தரமற்றக் கவிதை ஒன்றை எழுதிகுறேன்
அதை என் கல்லறையில்
செதுக்கி விடுங்கள்
அதுவே என் கடைசிக் கவிதையும் கூட
நான் ஒரு வக்கிலாக் கவிஞனென்று
நானே அறிந்த ரகசியம்
ஊருக்குத் தெரியட்டும்
என் கடைசிக் கவிதை மூலம்
என் உவமைகள் முரண்களாய் போக
சாபம் பெற்றவன் நான்
என் கற்பனைகள்
இடுகாடுகளில் சிதைந்து போக
வரம் பெற்றவன்
என் சொற் குவியல் எல்லாம்
அகராதிகள் காரி உமிழ்ந்த
எழுத்துப் பிழைகள்
நான் எனக்கே
கவியாய் கர்வத்துடன் உறங்கச் செல்கிறேன்
என் கல்லறையின் காலடியில்
எச்சரிக்கைப் பலகையில்
இதை எழுதிவிட்டுப் போகிறேன்
நீங்கள்
கொடுத்து வைத்தவர்களாய்
செருக்குடனே வாழுங்கள்
إرسال تعليق