எனக்கொருவள் வேண்டும்

எனக்கொருவள் வேண்டும்...
தணிக்கைகள் இல்லாமல் என்னோடு பேச..
குறளுக்கு பரிமேல் அழகர் உரை போல்
முகநூலில்ல முகமே நூலெனும் படி..
நானென்னும் கர்வம் உண்ணும் ராட்சசியாய்..

அகத்தியனின் தொல்காப்பியனாய். 
சிவனுக்கும் சக்தியாய்
ஒரு பிரபஞ்ச பிரம்மாண்டங்களாய்
துளி பனித்துளி அதிசயமாய்

பெருங்கடலின் பேரலையாய்
சிறுகுளத்தின் தாமரையாய்
மனவெளியின் பரம்பொருளாய்..
எனக்கொருவள் வேண்டும்..

என் தேடல்களை தேடுமொருவள்
என் தேவைகளை திருடுமொருவள்
என் இன்னல்களை கிள்ளும்கிழத்தி
என் இம்சைக்களின் உருவொருத்தி..

நான் பிறந்ததை கொடுமையை கொண்டாடும் ஒருத்தி..
நான் இறப்பை  இழிவாய் சொல்லா தொருத்தி..
நாம் என்றாகும் ஒரு தோழி ..

என்று வருகிறாளோ அன்று நிறைவுரும்
நின்றன் தோழமை என்றன் மனத்துறை
நற்றைத் தமிழே ..

அற்றைத் திங்கள் அவளுடன் வந்து
நற்றை நின்றன் பாதம் பணிவேன்
நின்னை எனக்கே தருகும் வரம்தா
அன்னை உனக்கே அவ்வுரிமை உண்டு..



إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم