கொற்றவை - படலம் 10

தெளிந்த வானம் போல மயக்கம் கலைந்து விடுதலை பெற்றான் நிரஞ்சன். அவனை உலுக்கிய படியிருந்த கார்த்திகேயன் மீது சூரிய கிரணங்கள் அந்த ஆதவனின் ஆசிகள் போல விழுந்தது.

காலை விடிந்ததும் நிரஞ்சன் வேலை தேடி கிளம்புவதாய் சொல்ல . கார்த்திகேயனோ. நிரஞ்சன் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு நீங்க பதில் சொல்லுங்க.

கேளுப்பா. தெரிஞ்சா சொல்றேன்.

இல்ல அப்பா உங்ககிட்ட அட்ரஸ குடுத்து தகவல் சொல்ல சொன்னாலும்  ஒருவாரம் இல்ல பத்துநாள் நியாபகம் இருக்கலாம் இவ்வளவு நாள் நீங்க அட்ரஸ எப்படி பத்திரமா வெச்சிருந்தீங்க ?. அதுவும் இந்த வியசம் டக்குனு நியாபகம் இருந்திருக்குன்னா ஏதோ ஒன்னு இடிக்கிதே?.

ஆமாம் உண்மைதான் தம்பி ஆனா உங்க அப்பாவோட அட்ரஸ நான் ஒரு வேலை கேட்கலாம்னு தான் வெச்சிருந்தேன். எனக்கு கனிமொழி விசயத்துல பெருசா ஆர்வமெல்லாம் இல்ல ஆனா முத்துசாமிக்கு ஒருமாதிரி ஆனவுடனே சொல்லனும்னு தோணுச்சு அதான்.

சரி என்று தன் கையில் இருந்த ஒரு கத்தியை விரித்து பிடித்து அதை நிரஞ்சன் கழுத்தில் வைத்து அழுத்தியபடி . அப்ப எல்லா உண்மையையும் சொல்லுங்க என்றான்.

பதறிப்போன நிரஞ்சன் சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது. உனக்கு என்ன தெரியனும்னு கேளு தெரிஞ்சா சொல்றேன்.

ஓ அப்ப சொல்ல மாட்டீங்க. என்று கேட்டபடியே கழுத்துபிடியை இறுக்கினான்.

இறுக்கம் தாளாத நிரஞ்சனும் என் தம்பி என்னையும் உங்க அம்மா மாதிரி  உயிருக்கு பயப்படுறவன்னு நெனைச்சியா. என்ற பதில் ஒருநிமிடம் கார்த்திகேயனுக்கு நடுக்கம் வந்தது.

சூரபத்மனை கூறுசெய்ததோர் வீரவேலனின் வீரபாகு போல் இந்த கார்த்திகேயனுக்கு நான் என வசனம் பேசிய நிரஞ்சன் போ கார்த்திகேயா . இங்கிருந்து எட்டு மைல் தூரம் வடக்கில் போ சாலையோரம் ராஜமரம் இருக்கும் அங்கு நாலாம்பிறை சாமி இருப்பார் போ.


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم