குறிப்புரை கொஞ்சம் சொல்லாவிட்டால் உங்கள் காலம் கூட மீதமாகும் . பழமை தொட்டு இந்த வழக்கம் இருப்பதால் உங்களுக்கு குறிப்புரை மட்டும் சொல்லிவிடுகிறேன். மொத்த தொடரையும் படித்து தனக்கு அவசியம் இல்லை என்று அறிவதற்கு பதில் இந்த கடாடுரையிலேயே முடித்து நகர்ந்துவிடலாம் . மேற்படி தொடர விரும்புபவர் தொடரலாம் .
காட்சிப் பிரமாணம் - பொறிகளால் அறியும் முதற்காட்சி .
கருதல் அளவை - தெரிந்த அல்லது அறிந்த காட்சியை தனது அனுபவத்தால் கருதி அறிவது
உரை அளவை - உலகம் மதிக்கும் அறநூல்கள் சொல்வதை பொருத்து அறிவது
இன்மை அளவை - இல்லாததை உணர்வது அல்லது அறிவது
பொருட்பேறு அளவை - இருப்பதை வைத்து அதன் குறிப்பையோ இல்லாததையோ அறிவது
ஒப்பு அளவை - ஒன்றை வைத்து அதற்கு இணையான மற்றொன்றை அறிவது
ஒழிபு அளவை - நிறைந்த பலவற்றுள் ஒன்றை பிரித்துக் காட்டி அறிவது
உண்மை அளவை - இயற்கையை வைத்து உண்மை அறிவது
உலகுரை அளவை - உலகோர் சொல்வது கொண்டு அறிவது
இயல்பு அளவை - குணம் முதலிய இயல்பினை கொண்டு அறிதல்
இவ்வாறு பத்து அளவைகள் உண்டு இதனை வாழ்வில் பொருத்தி பார்த்து செயல்பட முயன்றால் இவை இயன்றவரை துல்லியமாக சரியான பாதையையே காட்டும் . அதனால் நாம் பிழைபட வாய்ப்பில்லை
إرسال تعليق