதன் இயந்திர உழைப்பும் அதன்மேல் ஓட்டுனரின் உந்துதலும் சேர்ந்து இயக்கத்தை நிகழ்த்துகிறது.. அதனால் இதனை நிகழ்த்து சக்திகள் என்கிறோம்.. இந்த இரு அசைவுகளும் ஒரு இயக்கத்தை செயல்படுத்துகிறது..
அதுபோல பிரபஞ்சத்தின் இயக்கத்தை உந்துவதும் .. நாதம் என்கிற ஓசை தான் என்கிறது சித்தஞானம்..

சைவ சித்தாந்தத்தின் சிவ தத்துவங்களில் முதலானது. நாத தத்துவம்

நேற்று இயக்கம் பற்றி சில விடயங்களோடு விட்டுவிட்டோம் இன்று தொடரலாம்..
முன்பே சொன்னது போல ஒரு இயக்கம் நடைபெற நகிழ்த்து சக்திகள் இரண்டு தேவை
1) உழைப்பு சக்தி

2) உந்து சக்தி..

இதுபோக வேறு எந்த விடயங்களாலும் ஒரு இயக்கத்தை இணைசெய்யவோ நடத்தவோ  முடியாது..

அப்படியானால் பிரபஞ்சம் அன்று தொடங்கி இன்றுவரை இயங்குவதற்கு இந்த இருசக்திகள் அவசியமல்லவா.. அவை   எங்கிருந்து வருகின்றன என்பது தான் சித்த விஞ்ஞான ரசகியம்..சில உதாரணங்களை சொல்லி ரகசியத்தை விளக்கம் பெறலாம்

ஒரு பம்பரம் சுழற்றப்படும் போது அது   சில நிமிடங்கள் சுழல்கிறது. இதில் உந்து சக்தி என்பது நாம் அதனை சுற்றியுள்ள கயிற்றை சொடுக்குவது.  உழைப்பு சக்தி என்பது கயிற்றின் இழுவிசை.

ஒரு வாகனம் ஓடுகிறது. அதில் உந்து சக்தி என்பது எரிபொருள் வெடிப்பு. உழைப்பு சக்தி என்பது அந்த இயந்திரத்தின் அசைவு சுழற்சி..

இப்படியாக பிரபஞ்சம் இயங்குவதற்கான உந்து  சக்தி என்பது நாதம் அல்லது ஓசை என்கிறது சித்த விஞ்ஞானம்..

அண்டமே பிண்டம் என்கிற சித்த விஞ்ஞானம். நம் இன்றைய அறிவியலின் முன் மனிதன் முன் நிற்கும் பரம்பொருள் போல சிறப்பானது.. பிரபஞ்சம் முழுதும் சரி உடல் முழுதும் சரி ஐம்பூத கலவைதான்..

ஆனால் அறிவியல் சொல்லும் ஈர்ப்புவிசை விலகல்விசை எல்லாம் அதன் துகளளவு புரிதல் என்பது திண்ணம்..
ஆம் அண்டம் ஒலியால் இயங்குகிறது..

தீயில் பிறந்து வந்தவையே முழு பிரபஞ்சமும். சூரியன் என்னும் நெருப்பு பந்தின் துண்டே பூமி. அதுபோல எல்லாம் நெருப்பின் பிறப்பே..
வெறும் சோதிப்பிழம்பாக இருந்த ஒன்றை தன்மை பட்டு தன்மை பட்டு நீறாகி நிலமாகி வாயுவாகி நீரான கதை பெரும் அதிசயம்..

நெருப்பின் எச்சம் மண்ணும் வாயுவும். வாயுவும் மண்ணும் கலந்ததே நீர்.

இப்படி விளைந்த ஐம்பூதங்களுக்கு இருவினைகள் உண்டு..

கூர்ந்து கவனிக்கவும் பெரும் அறிவினை விளையாட்டாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  இதனை போகன் முதல் ரமணர் வரை போதிக்கவே பலப்பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்..

நெருப்பு - ஔி , வெம்மை
நீர் - குளிர் , சுவை

காற்று - அசைவு , மணம்

ஆகாயம் - வெளித்துவம் , கொள்முகம்

நிலம் - பற்று , வளர்ச்சி

அறிவியல் இதில் ஒலி பயணிக்கும் கருவி என காற்றை தான் ஏற்கிறது.. எப்படி இவைகளுக்கு இருவினையோ. ஒலிக்கும் இருவினை உண்டு.

: ஒலி முதலில் அதிர்விலிருந்து உருவாகும். அதே போல ஒலி அலைகளாகி அதிர்வுகளையும் உருவாக்கும்..


ஆதலால் ஒலி அதிர்வுகளின் விசைப்படுத்தலில் தான் பிரபஞ்சம் இயங்குகிறது .  அந்த அதிர்வுகளையே சித்த விஞ்ஞானம் பரநடம் என்று கூறுகிறது. அதாவது எல்லாவற்றுக்கும் மூலமான ஒன்று அங்கு நடமாடுகிறது. அதன் அதிர்வில் இவைகள் எல்லாம் இயங்குகின்றன. என்று விளக்குகிறது..
இந்த புரிதல் தான் பரமனை நடராஜனாக உருவகப் படுத்தி வழிபட வைத்தது..



இந்த பெரும் அறிவியலை சித்த ஞானம் நாம் கேட்கும் ஒரு புல்லாங்குழலின் வழியாக தான் புரிந்து கொண்டது..


இதில் அந்த ஞானம் சொல்லும் அதிசயம் என்ன வென்றால் ஒலி ஔியாக மாறும் என்பதுதான்..
எனினும் இந்த அதிர்வுகளால் அண்டம் இயங்குவதை மேலே இருக்கும் காணொளி ஒரு உதாரண பூர்வமாக காட்சி செய்திருக்கும்..


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم