கொற்றவை - படலம் 9

அன்றிரவு கார்த்திகேயன் அலுப்பில் நன்றாக தூங்கினான். ஆனால் அவன் வசுமதி பற்றி சொன்னதை கேட்டு நிரஞ்சனுக்குதான் தூக்கமே வரவில்லை..

திடீர்னு வந்தான் என்னன்னமோ நடக்குது இனி என்னவெல்லாம் நடக்கும்னு தெரியல என்று மனதுக்குள் புலம்பினான் .. பயந்தான் யோசித்தான் தூங்கியும் போனான்.

அப்படியே இரவு கழிந்து அதிகாலை துவங்கியது இன்னும் சூரியன் புலராத காலை . கார்த்திகேயனும் நிரஞ்சனுடன் மீண்டும் அந்த வீட்டின் முன்புறம் வரும் படிகளில் ஔிந்திருக்க . மீண்டு்ம் வந்தாள் அவள் கார்த்தியேன் நேற்றுவரை வசுமதி என்று நினைத்திருந்தவள். நிரஞ்சனுக்கு அவள் யாரென்றே தெரியவில்லை..

வழக்கம் போல பூசித்தாள் இன்றும் பூக்கள் இல்லை ஆனால் அந்த சிறுமாலை புதிய பூக்களுடன் மாட்டபட்டிருந்தது. நிரஞ்சனுக்கு தலையே சுற்றியது. கார்த்திகேயன் அவனை இழுத்துக் கொண்டு அவளை பின்தொடர. அவளும் நேராக மொட்டை மாடிக்கு சென்றாள் இவர்கள் சென்று மறைவாக ஔிந்துநின்று பார்க்க.

விபூதா ஏன் எப்போதும் ஔிந்து ஔிந்தே வருகிறாய் நிரஞ்சனையும் கோர்த்துக்கொண்டாயா?இங்கே வா. என்றாள் ..

அதிர்ச்சியும் வியப்பும் அச்சமும் முளைக்க மெல்ல அவளை நோக்கி நகர்ந்தான். நிரஞ்சனும் நெஞ்சு துடிப்பும் நுரையீரல் இடிப்பும்வெளியில் கேட்க பயந்தே வந்தான்.

என்ன விபூதா அந்த முத்துசாமி நான் சொன்ன மாதிரியே செத்துட்டானா?. என்றாள்

ம். ஆனா நீங்க யாரு? இங்க எதுக்கு பூசை பன்றீங்க? நேத்து நாங்க அந்த வீட்டுக்கு போனோம் அங்க வசுமதினு இருந்தது வேற யாரோ தான?. இப்படி ரகசியமா பூசிக்கிற அளவு அங்க என்ன தான் இருக்கு?. விபூதான்னா என்ன அர்த்தம்?. என்று பயத்தில் குளறல் மொழியில் கேள்விகளை கோர்த்து கொட்டினான். நிரஞ்சன் நடுங்கினான்.

இரு இரு விபூதா இப்படி உடனே எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிட்டா எப்படி?. நான் யாருன்னு தெரியிறது இருக்கட்டும் முதல்ல உனக்கு நீ யாருன்னு தெரியுமா?.

ஏன்? எங்கப்பா என்று தொடங்கி கார்த்திகேயன் எல்லாம் சொல்ல.

அடபாவி , எந்த அம்மாவாவது இதுக்கு ஒத்துபாங்களா? புருசனும் இல்ல இப்ப பிள்ளையையும் தெரிஞ்சே பலி குடுப்பாளா?.

பலியா நீங்க என்ன சொல்றீங்க?. எனக் கேட்டான்

அதுயில்ல எந்தம்மா தான் தன் பையன இப்படி இவ்வளவு கஸ்டத்துல தள்ளுவா?. அப்படியிருக்க உங்கம்மா அனுப்ப ஏதோ காரணம் இருக்கு நீ முதல்ல அத கண்டுபிடி. கனிமொழி கண்டுபிடிக்கிறதெல்லாம் அவ்வளவு சாதாரணமில்ல. என்றாள்

அதெல்லாம் விடுங்க முதல்ல நீங்க யாரு?.

நான் தான் நீ இல்ல நீ தான் நான் . அத இப்ப உனக்கு புரியவைக்க முடியாது. கவலப்படாத உனக்கு உதவி செய்ய தான் நானிருக்கேன் . நான் சொல்றபடி செய் நீ கனிமொழிய பாக்கலாம் . முதல்ல உங்கம்மாக்கு பின்னாடி இருக்குற ரகசியத்த கண்டுபிடி அப்ப தான் விபூதாங்கிறதுக்கான அர்த்தம் உனக்கு புரியும் நிரஞ்சனையும் கூட வெச்சிக்கோ?.. என்றாள் .

ஆனா எங்கம்மா அனுப்ப ஒரு நியாயமான காரணம் இருக்கு இது எங்கப்பாவின் கடைசி ஆசை ஆச்சே?. என்றான் கார்த்திகேயன்

ஹாஹா. நீ சின்ன பையனாவே இருக்கு விபூதா நான் நெனைச்சா இப்பவே உன்ன கனிமொழிகிட்ட கொண்டு போக முடியும் . ஆனா விதி உனக்கு வேற வேற வழிகள் வெச்சிருக்கு நீ அதுல நிறைய கத்துக்கப் போற . முதல்ல நீ நாலாம்பிறை சாமிய போய் பாரு உன் தேடல் அங்கயிருந்து தான் தொடங்கும். நான் உனக்கு வழிகாட்டுவேன்.

நாலாம்பிறை சாமியா அது யாரு? நான் எங்க போய் தேடுவேன்? .

விதி எப்பவுமே ஒரு தேர்ந்த விளையாட்டு கார்த்திகேயா அதோட ரகசியமே நடப்பதை அறிய முடியாதது தான். இனி தெரியாத இடத்துல இருக்க . நான் தெரியுற இடத்துல இருக்குறேன். இதோ இனி நீ போறது எல்லாம் கனிமொழிய தேடித்தான். அது அவளுக்கும் தெரியும். உனக்கு எல்லாம் தானா நடக்கும். நான் அந்த ரகசியத்த உடைக்க மாட்டேன் . இதோ அதே விதி தான் நிரஞ்சன உன்கூட சேர்த்துருக்கு இவனுக்கு தெரியும் அந்த நாலாம்பிறை சாமிய . அவன் அங்க கூட்டி போவான் போ .. கனிமொழி வந்துட்டா .நீ வந்துட்ட . இனி நீங்க சந்திக்கிறது தான் பாக்கி அதுக்கான காலம் மட்டும் தான் வரனும்.

நான் கிளம்புறேன் விபூதா . இனி நீ என்னை தேட வேண்டாம் தினம் காலை இதே நேரம் நான் எப்போதும் போல பூசிக்க வருவேன் நேரம் வரும்போது உன்னை சந்திக்கிறேன். என்றவள் உடல் சிறு சிறு பறவைகளாக பறந்து போனதை பார்த்து நிரஞ்சன் மயங்கியே விழுந்துவிட்டான்.

வந்தவள் யாரு? நாலாம்பிறை சாமி யாரு?  நிரஞ்சன் யாரு? அட நானே யாரு?. எல்லாம் மர்மமா இருக்கே என்று நினைத்து குழம்பிய கார்த்திகேயன் நிரஞ்சனை தண்ணீர் தெளித்து எழுப்பிய நேரம் சூரிய கிரணங்கள் வானத்திற்கு வெள்ளையடிக்க தொடங்கின.

(மர்மங்கள் விலகட்டும்)


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم