பெரும்பாலான தலைவர்கள் தனக்கு பிடித்த திருக்குறள் என்று பகிர்கிறார்கள் அது போல யாராவது தனக்கு பிடிக்காத திருக்குறளைப் பற்றி சொல்லி இருக்கிறார்களா? என்ன குறள்? உங்களுக்கு பிடிக்காத திருக்குறள் ஏதாவது உண்டா? காரணத்துடன் சொல்ல முடியுமா?

 

பிடிக்காத குறளா?. உலகப் பொதுமறையில் பிடிக்காத ஒன்றா?. அவரவர் விருப்பதிற்கு ஏற்றவாறு இருக்கும் ஆனால் பொதுவெளியில் சொல்ல மாட்டார்கள் . பொதுவாகவே சொல்கிறேனே நாத்திகர்களுக்கு கடவுள் வாழ்த்து பிடிக்காது தான் அதற்காக அதை எப்படி வெளிப்படையாக சொல்வர்?.

மேலும் எப்போதும் குறள் எல்லாவற்றுக்கும் பொதுவான கருத்தாக சொல்கிறது சில சூழல்களில் அதன் அறிவுரையில் முரண்பட வேண்டிய சூழலும் வருகிறது..

செல்வத்துள் செல்வம் என்று அது சொல்லும் கேட்கும் திறனை கட்சிமேடைகளில் பிரச்சாரங்களில் கேட்கும் போது ஏற்கமுடிகிறதா?.

இதுபோக பரிமேல்அழகர் என்று ஒருவர் உரை இருக்கும் வரை திருக்குறள் எவருக்கும் பிடிக்காமல் போகாது.. அந்த மனுசன் வள்ளுவன் எழுதிய நிலையில் நின்று என்கிற கத்திமேல் நின்று உரை செய்திருக்கிறார்..

ஆனாலும் சமயங்களில் நானும் அவரது உரைக்கு மீறி குறளை அனுபவிக்கிறேன் விளக்கிக் கொள்கிறேன் . அது நூலின் சிறப்பாகவும் காலத்தின் வளர்ச்சியாகவும் பார்க்கிறேன் .

உதாரணமாக

இலனென்னனும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள

இதற்கு பரிமேல் அழகர் - யான் வறியவன் என்று வருபவனின் துன்பத்தை பிறரிடத்தில் சொல்லாமல் தருபவன் சிறந்த குலத்தின் வழி வந்தவன் என்றறிக என்கிறார்..

நானோ?.

இல்லை என்கிற துன்பம் சொல்வதற்கு முன்பே தருகிற குணம் குலத்திற்கே உயர்வாக இருக்கும் .. என்று நவீன காலத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்கிறேன் ..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post