இப்போதாவது சொல்லுங்கள்

இப்போதாவது சொல்லுங்கள் 

உங்கள் தூக்கமாத்திரையை கொறித்துத்தின்ற 

எலிகளை எந்ததிசையில் தூக்கிலிடலாம்?.


இப்போதாதவது சொல்லுங்கள் 

உங்களை ஆனந்தத்தின் தேனாற்றில் தள்ளிவிட்ட

பொத்தல் ஓடத்திற்கு எப்படி கைமாறு செய்யலாம்?. 


இப்போதாவது சொல்லுங்கள்

உங்கள் மரணத்தேதி அச்சிட்ட காகிதத்தை

நீங்கள் படிக்கும்முன் செல்லரித்த கரையானுக்கு நன்றி சொல்வதா?. சாபமிடுவதா?. 


இப்போதாவது சொல்லுங்கள்

நீங்கள் பீடுநடை போட்டுவந்த வீதிவழியில்

வழக்கி விழசெய்த வாழைப்பழத் தோலை எப்படி பழிவாங்கலாம்?.


இப்போதாவது சொல்லுங்கள்

உங்கள் காதல் முத்தங்களை வாங்கிக்கொண்டு

சப்தங்களை மட்டும் கொடுக்கும் கைபேசியை எந்த கடலில் வீசலாம்?.


இப்போதாவது சொல்லுங்கள் 

நீங்கள் அனுபவித்து இறந்தப்பின் எழும்பும் கல்லறையில் என்ன வரி எழுதலாம்?. 


இப்போதாவது சொல்லுங்கள் 

உங்கள் அல்ப சல்லாபங்களை எந்த மேடையில் விவாதிக்கலாம்?. 


இப்போதாவது சொல்லுங்கள்

வாழ்க்கைத் திரவம் வடிந்துகொண்டிருக்கிறது 

சீக்கிரம் சொல்லுங்கள்

சச்சரவுயின்றி உங்கள் தலைவிதிகள் மாற்றப்படும்.. 


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم