நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் சரியான முடிவு எது?. என்று சிந்திக்க தவறி உண்மையையும் பொய்மையையும் மாற்றி குழப்பிக் கொண்டு சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறோம்.
இன்றைய சூழலில் முனைவர் பட்டம் பெற்றவரும் சரி பாமரனும் சரி இப்படி சிக்கலுக்கு உள்ளாகிறார்கள் என்பது வருந்ததக்க செய்தி..
சிலர் கேட்கலாம் ஏன் எப்போதும் தோற்று அனு(பவி)த்த பின் தான் வெற்றியை அடைய முடியுமா என?. ஆம் அது அப்படித்தான் அமைகிறது காரணம் நாம் நமது ஆசையை எண்ணங்களாக மாற்றுகிறோம் எண்ணங்களை அப்படியே நடந்துவிட வேண்டும் என்று நம்புகிறோம் மாற்று சூழலை நாம் ஏற்கவே விரும்புவதில்லை.
உதாரணமாக மாணவன் ஒருவர் தான் தேர்வில் வெற்றி பெற ஆசை கொள்கிறான் அவன் எண்ணம் நடைபெறும் என்று நம்புகிறான் ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற எண்ணமே அவனிடம் எழவில்லை பின்னர் முடிவுகள் வந்ததும் மிகவும் வருந்துகிறான் ..
இப்படி தான் நாமும் துன்பப் படுகிறோம் . சரி இதிலிருந்து தப்புவது எப்படி என்றால் தர்க்க அறிவு வேண்டும் என்கிறது நூல்கள். தர்க்கம் என்பது பல்வேறு சாத்திய கூறுகளை கணித்து செயல்படும் அறிவு.. வாழ்வில் அனுபவங்கள் இல்லாமலும் வெற்றி பெற முடியும் தர்க்கவியலில் ஆராய்ந்து செயல்பட்டால்.
தமிழ் ஆக சிறந்த மொழி என்பதற்கு
இதுவும் ஒரு காரணம் பழங்காலத்தில் தமிழ் கற்க வேண்டுமெனில் எழுத்து சொல் அகராதி படித்து பின் தர்க்கம் படித்து பின்னர் கருவிநூல்கள் முடித்துதான் மூலநூல்களை அடைய வேண்டும்..
தர்க்கம் என்பது எளிதில் புரியாத விடயம் என்பர் ஒரு எளிய உதாரணம் போதும் நீங்கள் சுண்டிவிடும் ஒரு நாணயத்தின் சாத்தியக்கூறுகள் எதுவென்றும் அதன் துல்லியமும் தெரியுமானால் முடிந்தது..
இப்படி தர்க்க ரீதியாக விடயங்களை அணுக பத்து அளவுகள் உள்ளது என்கிறது தமிழ்
காட்சி அளவை
கருதல் அளவை
உரை அளவை
இன்மை அளவை
பொருட்பேறு அளவை
ஒப்பு அளவை
ஒழிபு அளவை
உண்மை அளவை
உலகுரை அளவை
இயல்பு அளவை
என்று பத்து அளவைகள் உள்ளன.
அப்படியே இதன் வடமொழி பெயர்களையும் தெரிந்து கொள்வோம் பிரமாணங்கள் பத்து..
பிரத்தியட்சப் பிரமாணம்
அனுமானப் பிரமாணம்
ஆகம பிரமாணம்
அபாவப் பிரமாணம்
அருத்தாபத்திப் பிரமாணம்
உபமான பிரமாணம்
பாரிசேடப் பிரமாணம்
சம்பவப் பிரமாணம்
ஐதீகப் பிரமாணம்
சுபாவப் பிரமாணம்
இவை சரிவர புரிந்து கொண்டு கையாள தெரிந்தால் வாழ்வில் ஆகச் சிறந்த ஞானம் வரம் ஆற்றல் வேறில்லை தான்.
நான் என்னளவில் மிக உயர்ந்த அறிவு நூலாக கருதும் சைவ சித்தாந்தம் நமக்கு முதன்முதலில் இதைதான் கற்றுத்தருகிறது.அந்த சித்தாந்த குருமார்கள் பாதம் தொட்டு பணிந்து என்றும் எங்கள் தென்னார் தலைவன் தட்சிணாமூர்த்தி அருளொடு தொடங்குகிறேன்.
إرسال تعليق