அளை - குறும்புதினம் - பகுதி 1

அட்சதை தூவ ஆகாயம் தந்த தூறல்கள் . கஞ்சிரமங்கலம் ஊர்முழுதும் பரவ அந்த முன்னிரவு நேரத்தில் இயற்கையின் தாய்மடியான கரிமாபுரம்  என்னும் மலை வாசத்தலத்தில் கந்தப்ப முதலியார் தோட்டத்து பங்களாவில் இருந்து சிலர் வந்தனர் .. 

மலைசிகரத்திலிருந்து அடிவார நகரத்துக்கு போகும் கடைசி பேருந்து கிளம்பப் போகும் 9 மணி ஆக இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கின்றன. 

கந்தப்ப முதலியாரின் மூன்றாம் தலைமுறை வாரிசான சேகரன் தான் இப்போது அந்த பங்களாவிற்கும் தோட்டத்திற்கும் அடிவார நகரத்தில் இருக்கும் திரையரங்கிற்கும் கார் பழுதுபார்க்கும் கடைக்கும் ஒரே முதலாளி, அவனுக்கு ஒரு சகோதரன் மூர்த்தி இருக்கிறான் . அப்பா கடைசிகாலத்தில் உயில்படி சொத்தை எல்லாம் அண்ணன் சேகரனுக்கு எழுதிவிட்ட கோபத்தில் விட்டுப்போனவன் தான் 15 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை . மூர்த்திக்கு பக்கத்து ஊரில் ஒரு தோட்டமும் மளிகைக்கடையும் எழுதி வைத்திருந்தார் அப்பா மணியன்செல்வனார். 

இன்று தான் இந்த நாள் தான் தம்பி மூர்த்தி பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து வந்து பேசினான் . இதனால் இரண்டு குடும்பத்திலும் பெரும் மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியை கொண்டாடத் தான் இன்று மாலை அங்கொரு விழா நடந்தது அதற்காக வந்திருந்தவர்கள் தான் சித்தார்த் கரண் விஜய் சுரேஷ் சரண்யா விமலா அனிதா குகன் செல்வம் எல்லாம் .. 

இவர்கள் எல்லாம் பெரியவரான சேகரனின் திரையரங்கிலும் கார் பணிமனையிலும் வேலை செய்பவர்கள்..  சுரேஷும் சரண்யாவும் கல்யாணம் செய்து 4 வருடங்கள் ஆகின்றன.. கரண் விமலாக்கு 2 வருடங்கள் .. விஜய் அனிதாவும் இன்னும் காதலர்கள் தான் சித்தார்த்தும் குகனும் செல்வமும் தான் கார் பணிமனையில் வேலை செய்பவர்கள்..

அனைவரும் அந்த பேருந்தில் ஏறினர்..  அந்த பேருந்து இரண்டுபக்கமும் இரண்டு இரண்டு இருக்கைகளும் கடைசி இருக்கை மட்டும் வரிசையாக 6 ம் இருக்கும் வால்வோ பஸ்கள் போல முன்பக்கம் மட்டுமே வழி கொண்டது  சன்னல்கள் கிடையாது இவ்வகையில் அமைந்த பேருந்தில் சித்தார்த் குகன் செல்வம் மூவரும் முன் வரிசையில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தனர்.. சுரேஷும் சரண்யாவும் அதற்கு அடுத்த வரிசையில் வலதுபுறம் அமர்ந்திருந்தனர். கரணும் விமலாவும் நான்காம் வரிசையில் இடதுபுறம் அமர்ந்தார்கள்.  விஜயும் அனிதாவும் தனிமை வேண்டு 8ம் வரிசையில்  வலதுபுறம் அமர்ந்தார்கள் . 

அதுபோக பேருந்தில் ஓட்டுநர் நடத்துனர் . கடைசி வரிசையின் கடைசி ஓரம் இடதுபுறம் ஒரு மாற்றுத்திறனாளி முகம் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும்.  நடத்துனர் டிக்கட்டுகளை தந்து விட்டு சென்று ஓட்டுநர் பக்கம் தனக்கு ஒதுக்கிய ஒருநபர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். கடைசி பேருந்து என்றாலும் கூட அவ்வளவாக கூட்டம் இல்லை.. 


இந்த கரிமாபுரத்துக்கும் அடிவாரத்தில் உள்ள கஞ்சிரமங்கலத்துக்கும் சரியாக 15 கிலோ மீட்டர்கள் அவைமலைச்சரிவின் பாதைகள்  என்பதால் மிகவும் பொறுமையாக நிதானமாக தான் செல்லும் அதிலும் வெள்ளையர்கள் காலத்திலேயே இந்த மலைவாசத்தலம் பிரபலம் என்பதால் இந்த சாலையை மலையை குடைந்துக் கொண்டு குகை போல அமைத்து அதன் வழி வந்த சாலை ஒவ்வொரு திருப்பத்திற்கும் இதுபோல குகைக்குள் நுழைந்து வெளிவரும் இரவு நேரம் என்பதால் எதிரே அதிகமான வாகனங்கள் வராது ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம் . 

இப்போது பேருந்து கிளம்பியது . சேகரனிடம் வேலை செய்யும் இவர்கள் எல்லாரும்  ஒருவருக்கு ஒருவர் விழாவை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர்..

பேருந்து முதல் குகைக்குள் நுழைந்து சில நொடிகளிலே பெரிய சப்தம் ஏதோ பயங்கரமாக வெடித்தது போன்ற சப்தம் . பெண்கள் அலறினர் . ஆண்களும் பயந்தனர். அந்த அதிர்வில் பேருந்தில் பயணிகள் பக்கம் இருக்கும் விளக்குகள் செயலிழந்தன. 

குகைக்குள் ஆங்காங்கு மின் விளக்குகள் இருந்தும் அருகிலிருக்கும் நபர் தெரியுமளவு கூட வெளிச்சமில்லை. எதுவாயினும் இங்கிருந்து யோசிப்பதை விடுத்து குகையை விட்டு வெளியே சென்று நல்ல வெளிச்சத்தில் என்ன என்று பார்த்துக்கொள்ளலாம் பெரும்பாலும் டயர் தான் வெடித்திருக்கலாம் பேருந்து நேராக நிற்பதை பார்த்து ஏதும் சிக்கல் இல்லை என்ற முடிவில் ஓட்டுநர் நகர்த்த அதுதான் சரி என அனைவரும் ஏற்றுக்கொள்ள மேலும் பேருந்து நகர்ந்தது.. 

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم