இல்லறவியல் - அழுக்காறாமை

பொறாமை கொள்ளாமை சமூகத்தின் தீதில்லா இயக்கத்திற்கும் இல்லறத்தின் ஆதார இயக்கத்திற்கும் அவசியமாவதை விளக்குகிறார் பேராசான்.


161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

உரை: மனதில் பொறாமை இல்லாத இயல்பினால் ஒருவன் தன் ஒழுக்கத்தை படிப்படியாக கொள்ளலாம்


162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

உரை: யார் மீதும் பொறாமை கொள்ளாத நிலை போல உயர்ந்தபேறு தருவது ஏதுமில்லை. 


163. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

உரை : அறவழி வரும் நன்மையை அறியாதவன்  தான் பிறர் மீது பொறாமை கொள்வான் 

164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

உரை : பொறாமையால் வரும் துன்பம் அறிந்த அறிவுடையோர் பொறாமையால் தீயவை செய்ய மாட்டார் .



165. அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

உரை:   பொறாமை இருக்கும் போது பகைவர் என ஒருவர் தனியே தேவையில்லை 


166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்.

உரை: பிறர்  கொடுப்பதை கண்டு  பொறாமை கொள்வான் உறவுகள் உண்பதுவும் உடுப்பதுவும் இல்லாமல் அழியும்.


167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

உரை: பிறரை கண்டு பொறாமை கொள்பவள் இல்லத்தில் திருமகளாகிய செல்வம் கூட மூதேவியை காட்டி விடும். 


168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

உரை : பொறாமை என்கிற பாவி ஒருவனை குறுக்கு வழி எனக்காட்டி தீய வழியில் தள்ளி அவன் செல்வத்தை   அழித்துவிடும். 


169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

உரை: பொறாமை கொண்டவனின் முன்னேற்றமும் . குறையில்லா நல்லவன் கேடும் எப்போதும் நினைக்கப் படும். காரணம் அவையிரண்டும் நடவா அதிசயங்கள் நடந்தது என்பதால் . 



170. அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

உரை: பொறாமை இல்லாமல் அழிந்தாரும் இல்லை . பொறாமையால் வாழ்ந்தவரும் இல்லை. 

சினிமாக்கு எல்லாம் பல நூற்றாண்டுக்கு முன்னாடியே வள்ளுவர் பஞ்ச் டையலாக் எழுதிருக்காரு போல. 


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم