வசுமதியின் மாயாஜாலமா? . இல்லை வேறுசில இயல்பான தந்திரமா? என்றவன் எண்ணத்தில் பல கீறல் கேள்விகள். எண்ணம் என்பது ஒரு மெல்லிய சங்கிலித் தொடர்போல . அது சலனமில்லாமல் பயணிக்கும் வரை அனைவருக்கும் அந்த கனவுகளின் சுகம் பிடிக்கும். அந்த சங்கிலிகள் துண்டங்களாய் வெட்டுப்பட்டப் பின் மனோரதம் நிலையின்றி தடுமாற்றத்தில் ஓடும். அது உடலையே வெகுவாக பாதிக்கும் ஆற்றலுள்ளது..
யோசனையிலேயே. இறங்கி வந்தவனை இடைமறித்து தம்பி என்னப்பா என்னாச்சு ஒரு மாதிரியா இருக்க என்று கேட்டான் நிரஞ்சன். உண்மைதான் அந்த வீட்டின் முன் நிற்கும் போதெல்லாம் கார்த்திகேயன் உடம்பில் மின்சாரங்கள் பாய்ந்த உணர்வுதான் வந்தது. மூன்று ரவுண்ட் சரக்கடித்தவன் போல நிலையின்றி ஆடலானான்.. அவனை தாங்கிக் கொண்டு தன் வீட்டில் படுக்க வைத்துவிட்டு . நிரஞ்சன் வேலை தேடி செல்வதாகவும் வழியில் செக்கியூரிட்டி முத்துசாமியையும் பார்த்துவிட்டு செல்வதாக சொல்லிச் சென்றான்.. ஏதோ சிரமப்பட்டு எழுந்த கார்த்திக் தன் செல்போன் எண்ணைக் கொடுத்து எதாவது தெரிந்தால் போன் செய்யுங்கள் என்றான்.. அவனது குளறல் மொழியிலும் அதன் அர்த்தம் நிரஞ்சனுக்கு புரிந்தது குடிக்க தண்ணீர் தந்துவிட்டு கிளம்பினான்..
உடல் சோர்வினால் மிகுந்த தூக்கம் கொண்டான். ஓரிரு மணிகள் உறங்கியவன் எழுந்தான் சற்று தெளிந்தது போல் இருந்தான். பின் வெளியே வந்து படியருகில் நின்றவன் . படியின் கடையில் வசுமதி செல்வதை பார்த்தவன் அவளை மெல்ல பின்தொடர்ந்தான் ..
கீழே பார்க்கிங் இடத்திற்கு வந்து வராண்டாவில் நடந்தவளை அவளறியாதது போல பின்தொடர்ந்தான். வராண்டா தாண்டும் அவள் சற்றே நிற்க இவன் தூண்பின் மறைய இவனது செல் ரிங்கிட அந்தபக்கம் நிரஞ்சன் தான் தம்பி அவர் செக்கியூரிட்டி முத்துசாமி கண்திறந்துட்டார் நீ வந்தா கேட்டுப் பாக்கலாம். என்றவனை இதோ அரைமணி நேரம் வந்துடுறேன்.. என்றான். அந்த நிமிடம் வசுமதி நகர்வதை பார்த்தவன் மீண்டும் பின்தொடர.
வசுமதி நேராக தன் ப்ளாட்டுக்கு சென்றாள் இவனும் மறைந்து மறைந்து செல்ல . தன் கதவருகே நின்றவள் . விபூதா ஏன் மறைந்து மறைந்து வருகிறாய்? போ அந்த முத்துச்சாமியை முதலில் கேட்டுவிட்டு வா . சீக்கிரம் போ அவன் ஆயுசு முடியப்போவுது போ அதுக்குள்ள அவன கேட்டுட்டு வா விபூதா.. என்றவள் சொல்லக் கேட்டு கார்த்திகேயன் நடுநடுங்கிப் போனான்..
போ விபூதா போ . அவன் சாவும் முன் கேட்டுவிடு போ. என்று மீண்டும் சொன்னாள்.. அவனுக்கு எதுவும் புரியவில்லை ஆனால் முத்துசாமியை கேட்பது என்ற முடிவெடுத்து இங்கிருந்து ஓடினான்..
(தொடரும்)
إرسال تعليق