யாது? சிவம்

யாதுவுயிர் யாதுமொழி யாதுமனம் யாதன்பு
யாதுசொல் யாதருள் யாதுவினை யாதுவிதி
யாதுபொருள் யாதுபக்தி யாதுதுன்பம் யாதின்பம்
யாதுபுலம் ஈசனே யானெனவே நீரிருப்பின்
யாதுணர்வு யாதுவழி யாதுயான் யாதெனது
போதுமய்யா நின்னுடை பொல்லாத மாயையே
சூதுயிது வல்லவோ என்வழிநீர் உம்மையே
பாதுறைத்து பாடுவது யானாவது யானிலாத
போதுநீராய் நின்னையும் பாடுவது என்னவிதம்
யாதுமுறை யாதுவிளை யாடலிது எம்பரனே
யாதும்நீ யானபின் னே

என்னுரைத்தேன் இன்பமேநான் என்னபுரிந் தேன்நிதம்
நின்னாடல் தனிலே நானெனது எத்துகளோ
என்றாயினும் என்வாயால் என்னுரைத்தேன் ஈசனேநான்
என்றொன்றி லாதவேளை என்வழியாய்
நின்பெருமை நீருரைத்தீர் நின்மொழி யாலே..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم