கொற்றவை - படலம் 7

வசுமதி சொன்னதை மீண்டும் மீண்டும் எண்ணத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தவன் எப்படியோ ஆட்டோ பிடித்து செக்குரிட்டி முத்துசாமி இருக்கும் மருத்துவமனைக்கு வந்துவிட்டிருந்தான்.

அவனுக்காக அங்கே நிரஞ்சனும் காத்திருந்தான்.. முத்துசாமியின் நிலைகண்ட அவரது குடும்பத்தினர் அழகையும் விசும்பலும் தோய நின்றிருந்தனர்.

மெள்ள முத்துசாமியை நெருங்கிட கார்த்திகேயன் அவரை உற்று நோக்கினான். கார்த்திகேயனை பற்றிய விவரங்களை நிரஞ்சன் சொல்லி முடிக்க. முத்துசாமியிடம் மூன்றே கேள்விகள் தான் கார்த்திகேயன் வைத்தான்..

எப்பவும் ராத்திரி ட்யூட்டில இருக்குற நீங்க இந்த விசயங்கள எல்லாம் அரசல் புரசலா தெரிஞ்ச நீங்க ஏன் அன்னிக்கி அந்த வீட்டுக்கு போகனும்?.

நிச்சயமா நீங்க கனிமொழிய பாத்தீங்களா?. இதுக்கு முன்னாடி கனிமொழிய நீங்க பாத்துருந்தா தான் உங்களால அது கனிமொழின்னு சொல்ல முடியும் அப்படி இருக்கும் போது எப்படி சொல்ல முடியுது?.

ஒருவேளை நீங்க கனிமொழிய தான் பாத்ததா இருந்தா இந்த நிலைமைக்கு ஆளாகுற அளவு அப்படி என்ன மாற்றம் அங்கயிருந்தது?  நீங்க சொன்ன விதத்த பாத்து நிரஞ்சனே மிரண்டு போய் தான் எங்களுக்கு சொல்லிருக்காரு.. என்று நகருக்கென கச்சிதமாய் கேள்விகளை அடுக்கிவிட்டான். ஒருவேளை வசுமதி சொன்னதை அவன்மனம் நம்பியிருக்குமோ?.

தன் குரலை செறுமிக்கொண்டு தண்ணீர் குடித்து சாய்ந்த முத்துசாமியை பார்த்தால் சிறிது நேரத்தில் இறந்து விடுபவராய் தோன்றவில்லை.

எனக்கு அந்த வீட்டுக்கு போறது புதுசில்ல ரெண்டுவருசத்துல பகல்ல பத்துதரவைக்கு மேல போயிருக்கேன் அதோட சாவியும் என்கிட்டதான் இருக்கு. பகல்லன்னா நான் பகல் ட்யூட்டி பாக்குற ஆள் இல்ல. அப்பப்ப அந்த வீட்ட கனிமொழிக்கு வாடைக்கு விட்டவங்க வந்தா திறந்து சுத்தமா வெச்சிக்க சொல்லுவாங்க அவங்களுக்கு இந்த சடங்குங்க எல்லாம் சுத்த மடத்தனம். எனக்கும் அப்படிதான் அதனால என்ன நம்பி விட்டாங்க.

இப்படியே நாளும் போய்கிட்டு இருந்துச்சி. என் ரூம்ல ஒரு லேண்டலைன் போன் இருக்கும் இந்த வீட்டுக்கு எல்லாத்துக்கும் அந்த போன் கனெக்சன் இருக்கும் அதுல பலர் ராத்திரி  எதாவது அவசர உதவி வேணும்னா போன் பண்ணுவாங்க. அப்படி ஒருநாள் ஒரு போன் வந்துது. அதுல ஒரு பொண்ணு அவள காப்பாத்த சொல்லி கெஞ்சி அழுதா. எந்த வீடுன்னு கேட்டா 27ம் நம்பர் வீடுன்னா நானும் ஏதோ தவறுதலா மாட்டிக்கிட்டா போலதுன்னு அந்த ராத்திரி நேரம் போய் பாத்தேன் ஆனா அங்க யாருமில்ல . மறுநாள் காலைலயும் பாத்தேன் யாருமில்ல. அதுக்கு அப்புறம் தினம் இதே மாதிரி போன் வர ஆரம்பிச்சது.  ஒருநாள் இந்த தொந்தரவ தாங்க முடியாம பகல்ல அந்த வீட்ட தொறந்து சுத்தமா தேடி அலசிட்டேன். ஆனா அந்த வீட்ல லேண்ட்லைன் போனே இல்ல.. இந்த மர்மம் எனக்கு பயமா இருந்துது. கொஞ்சநாள் பயந்தேன் ஒருநாள் என்னனு பாத்துடலாம்னு ஆவலா இருந்தேன் அன்னிக்கி வந்த போன் கெஞ்சல மாறா  என்ன கொன்னுடுவேன் னு சொன்னுச்சி. பயத்துல கேட்டுட்டு இருந்த எனக்கு யாரோ பின்னால இருந்து பாக்குறமாதிரி ஒரு உணர்வு பாத்தா. .பாத்தா..

அப்படியே மயங்கி விழுந்துட்டேன்.. ரெண்டு நாள் கழிச்சி ட்யூட்டிக்கு வந்தேன் அன்னிக்கும் அதே போன் அதனால தான் வீட்டுக்குள்ள போனேன்.  அங்க நான் பாத்தது சத்தியமா கனிமொழி தான். ஏன்னா பலமுறை அவள போட்டோல பாத்துருக்கேன். ஆனா அவ இருந்த கோலம்.. ஐயோ இப்ப நெனச்சாக்கூட தலையெல்லாம் சுத்துது அவ்வளவு கொடூரத்த என்வாழ்நாள்ல நான் பாத்ததில்ல.. ஆனா நிச்சயமா சொல்றேன் அது கனிமொழிதான்..  என்று மூச்சடைக்க சொன்னவர் மூச்சை விட்டார்..

மூச்சை முழுவதாய் விட்டே விட்டார்.. அந்த நொடிவரை காணாமல் போன ஒருத்தியை தேடி வந்ததாய் நினைத்தவனுக்கு இந்த மர்மங்களும் அதிசயங்களும் அவனை மிரட்சியில் ஆழ்த்தின..

தான் மருத்துவம் படிக்க ஆசை கொண்டிருந்தான் அதன் காரணத்தால் சில மருத்துவ குறிப்புகளை அறிந்தும் இருந்தான். ஆனால் மருத்துவம் மட்டுமல்ல சாமானியனாலும் இந்த நிமிடம் வரை முத்துசாமியின் இறப்பை ஏற்கவே முடியாது.  நன்றாக மிக நன்றாக கோர்வையாக பேசியவர் வசனம் முடிந்தவுடனே மறிப்பது என்பது அவனுக்குள் பல அதிர்வுகளை உண்டாக்கியது..

ஒருவேளை வசுமதி இதற்குத்தான் அவசரமாய் அனுப்பினாளோ?. இது எப்படி அவளுக்கு தெரிந்திருக்கும்?. விபூதா என்றால் என்ன?.. முத்துசாமி நிச்சயமாய் கனிமொழிதான் என்கிறார் ஆனால் அந்த கோலம் கொடூரம் என்றால் என்னவாகியிருக்கும்?. எல்லாம் மர்மங்களாக இருக்க மனோரதம் தடம் புரண்டுவிட்டது போல உணர்ந்தான் கார்த்திகேயன்.

(மர்மங்கள் விலகுமா? ... )


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم