சமூகத்திலும் சரி இல்லறத்திலும் சரி நற்குணங்களை வகுத்து உரைக்கும் பேராசான் . பொறுமை உடையது பற்றிய சிறப்புகளை விளக்கம் செய்கிறார்..
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
உரை : தனக்கு துன்பம் செய்பவரையும் நன்மை கருதி தாங்கும் நிலம் போல தம்மை இகழ்ந்து பேசுபவர் கூறும் கருத்தை உணர்ந்து அவர்தம் இகழ்வை பொறுத்தல் சிறப்பு.
152. பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
உரை: பிறர் செய்த துன்பம் பொறுத்தல் விரும்ப தக்கது என்றாலும் அத்துன்பத்தை மறப்பது அதனைவிடவும் நன்று.
153. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
உரை: வறுமையலும் வறுமை விருந்தினனை உபசரிக்காதது . வலிமையிலும் வலிமை அறிவில்லா சிறியோர் (சில்ற பீசுகள்) தருந்துன்பம் பொறுப்பது. (வலிமை அப்டேட் வந்துருச்சி தான?.)
154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
உரை: நிறைவான பெருமையும் புகழும் நீங்காமல் இருக்க வேண்டுமானால் பொறுமை மிகுந்து பேண வேண்டும்.
155. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
உரை: பொறுமையின்றி துன்பம் தரும் சிறியோரை துன்புற செய்வாரை ஒரு பொருட்டாக உலகம் வைக்காது. ஆனால்
பொறுமையுடையவரை தங்கம் போல பாதுகாத்து வைக்கும் .
156. ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
உரை : துன்பத்திற்கு பதில் துன்பம் தந்தவர்க்கு ஒருநாள் தான் இன்பம். அத்துன்பம் பொறுக்கும் பொறுமை உடையவனுக்கு இறந்தும் துணைவரும் புகழ்.
157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
உரை: தகுதி அல்லாத செயல்களை பிறர் செய்யினும். அதனால் நோய் போல் நொந்தாலும் அறமற்றவை செய்யாமை சிறப்பு.
158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
உரை: ஆணவத்தால் தீமை செய்தவரை தான் தன் பொறுமை என்னும் தகுதியால் வென்று விடுவது பெரிதிலும் பெரியதாக கருதப்படும்.
159. துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
உரை: எல்லை மீறி ஒருவர் தீய சொற்களால் பேசப் பொறுமை காத்தவர் உலகம் மதிக்கும் துறவிகள் தூய்மை உடையவராவார்.
160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.
உரை: விரதம் இருக்கும் பெரியவர்கள் கூட பிறர்சொல்லும் சுடுசொல்லை கேட்டு பொறுமை கொண்டவருக்கு பின் வரிசை தான்.
إرسال تعليق