ஆகாய சூரியன் அடங்கி ஒதுங்கி ஓரமாய் ஓய்வெடுக்க சாய்கிற செவ்வான சாயங்காலம். தனது அலுவலகத்தில் இருந்து காரில் கிளம்பிய வாசுவிற்கு வழியில் ஒரு சிறிய விபத்து.
அதிலிருந்து விலகி எல்லாம் சரிசெய்துகொண்டு அடிபட்ட தனது காரை ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்துவிட்டு . ஒரு இளைப்பாறுதலுக்காக தெருவில் தனியாக நடந்து வந்தான்.
அவனை தெருவில் பார்த்த பலரும் அடடே வாசு என்ன நடந்துவர .அச்சச்சோ கையில காயம் பட்டுருக்கே எப்படி ஆச்சு என்று நலம் விசாரிக்கும் அளவு பிரபலமானவன்.
நடந்து கொண்டே வந்த வாசு தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டிற்குள் நுழைந்து ஹாலின் சோபாவில் தான் கொண்டு வந்த பெட்டியை போட்டுவிட்டு அமரப் போனான் எல்லாரும் கையில் பட்ட காயம் பற்றி கேட்டது நினைவுக்கு வர கைகளை கழுவிக்கொள்ள நேராக தனது அறைக்கு சென்றான்.
அங்கு அவன் பார்த்த காட்சி அவனது நுரையீரலையே கல்லாக்கி விட்டது சில நிமிடங்கள் அவனிடம் மூச்சுக்கூட இல்லை. திக் என்று அடைத்துக் கொண்டது போல இருந்தது. இதயக்கூட்டில் டம் டம் டம் என்று பயங்கரமாய் சத்தம் அது அவனது காதுகளுக்கே உணரும்படி இருந்தது .
அவனறையில் அவன் கட்டிலில் யாரோ ஒருவனுடன் தன்னுயிராய் நினைத்த மனைவி அறைகுறை என்று கூட சொல்ல முடியாத ஆடையில் இவரும் கட்டிக் கொண்டு இவன் வந்து நின்றது கூட தெரியாமல் சில நிமிடங்களாக அவரவர் இதழ்களை இன்னொருவர் வாயில் திணித்துக் கிடந்தனர்.
தான் ஆசையாய் காதலித்து கைபிடித்து கூடி கழித்த தருணங்கள் அவன் மனதில் வந்து வந்து கோபத்தை வெறியாக மாற்றிக்கொண்டிருந்தன. வெறியும் அதிகமாக அதிகமாக அவர்கள் மேற்கொண்டு தொடர்ந்தனர்.
அவள் முகத்தை பற்றியிருந்த அவனது கை இப்போது படிப்படியாக இடைக்கு இறங்கியது அவளது கைகளோ அவன் முதுகில் ஓவியமிட்டது. எத்தனையோ முறை தனக்கும் இவ்வாறு செய்திருக்கிறாள் இன்று இதை காணும் போது அருவெறுப்பில் முதுகிலெல்லாம் தீபற்றி எரிவது போல சுடுகிறது அவனுக்கு.
தன் வாழ்க்கையை ஔிமயமாக்க வந்தவள் தன் வீட்டில் தன் அறையில் இன்னொருவனுடன் என்று நினைக்க நினைக்க அவனது ரத்தம் உலையாய் கொதித்தது.
தன் ஆத்திரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கீழே வந்து சோபாவில் தொப்பென விழுந்தான். கண்ட காட்சி மீண்டும் மீண்டும் அவன் எண்ணத்தில் வந்து வந்து இம்சிக்க
கொல்ல வேண்டும் அவளை சித்ரவதை செய்து கொல்ல வேண்டும் என்று மனது மீண்டும் மீண்டும் கூவ. முடிவு செய்தான். அவளை கொன்றுவிடுவதென்று.
இனி என்ன செய்யலாம்?. இங்கேயே இருந்தால் அவர்கள் உசாராகி விடுவார்கள். முதலில் வெளியே செல்வோம் பின்னர் தாமதமாக வருவோம் அப்போது அவளை கொல்வோம் என்று தான் வந்து தடயமின்றி மீண்டும் வீட்டை பூட்டி விட்டு போய் விட்டான்.
(நிச்சயம் கொல்ல வேண்டும்)
إرسال تعليق