திருவானைக்காவல் பதிகம்

எம்பால் அருட்சொரிந்து எழிலாளை துணைக்கமர்த்தி
உம்பால் வினைக்கரந்து உலகோரை அனுதினமும்
வம்பால் பிணைத்தவுனை விடுவேனோ இனியொருநாள்
தம்பால் மனம்பதித்தேன் திருவானைக் கரசனுனை 1

மண்மேல் பிறவிகொண்டு மதியோடே பிழைபடவே
கண்மேல் இமையெனவே கதிசேர்ப்பாய் எனையினிதே
பெண்ணோர் பகுதியுடை பெரியோனே எனதிறைவா
திண்சேர் திசைகடந்தும் திருவானை யிருப்பவனே 2

சொல்லா பெரும்பொருளை சிலநேரம் மறந்திடினும்
கல்லா னெனக்கருதி கரமீவாய் சிவபுரனே
எல்லா பிறப்பிலுமே எனையாளும் உடையவனே
தில்லை அருட்பதனே திருவானை அருள்பவனே 3

அம்பை கொடுத்தவனே அழகாரூர் இழுத்தவனே
அம்பை தொடுப்பவனை அழறதீயில் எரித்தவனே
வம்பை தகர்த்திடுவாய் வணங்கேனோ உனைநிதமே
தும்பை அணிந்தவனே திருவானை அருட்சுடரே 4

வேராய் வினைவிளங்க வளர்வேதா வடவினையை
நீராய் வளர்த்தவனை நனிநீறாய் பொடிபடுத்தி
கூராய் மதியருளி குடிசெய்யோய் எனகினியோய்
தீராப் பிறப்பறுக்கும் திருவானை குடிமுதலே 5

மாய வினைவிதைத்து மதியோடே எனைபடைத்தாய்
தூயச் சுடர்மறைத்து துதியோனை அணைத்தவனே
நேய மலர்கொடுத்தே நிறைவான நிலைகொடுத்தே
தூயப் பதமருளும் திருவானை இருந்தனையே 6

என்னை இழுத்தவிட்டாய் எளியேனை அடக்கிவிட்டாய்
மின்னும் மதிசிகையோய் மனதெங்கும் நிறைந்துவிட்டாய்
இன்னும் விளைவதுண்டோ இனிதேதும் இனியுமுண்டோ
தென்பால் திகழ்பவனே திருவானை திருவினனே 7

வண்ண சிறகமைத்து விரிவானை அளந்திடுமோர்
எண்ணச் சிறகமைத்து எனைவென்ற கதையிதுவோ
பண்சேர் புகழ்தமிழிற் பிழையேதும் அறிந்திலனை
தண்சேர் கருணைதருந் திருவானை பெருமிறையே 8

பண்பாய் கவிதொடுத்து பலபாடல் புனைந்திடவே
நுண்மை கொடுத்தவனே நுதல்மீதே நிலவணிந்தோய்
பெண்மை ஒருபுறத்தோய் பனிநீரை சுமந்தவனே
திண்மை தனையருள்வாய் திருவானை சிவபரனே 9

நன்றி உரைப்பதுவோ நினைநானும் மறப்பதுவோ
கன்றை உணர்பசுவாய் கனிந்தென்னை உணர்ந்தவனே
பன்றிக் கரிமறைத்து பரலோகம் அருள்பவனே
தென்னா டுடையவனே திருவானை அறிவரணே.10


1 تعليقات

  1. திருவானைக்காவல் பதிகம் >>>>> Download Now

    >>>>> Download Full

    திருவானைக்காவல் பதிகம் >>>>> Download LINK

    >>>>> Download Now

    திருவானைக்காவல் பதிகம் >>>>> Download Full

    >>>>> Download LINK

    ردحذف

إرسال تعليق

Post a Comment

أحدث أقدم