அச்சரவணயிறை

தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன - தனதான..

அச்சிவன் மகவினை அச்சர வணயிறை அச்சிறு முருகனை - அடிசேர


சித்தரி னகமுறை சத்திய மலையமர் சித்தனி னுளமுறை - குருதாளை


பற்றிட பலமுறை கற்றிட பெருநிலை பற்றிட - உரிதான


உற்றவ ருளமிரு கொற்றனை குகவடி வுற்றனை - பணிவோடு


மெச்சிட தவமிரு அச்சிறு அறுமுக னக்கண முடன்வரு - திருவாகி

அத்தனை அடுவினை அத்தனை அடுசமர் அத்தனை - அறுவோனை


அற்றவை அவுணரை அச்சமர் அதனினில் துச்சமென் றழிமுதி - யதுயின்றி


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم