ஆயிரமாயிரம் நினைவுகள் சூழ்ந்து ஆனந்தக் கடலில் அமிர்தமதில் மூழ்கி அபூர்வ முத்தெடுக்கும் மனமொரு முழுநிலைக் குரங்குதான்.. என்று நினைத்தபடி நான் பவித்ரன் தான் .
எனது அலுவலகத்தின் இருக்கையில் அமர்ந்திருக்க பழையகதைகளை பேசுவது தவிர எந்த வேலையும் இல்லாத சூன்ய வேளையில் என்னை கொஞ்சம் மெருகேற்றிக் கொள்ள சில பழைய முன்பே படித்த நூல்களை எடுத்து மீண்டும் புரட்டினேன் புதிய சிந்தனைகளாவது வரட்டும் என்று..
எப்போதும் போல போகும் வழியில் என்னை சந்தித்து போக நிலாவும் ஹரீஷும் வருவார்கள் இன்றோ நிலா மட்டும் வந்தாள்ஹரீஷ் என்னை காணக் கூட நேரமின்றி தவிக்கிறான் போலும். வந்தவள் சில உணவு பண்டங்கள் வாங்கிவந்தாள். அதற்குள் நிரஞ்சன் வந்துவிட அவன் மூன்று பங்குகளாய் பிரித்து வைத்தான். சமீபமாக உணவின் மீதே விருப்பமின்றி போகின்றது.
ஏதேதோ பேசிய நிலா . நிரஞ்சன் விலகிப் போனதும் நேரடியாக விசயத்திற்கு வந்தாள் .
அண்ணா ஒரு கேஸ் இருக்கு நீங்க எனக்கு ஒரு காரணம் மட்டும் சொல்லனும்.அதுவே போதும் குற்றம் என்னன்னு மட்டும் சொன்னா போதும் .
ம் டேபிள் கேஸா ? சொல்லு பாக்கலாம்.
என் பேசன்ட் ஒருத்தர் அண்ணா; 35 வயசிருக்கும் ரொம்ப ஹெல்த் கான்சியஸ் ஆன ஆள் ஆனா அவர் திடீர்னு இறந்துட்டார். மூணு நாள் முன்னாடிக் கூட பாத்தேன் நல்லாதான் இருந்தார் ஐ மீன் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வெரி நார்மல் . ஆனா எப்படி இறந்தார்னு தெரியல .
விதி எப்படியும் அமையும் நிலா அதுக்கு நீ சொல்ற விசயம் எல்லாம் ஒன்னுமில்ல
அண்ணா முழுசா கேளுங்க .
ம்.
நான் சந்தேகப் பட்டு ரொம்ப போராடி போஸ்ட் மார்டம் தயார் பண்ணேன் ரிப்போர்ட் வந்தது பாத்தா மாரடைப்பு தான் . ஆனா என் கணிப்புப் படி மாரடைப்பு வர வாய்ப்பேயில்ல அண்ணா . அதுதான் புரியல . எனக்கென்னமோ இது கொலையா இருக்கும்னு தோணுது ஏன்னா மனுசன் அவ்ளோ ஒர்த்.
சரி சொல்ற எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல டீடைல் குடு நிரஞ்சன்ட்ட விசாரிக்க சொல்றேன்.
அவர்கிட்ட ஏனற்கனவே குடுத்துப் பாத்துட்டேன் அவரும் மர்டர்னு தான் நினைக்குறாரு ஆனா சாட்சி தான் இல்ல..
இங்க தான இருந்தான் எங்க போனான்.? ஏன் அவரு நேரடியா கேட்க மாட்டாராமா?
பாஸ் வந்துட்டேன் இதோ பைல்ஸ் இவருதான் சொத்து நிறைய இருக்கு சிங்கிள் பார்டி அதே அளவு த்ரெட் இருக்கு சமீபத்துல தான் அப்பா தவறி இவர் நிர்வாகம் வந்துருக்கு எல்லாம் பாத்தேன் மர்டர்க்கு வாய்ப்பு இருக்கு ஆனா லீட் எதுவும் கிடைக்கல.
நல்லா விசாரிச்சியா.? கடைசியா அவர் ரெகுலாரிட்டி மருந்து னு எல்லாம்?
விசாரிச்சிட்டேன் பாஸ் .
எனக்கு தெரியாம அவர் ஒரு மாத்திரை சாப்ட மாட்டார். நான் தான் சொன்னேன்ல ரொம்ப ஹெல்த் கான்சியஸ்னு.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் படிச்சிட்டியா? நிரஞ்சா
பாத்துட்டேன் பாஸ் .எதுவும் சந்தேகமில்லை ஹார்ட் அட்டாக் தான்..
யாரு டாக்டர் ?
மார்த்தாண்டன் அண்ணா எனக்கு நல்லா தெரியும்.
மார்த்தாண்டமா? அந்தாளு ஒருகால் இல்லைங்கிறதக் கூட கவனிக்க மாட்டான்..
நிரஞ்சா அவர் கடைசி நாள் ஆக்டிவிட்டி என்ன? வித்யாசமா எதாவது?
எல்லாம் ரெகுலர்தான் அண்ணா ஆனா தினசரி தவிர அன்னைக்கு மட்டும் ஒரு காபி பார்ல காபி சாப்டுருக்கார்..
ஓ அங்க விசாரிச்சியா?
விசாரிச்சிட்டேன் பாஸ் ஜஸ்ட் காமனா போய்ருக்கார் எந்த மீடிங்கும் இல்ல.. சிசிடிவியும் பாத்தேன் அவர் மட்டும் தான் இருந்துருக்காரு..
ம். நீ சொல்றது எல்லாம் வெச்சிப்பாத்தா.. காபி கடைதான் ஸ்பாட் கப் இடம் மாறிருக்கா பாத்தியா?
ஆமாம் பாஸ் அதையும் விசாரிச்சேன் அவர் டேபிள் பக்கம் இன்னோரு டேபிள் அவர் டீ தான் ஆர்டர் பண்ணிருக்கார். ஆனா காபி வர மாத்தி தர சொல்ல அது அவருக்கு வந்துருக்கு.
ம் ஆனா டீ கேட்ட ஆளு தனியா இருந்த சுகர் கவரபிரிச்சு கலந்து வெச்சிருப்பாரே.?
ஆமாம் பாஸ் . அதுமாதிரி தான் பண்ணிருக்கார்..
ம். சூப்பர் .. நிலா நீ சொன்னது உண்மை தான் கொலை தான்.
எப்படி அண்ணா.?
இது ஒரு டீம் ஜார்ஜியா ல ஒரு கேஸ்ல மாட்டுனாங்க. ஒரு சின்ன கெமிஸ்ட்ரி தான். அக்ரைலின் ங்கிற ஒரு உப்பு சர்க்கரைய பொடிபண்ணா ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும்.. நம்ம உடம்பு எடைக்கேத்த அளவு குடுத்தா போதும்..
புரியல அண்ணா .
நம்ம எடையில ஒருகிலோவுக்கு ஒருமில்லிகிராம் கலந்தா போதும் நீ சொல்ற ஆள் 60-70 கிலோ இருப்பார்னா 70 மில்லிகிராம் கலந்தா போதும் அத அந்த சர்க்கரையில கலந்து அரைச்சுட்டா சர்க்கரை சுவை தான் இருக்கும் வாசனைக்கூட இருக்காது . அததான் கலந்து குடுத்துருக்காங்க. அத சாப்ட்டா நம்ம உடம்புக்குள்ளயே ரத்தம் உறைஞ்சிடும். அப்புறம் ரத்தஓட்டம் இல்லாம வழக்கம் போல் ஹார்ட் பைலியர் தான்..
நீ போலீஸ் கிட்ட அந்த சிசிடிவி காபி பாக்க சொல்லு அதுல நிச்சயம் வந்த காபில அவன் வேற சர்க்கரை கவர்தான் எடுத்து கலப்பான் யாருன்னு புடிச்சா புடிச்சிடலாம். என்ன உங்க நண்பர் மார்த்தாண்டனுக்கும் ஒரு சம்பவம் இருக்கும்.
அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கெல்வாங்க . இருங்க அண்ணா நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டு வரேன்..
إرسال تعليق