ரிலாக்ஸா ஒரு கட்டுரை எழுதலாம்னு கொஞ்ச நாளா நெனைச்சிட்டு இருந்தேன்..
அப்பதான் நம்ம வட்டத்துல பல பேரு TNPSC க்ரூப் தேர்வுகளுக்காக அப்ளை பண்ணிருந்தாங்க .. இப்ப தமிழ் சார்ந்து ஒரு பகுதி இணைச்சிருக்குறதால . ஏற்கனவே தேர்வுக்காக பயிற்சி வகுப்புல போய் மனப்பாடமா பதில் வெச்சிருந்தவங்க கொஞ்சம் திகைச்சு போய்ட்டாங்க..
என்னதான் அரசு பள்ளியில படிச்சாலும் தமிழ்வழியிலயே படிச்சாலும் நம்மள்ல பலபேருக்கு தமிழ் பெருசா இருந்ததில்ல அதுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . இப்போதைக்கு தமிழ்ல கேள்வின்னாலே நடுக்கம் வர அளவுல தான் இருக்கோம்..
கொஞ்சம் நெருங்குன வட்டத்துல சிலர் கேட்டுருந்தாங்க எப்படி படிக்கிறது தயார் பன்றதுன்னு ..
இப்ப இந்த ஓரிரு மாத இடைவெளிக்குள்ள மொத்த தமிழையும் இல்ல மத்த பாடத்தையும் முழுசா படிச்சு முடிக்க முடியுமாங்கிறது? கண்டிப்பா பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு கஸ்டம் தான் அதுலயும் 30 - 40 வயசுல எல்லாம் முயற்சி பன்றவங்களுக்கு இன்னும் சிரமம் தான் ..
உதாரணமா 6-10 ம் வகுப்புல வர அறிவியல் பாடத்தையே இந்த காலத்துக்குள்ள சிறப்பா படிச்சிட முடியாது. ங்கிற நிலையில பலர் இருக்காங்க.
அவங்களுக்கு ஒருசில உத்திகள் தான் சொல்ல போறேன் . இது நேரடியா இத படிங்க அத படிங்கன்னு இருக்காது .. பாடதிட்டமே கையில குடுத்துருப்பாங்க அதனால அதையே மறுபடி சொல்றதுல அர்த்தமில்ல இது தேர்வுக்காக படிக்கிறதும் குறுகிய காலத்துல படிக்கிறதும் பற்றிய விசயம்.
நமக்கு படிக்கும் முறைகள் பத்தி பெரும்பாலும் தெரியாது. பள்ளிக்கூடத்துல சொல்லித் தந்த இரண்டு வழிகள் தான் தெரிஞ்சிருக்கும் . ஒன்னு முழு பாடத்தையும் படிப்பது . இன்னொன்னு முக்கியமான கேள்விகளை மட்டும் படிப்பது.
ஆனா அத விட பல வழிகள் இருக்கு..
தொடர்பு முறை கல்வி
விளக்க முறை கல்வி
குறிப்பு முறை கல்வி
காட்சி முறை கல்வி
கலந்தாய்வு முறை கல்வி
இப்படி இன்னும் நிறைய இருக்கு . நமக்கு இப்ப இந்த 5 வகைகள பத்தி மட்டும் பாத்தா போதும் .
தொடர்புமுறை கல்வி. - இது எப்படின்னு பாத்தா ஒரு தலைப்பு எடுத்துக்கனும் அதுல தொடங்கி அதோட தொடர்பு பட்ட செய்திகளை அல்லது விவரங்களை படிப்பது .. இதனால சில மணிநேரங்கள்ல ஒரு பாடத்தின் ஒரு பாதியை முடிக்கலாம்..
உதாரணமா இந்திய விடுதலை ங்கிற தலைப்ப எடுத்துக்கிட்டா . அதுலயிருந்து ஒத்துழையாமை இயக்கம் , உப்பு சத்தியாகிரகம் , சுதந்திர போரட்ட வீரர்கள் அவர்களது வரலாறுகள்னு ஒரு சில மணி நேரங்கள்ல முடிச்சிடலாம் ..
விளக்கமுறை கல்வி - இது இன்னும் சுருக்கம் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதன் உட்பிரிவுகளையும் அதன் சிறுவிளக்கங்களையும் மட்டும் படித்துவிடுவது. இது கொஞ்சம் நேரம் அதிகமாக பிடிக்கும் எனினும் ஆழமாக உதவும்
உதாரணமாக இயற்பியல் துறையில் ஒரு சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு அதன் சிறிய விளக்கத்தை மட்டும் படித்துக் கொள்வது..
அதாவது கெப்லர் விதி என்று எடுத்தால் . அதை கண்டுபிடித்தவர் , கண்டுபிடித்த வருடம் , விதியின் சாராம்சம் என்று படித்துவிடலாம் .
குறிப்பு முறை கல்வி - இது படிப்பதற்கு ஒரு தயாரிப்பு செய்ய வேண்டும் கொடுக்கப் பட்டுள்ள பாடத்திட்டத்தை நன்கு பிரித்து சிறுசிறு குறிப்புகளாக மாற்றுவது. தயாரிக்க கொஞ்சம் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டாலும் படிப்பதற்கு எளிதாக முடியும் ஓரிரு நாளில் இரண்டு மூன்று பாடங்களையே முடிக்கலாம்.
உதாரணமாக , தமிழில் தரப்பட்டுள்ள பாடதிட்டத்தை எடுத்துக் கொள்வோம் . சிற்றிலக்கியங்கள் பற்றிய குறிப்புகளை தயார் செய்ய வேண்டும்
குற்றால குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயரால் பாடப்பட்டது - குற்றாலத்தின் அழகையும் குறவன் மற்றும் குறத்தியின் காதலையும் பாடுவது , கலிங்கத்து பரணி - ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது குலோத்துங்க சோழன் கலிங்கத்தை வென்றது பற்றிய நூல் போர் வீரமும் அழகியூலயும் சொல்கிறது. இவர் கம்பர் ஔவையின் சமகாலத்தவாக கருதப்படுகிறார் .. போல குறிப்புகள் தயாரித்து படிப்பது..
காட்சி முறை கல்வி - இது இன்னும் எளிது தற்போதைய வசதிகளில் யூட்யூப் முதலிய தளங்களில் இது போன்ற பாடங்கள் விளக்கமாக காணொளிகளாக காட்டப்படுகின்றன இதனால் எளிதாக கற்கலாம் நேர விரயம் மிகவும் குறைவு .
கலந்தாய்வு முறை கல்வி - இதற்கு ஒரு நண்பர் வட்டம் அல்லது தேர்வுக்கு தயார் செய்பவர்கள் குழுவாக இருக்க வேண்டும் அவரவர் ஒரு பகுதியை படித்து அதனை கலந்துபேசிக் கொள்வது. இது நெடிய உழைப்பை இலகுவாக்கும்.
இதுபோக , கோர்வைக் கற்றல் என்ற ஒன்றும் உள்ளது அது உடனடி தீர்வாக இல்லாமல் மிகுந்த உழைப்பை தருவது. இருந்தாலும் நன்கு நினைவில் பதியும் .. அதனால் அதையும் பற்றி சொல்கிறேன் .
உதாரணமாக திருக்குறள் என்று எடுத்துக் கொள்வோம் அதனை எளிதாக கற்க அதனை ஒரு கதையமைப்பாக மாற்ற வேண்டும். ரவிக்கு அவனது குரு கடவுளை வணங்குவது பற்றி சொல்லித்தந்தார் பின் ரவி தன் வீட்டிற்கு செல்ல அவரது தாத்தா அவனுக்கு முன்னோர்களை ஞானிகளை பற்றி சொன்னார் . என்பது போல கதையமைத்து கற்கலாம்.
இப்படி துரிதமாக கற்கும் முறைகளில் இன்னொன்று தமிழ் பாடல்களை கற்பது . அதற்கு இசையமைப்பு இருக்கிறது. அதன் அமைப்பை பிடித்துக் கொண்டால் பாடல் நன்றாக மனதில் பதியும் ..
பாவகை எல்லாம் குழப்பும் என்று நினைக்கிறார்கள் இல்லை அவை மிகவும் எளியவை.. ஏனெனில் தமிழே எளிவர்க்கான அமுதம் தான்..
إرسال تعليق