அரசியல் நிறங்களால் ஆனவை.
வர்ணங்கள் இங்கே இயல்பு.
தூரிகை ஏந்தியவன் எல்லாம் தலைவன்
தூய்மை என்கிறதே நடிப்பு.
நிறங்கள் சாதிகளால் நிரப்பபட்டவை
வேடிக்கை யாதெனில் இதன் பெயர் ஐன நாயகம்
ஓட்டிற்கு வாங்கியவர்கள்
நோட்டிற்கு விற்கப்படுகிறார்கள்.
ரோட்டுக்கு வந்துநின்றால்
ரோந்துப்படை பிளக்கிறார்கள்.
மாட்டுக்கு மதிப்புண்டு
ஆட்டுக்கும் மதிப்புண்டு
மனதிலல்ல கறிக்கடையில்.
மாநிலமே மாவட்ட மாகும்
நானிலமே நாதியற்று போகும்
மாநாடுகளில் நின்றுகிடப்பாய்
மாநாட்டை நீயே கெடுப்பாய்
பேராசை பூதத்திற்கு பூசைகள் செய்கிறாய்
ஓராசை தான்வந்து உனை தின்னுமே..
நாடாளுந் திறமையுள்ளோர் நம்மிடத்து இல்லையென
மேடையில் வாசிப்போம் மேதையை நேசிப்போம்.
சாக்கடை சாக்கடை எனவொதுங்க சாக்கடைதான் மிஞ்சுமடா
சாக்கடை புழுக்களுக்கும் எலிகளும் உற்பத்தி கூடமடா..
Post a Comment