சும்மா இரு என்பதன் உண்மை விளக்கம் என்ன?

 

சும்மா இரு என்பதன் உண்மை விளக்கம் என்ன?


தாமதத்திற்கும் நீளத்திற்கும் மன்னிக்கவும்.. இதனை நான் ஆன்மீக கேள்வியாக எடுத்துக் கொள்கிறேன் . இந்த வார்த்தை சிலநாட்களாக என்னுள் மந்திரம் போல ஓடிக்கொண்டிருந்தது..

சும்மா இரு சாதாரண சொல்லா அது திருவண்ணாமலையில் வடக்கு கோபுரத்தில் தற்கொலை செய்ய துணிந்த அருணகிரிக்கு முருகன் சொன்ன மகா விசயமல்லவா அது.

சொல்லற சும்மா இரு என்பதே அவன் அருணகிரியாருக்கு அருளிய வேதம்.

சும்மா இருத்தலை பற்றி கொஞ்சம் பார்ப்போம் . நாம் இன்பப் படுவதும் துன்பப்படுவதும் ஏன் சித்தாந்தங்களின் படி வினைகள் கர்மங்கள் எல்லாமே நாம் செயலாற்றும் போதுதான் நடக்கிறது.. சித்தாந்தம் அதனை மூன்று வகையாக பிரிக்கிறது மனம் வாக்கு செயல் என்று பிரிக்கிறது.

ஒரு செயலை செய்வதால் நமக்கு இன்பமோ அல்லது துன்பமோ கிடைக்கும் அல்லவா . ஒருவேளை செயலே இல்லை என்றால்? . இரண்டும் இல்லை அல்லவா?. இது செயலின் வழியில் வருவது

பகவத் கீதையில் கண்ணன் கேட்பான் ஒருவேளை இந்த யுத்தத்தின் மீது ஆசை கொண்டு அர்ஜுனா நீ வென்றால் உன்னில் அகங்காரம் மிகுந்து அகிலத்தை வெல்ல நினைப்பாய் அதுவே தோல்வி அடைந்தால் பழிவாங்கும் உணர்வு மிகுந்து வெறி கொண்டு அலைவாய் ஒருவேளை யுத்தத்தின் மீது உன் மனம் ஆசை வைக்கவில்லை என்றால்? வெற்றியாவது தோல்வியாவது இது தான் மனதளவில் சும்மா இருப்பது..

இப்படி சும்மா இருப்பதால் ஒருவன் பாவங்களை செய்ய மாட்டான் பாவங்கள் செய்யாமையே புண்ணியமாகும். இதைத்தான் முருகன் சும்மா இரு என்றான்..

அதற்காக எல்லாரும் சும்மா இருக்க முடியாது செயலாற்றுவது அவசியம் . ஒருவேளை பூமி சுற்றாமல் சும்மா இருந்தால் என்னாவது. கடமைகளை செய்ய வேண்டும் அதே சமயம் மனமடங்கி இருக்க வேண்டும் .

ஒருவேளை நீங்கள் மிகுந்த குழப்பத்திலோ ? இயங்க முடியாத சூழ்நிலையிலோ . அழுத்தத்திலோ இருந்தால் சும்மா இருங்கள் . எல்லாம் சரியாகட்டும் என்று விட்டுவிடுங்கள்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post